சந்திரலேகா கிங்ஸிலியுடன் ஓர் நேர்காணல்

SAM_1381 100வது பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மலையகத்திலிருந்து சந்திரலேகா கிங்ஸிலியுடனான நேர்காணல் உரையாடல்

நேர்காணல்:- றஞ்சி- சுவிஸ்

—-

 கர்ப்பிணி பெண்கள்,தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தால் நோயுற்ற பெண் இளைப்பாறுவதற்கோ, சாப்பிடுவதற்கோ, தேனீர் அருந்துவதற்கோ உரிய இடங்கள் இல்லாததால் எந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனரோ…

மனித உரிமை மறுப்புக்கு உள்ளாகி ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை மனதுக்குள்ளும் கொழுந்து கூடை சுமையை முதுகிலும் குடும்ப சுமையை தலையிலும் சுமந்தப்படி வாழ்கின்ற மலையக பெண்கள் பற்றி கூறுங்கள்?

 * இவ்வாறு வாழும் மலையக பெண்கள் என தாங்கள் குறிப்பிட்டு சொல்லிக் அவர்களைப் பற்றியே கூறுகின்றேன். உண்மையிலேயே மனித உரிமை மறுப்புக்குள்ளாகியவர்கள் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளை மனதிற்குள் சுமப்பவர்கள் தவிர்க்க முடியாதபடி கொழுந்துக்கூடையை முதுகிலும், குடும்பச்சுமைகளை தலையிலும் சுமந்து வாழ்பவர்களே! மனித உரிமைப்பற்றிப் பேசும் பொழுது ‘மனித உரிமைகள்’ இவைகள் தாம் என அறிந்துக் கொள்ளுமளவில் இவர்கள் அறிவாளிகளாய் இல்லை என்பது கவனத்துக்குரிய விடயமே. இன்றும் கூட இப்பெண்களுக்கு கொடுக்கப்படும் கல்வி சமூக ரீதியில் தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகின்றது.

 

‘பொட்டப்புள்ள படிச்சி என்ன கிழிக்கப்போவுது’ என்ற விடயம் ஆண் பெண் பேதமின்றி யாவரும் கூறும் விடயமே. ஆரம்ப காலத்திலிருந்தே கல்வி உரிமை அவர்களுக்கு பலராலும் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இன்றும் கூட கல்வியினை பாதியில் இடைநிறுத்தி வேலைக்கு அனுப்பப்படுவோரும், திருமணம் செய்து கொடுப்போரும் உள்ளனர். தனிப்பட்டு இவர்களுடன் உரையாடும் பொழுது இதனால் அமைந்த ஆழ்ந்த கவலைகளும் அவர்களிடத்தே வெளிப்படுகின்றது. மேலும் அடிப்படையில் பல உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. சமயம், உடை போன்ற விடயங்கள் கூட சுயமாக தெரிவு செய்யும் உரிமை அவர்களுக்கில்லை. தேயிலை வேலைக்கு செல்லும் பொழுது கூட ஓரு காலத்தில் காலணி அணிய விடாது தடுப்பதும், பாதுகாப்பாக உடையணிய மறுப்பதும் இன்றுவரை அவர்கள் சேலையணிந்து படங்கு (சாக்கு) இடையில் கட்டிய நிலையிலேயே வேலைக்கு செல்வதுண்டு. நீளக்காட்சட்டை,பூட்ஸ், தலைக்கு தொப்பி என்பனக்கூட அணிய முடியாத நிலையே காணப்படுகின்றது.

இது அவர்களது தொழில் சார்ந்த உரிமையாக இருக்கின்ற பொழுது அது ஏதோ ஓரு வகையில் வழங்கப்படாத நிலையில் மழையானாலும், வெயிலானாலும், பனி குளிரிலும் இவர்கள் சில்க் சாரி, ரெட்டு படங்கு என்பவற்றை அணிந்து தலைக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றியே தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்தால் அவர்கள் சிறு நீர் கழிப்பிடங்கள் இல்லை. மாதவிடாய் காலங்களில் கூட அவர்கள் காலை முதல் மாலை வரை ஒரே ஆடையுடன் இருக்கிறார்கள். இது அவர்களின் சுகாதாரத்துக்கு எத்தனைக் கேடான விடயம். மேலும் கர்ப்பிணி பெண்கள், நோயுற்ற பெண் இளைப்பாறுவதற்கோ, சாப்பிடுவதற்கோ, தேனீர் அருந்துவதற்கோ உரிய இடங்கள் இல்லாததால் எந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனரோ அங்கேயே அமர்ந்து சாப்பிடும் அவலநிலையும் கூட இம்மலையக மக்கள் அனுபவிக்கும் துன்பமாகும்;

இதனை எந்த நிர்வாக அமைப்போ, அரசியல் அமைப்புமே 200 ஆண்டு கால வாழ்க்கையில் அவர்களுக்கு செய்துக் கொடுக்க எண்ணியதுமில்லை. அரசியல்வாதிகள் கூட இவர்களின் இந்த அடிமைத்தன வாழ்வுக்கு துணைப்போகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களின் வேதனமென்பதும் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. ஆண் பெண் சம சம்பளம் என்பது பேசப்பட்டாலும் பெண்கள் கட்டாயமாக காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை தேயிலை மலையில் இருந்தே ஆக வேண்டும்;. அவர்கள் குறித்த நிறை எல்லையை (Target) எடுத்தப்பின்னும் கூட கட்டாயம் 4 மணிவரை மலையில் இருப்பது அவர்களின் உரிமை மறுப்பாகும். ஆண்கள் குறித்த கவ்வாத்து, குழிவெட்டுதல், துப்பரவு செய்தல் என்பவற்றில் வுயசபநவ முடிந்தவுடன் வீடு செல்லும் உரிமை இருக்கின்றது பெண்களுக்கில்லை.
 

malayakam 7

இன்றுவரை சில இடங்களில் நவீன ஆயுதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பாரம்பரிய கொழுந்துக்கூடை, படங்கு, கொங்காணி, ரெட்டு இவைகளே இவர்களுக்கு அடிமை அடையாளமாகவும், கூலியின் அடையாளமாகவும் கொடுமையின் அடையாளமாக காணப்படுவதினை அலட்டிக் கொள்வது இல்லை. ஏதோ தொழில் நடக்கின்றது அதனால் நாட்டுக்கு வருவாயும் கிடைக்கின்றது என்றதோடு எல்லாம் நின்றுவிடுகின்றது. தொழிற் சங்கங்கள் கூட இது பற்றி அலட்டிக் கொள்வது இல்லை.மேலும் இவர்களின் குடும்பச்சுமை என்றும் … இரண்டாம் சுமையாகி விடுகின்றது. மலையகத்தில் பொதுவாக மத்திய வர்க்க பெண்களை விட தொழிலாளி வர்க்கப் பெண்களில் குடும்பச்சுமை என்பது குறைவானதாகவே காணப்படுகின்றது. இவர்களின் குடும்பங்களில் ஆண் பெண் பேதங்கள் குடும்பச்சுமைகளை பாதிப்பதாக இல்லை. அநேக தீர்மானம் எடுப்பதில் கூட ஆண் பெண் சம வாய்ப்புகள் அளிக்கப்படுவதினை காண முடிகின்றது.

இவர்கள் தமக்கேற்ற வீட்டு சாமான்கள் வாங்குவதும் கூட கலந்தாலோசித்தே நிறைய இடங்களில் பெண்களே இதற்கு பொறுப்பாக காணப்படுவது எனது பார்வை. மத்திய தர வர்க்கப் பெண்களிடம் குறைவாகவே காணப்படுகின்றது. இங்கு ஆண் பெண் பேதம் என்பது வீட்டு வேலைகளிலிருந்து வெளி வேலை வரை பாதிக்கின்றது. இவர்களிடம் காணப்படும் நுபழ பிரச்சினை தோட்டத்துறை சார்ந்த பெண்கள் மத்தியில் காணப்படுவதில்லை.

ஆணாதிக்கமென்பது கூட மத்திய தர வர்க்கத்தினரை விட தொழிலாளர் வர்க்கப்பெண்களிடம் குறைவாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. தொழிலாளர் வர்க்கத்தினர் அதிகமாக ஆண் பெண் இருவரும் சேர்ந்த கூட்டுழைப்பை உணவு சமைப்பது, பிள்ளைகளை கவனிப்பது, விறகு தேடுவது, மேலதிக வேலைகளை பகிர்ந்து செய்வதினை காண முடிகின்றது. இது மத்திய தர வர்க்கத்தில் முற்றாகவே காணப்படுவதில்லை. ஆனாலும் இரண்டு நிலையிலும் இதற்கு மாறான விடயங்களும் உண்டு. இருந்தப்பொழுதிலும் இன்னும் இவர்கள் உரிமைகளை அனுபவிக்கவும், சமவாய்ப்புகளை பெறுவதும் இச்சமூகத்தின் தேவையாகவே காணப்படுகின்றது. இதற்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கின்றதெனலாம்.

  

உங்களது முதலாவது வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில் பங்கேற்கும் சந்திப்புகள் என்ற வகையில் உங்களுக்கு திருப்தி தந்த விடயங்கள், திருப்தி தராத விடயங்கள் என்று எவற்றை சொல்லுவீர்கள்

38-penkal2

  

* ன் வாழ்வின் முதலாவது வெளிநாட்டு பயணமென்பது 29வது பெண்கள் சந்திப்புக்கென கடந்த 2010 டிசம்பர் 9ம் திகதி கொழும்பிலிருந்து ஜெர்மன் பேர்லின் சென்ற பயணமென்பதால் முதலாவது புதிய அனுபவமாக காணப்பட்டது. பயண ஏற்பாட்டின் எல்லா கட்டங்களும் வாழ்வின் பிரயோசனமான படிப்படியாக மீளமைக்கப்பட்ட அனுபவங்களாகவே காணப்பட்டன. புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே நானாக வழிந்து எல்லா ஏற்பாடுகளையும் தனித்திருந்து மேற்கொள்ள விழைந்தேன். இலங்கையில் பெருந்தோட்டத்துறையை சேர்ந்த எனக்கு திடீரென கிடைத்த இந்த பயண வாய்ப்புகளும், அனுபவங்களும் வியப்பூட்டுபவையாகவே காணப்பட்டன. ஜேர்மன் தூதகரத்தின் நேர்முகப்பரீட்சைக்கு முகங்கொடுத்தது முதல…பேர்லின் விமான நிலையம் சென்றடைந்தது வரை புதுப்புது அனுபவங்கள் இந்த பயண வாய்ப்புகளும் அனுபவங்களும் என் ஆளுமைக்கூறுகளை புடம் போட்டதாகவும், ஆளுமையின் வெவ்வேறு பரிமாணத்தை எனக்குள் விதைத்திருப்பதனையும் உணர்கின்றேன்.
 

SAM_1381

 மலையகத்தின் பிரதான நகரமான ஹற்றன்     அண்டியுள்ள தொப்பித் தோட்டத்தில் பிறந்த எனது வாழ்வு லக்சபானை மஸ்கெலியாவில் சாதாரண குடும்பத்தில் மூத்த பிள்ளையாக தொடர்ந்தது. ஆசிரயராக, அதிபராக வாழ்ந்த எனது தந்தையாரின் கடுமையான உழைப்பும் எம்முடைய முயற்சியும் வாழ்கின்ற  வாழ்வின் குறைந்த பட்சமான நேர்மையுமே இத்தகைய பயண வாய்ப்புகளை எனக்களித்தது என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. இந்நேர்மையையும் முயற்சியையும் எனது தந்தையார் எனக்கு கற்றுக் கொடுத்த நிறைய சந்தர்ப்பங்கள்உண்டு. பிரதானமாக அவர் வாழ்ந்த வாழ்வின் தொழில் மீது அவர் காட்டிய நேசம் எமக்கு நிரந்தர உதாரணமாக இன்றுவரை காணப்படுகின்றது. பதவிகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் வரிசையில் காத்துக் கொண்டும் அரசியல்வாதிகளின் அடிவறுடிகளாகவும், நேர்மையீனங்களை ஆதரிப்பவர்களாகவும் வாழும் அநேகருக்கு மத்தியில் எனக்குக் கிடைத்த இந்த வெளிநாட்டு வாய்ப்பு மிகவும் பெறுமதி வாய்ந்த பயணமெனவே கருதுகின்றேன்.

இந்த வாய்ப்பை தந்த    பெண்கள்     சந்திப்பு குழுவினருக்கு எனது நன்றிகள். நான் மிகவும் ஏழ்மையான அடையாளங்களுடனே வாழ்வின் பல கட்டங்களை கடந்து வந்திருக்கின்றேன். என் பயணத்தை தொடங்கியதென சாதியத்தின் அடக்குமுறை வர்க்கத்தின் அடக்குமுறை தோட்டத்திலிருந்து வந்ததினால் ஒரு அடக்குமுறை பெண் என்பதால் ஏற்பட்ட அடக்குமுறைஃஇப்படியான அடக்குமுறைகள் எனக்குள் அடங்கிப் போகாமல் உந்துதல்களை அளிக்க அளிக்க என் முயற்சிகள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. எனவே வாழ்வில் உழைப்பினை மட்டுமே ஆதாரமாக கொண்ட என் போன்ற ஒரு சாதாரண பெண்ணுக்கு இந்தப் பயணம் மிகவும் உச்சமானதெனவே கருதுகின்றேன்.
 

கடந்த 11.12.2010 நான் பங்கேற்ற பெண்கள் சந்திப்பு பேர்லின் நகரில் நடந்தது. குறிப்பிட்ட சந்திப்பு என் வரையில்மிக மிக திருப்திகரமானதாக அமைந்தது. பிரான்ஸ், ஜேர்மனியிலுள்ளவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். காத்திரமாக கருத்துக்களை உயிரோட்டமாக பகிர்ந்துக்கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தினால் சுவிஸ் நாட்டின் தோழியர்கள் பங்குபற்ற முடியாது போனது. பெண் பற்றிய கருத்தோட்டங்களையும் பெண் விடுதலை பற்றியதான கூறுகளும் ஆராயப்பட்டன. இடத்துக்கிடம் பெண்களின் பிரச்சினைகள் வெவ்வேறு பரிமாணங்களில் இருப்பதனை கலந்துரையாடலின்போது உணர முடிந்தது. பெருந்தோட்ட பெண்கள் பற்றியும், எதிர்நோக்கும் சம்பள, சுகாதார, ஒடுக்குமுறைகள் சம்பந்தமான விடயங்கள் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டன. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அகதியாக வாழும் பெண்கள் பற்றியும் பேசப்பட்டது. பெண்கள் சார்ந்த கவிதைகள் பற்றி மிகுந்த உணர்வு ப+ர்வமாக பேசப்பட்டது. குறைந்தளவு தொகையினர் கலந்துக் கொண்டிருந்தும் மிகவும் பிரயோசனமான ஆழமான விடயங்கள் பற்றி நேர்த்தியாகவும் பேசப்பட்டன.
 

ஆயிரம் கணக்கில் கூட்டம் கூடி எதுவும் உணர்வு பூர்வமாய் சிந்தனைக்குட்படாமல் போவதைவிட குறைவான தொகையினரின் தரமான கருத்துக்கள் பெண்கள் சந்திப்பை அர்த்தப்படுத்தியது. இது ஒவ்வொருவரின் உள்ளத்தில் ‘பெண்’ பற்றிய தாக்கத்தினை ஏற்படுத்தியதாகவும், பெரும் விளைவினைக் கொண்டதாகவும் காணப்பட்டதெனலாம். பெண்கள் சம்பந்தமாக பரவலாகப் பேசப்படவும் அழுத்தமாக உலகுக்கு காட்டவும் அது பற்றிய சிந்தனைகளை விரிவாக்கவும் இந்த வாய்ப்பு பெண்களுக்கு அவசியமெனவே கருதுகின்றேன்.

  ்கள் சந்திப்பின் பின்னர் உங்கள் உணர்வுநிலை எவ்வாறு இருந்தது? எதில் பொருந்தி போனது? எதில் மாறுபாடாக இருந்தது?

* பெண்கள் சந்திப்பின் பின் பல்வேறுப்பட்ட அழுத்தமான உணர்வுகள் மனதுக்குள் இருந்த பொழுதும், எல்லாவற்றையுமல்ல கோடிட்ட சிலவற்றை இங்கு பகிர்ந்துக் கொள்கின்றேன். பெண்களுக்காக கொடுக்கப்படுகின்ற குரல்கள் ஏற்படுத்தும் அழுத்தம் பற்றிய பிரச்சினை எனக்குள் ஏற்பட்டது. பெண்கள் அடக்கப்படுவதில்லையே என்ற பரவலான கருத்து பலராலும் தூக்கி வீசப்பட்டுக்கொண்டிருப்பதனால் எந்தப் பிரச்சினை அவர்களுக்கும் வந்தாலும் அதனை மிக இலேசானதாகவும் தாக்கம் விளைவிக்காததையும் பார்க்கும் சமூக நோக்கு எல்லா இடத்திலேயும் காணப்படுவதினை உணர முடிகின்றது. பெண்கள் பற்றிய சிந்தனைகளும் கருத்தியல் மாற்றங்களையும் பற்றி பேசும் பொழுது அது பேசா மடந்தைக்கான பேசப்படக்கூடாத விடயமாகவும் கருதும் மனப்பாங்கு நம்மில் பலவாறு உண்டென்பதையும் உணர முடிகின்றது. கீழேத்தேயமானலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஒரே மாதிரியான சிந்திப்புகளையே காணமுடிகின்றது.


 Sam_1827

ஒரு விடயத்தினை என்னால் கூற முடிகின்றது. சமூக ரீதியில் பார்க்கும் பொழுது பெண்களை அடக்கி ஒடுக்கப்படும் விடயங்கள் ஏராளம் அவள் மீது சமூகத்தில் சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், கருத்துக்களும், அக்கறைகளும், அனுதாபங்களும் கூட அடக்குமுறைகளை செலுத்துகின்றது. மேலும் ஆண்கள் பெண்கள் மீது திணிக்கும் அடக்குமுறைகள் இன்று வரையும் தொடர்ந்ததாகவே காணப்படுகின்றன. ஆண்களை முனைப்பானவராகவும், தலைமைத்துவமுள்ளவராகவும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்ட உலகம் பெண்கள் தலைமைத்துவம் கொண்ட போது பல்வேறு நிலைகளில் கேள்விக் கேட்டு துளைக்கின்றன. நுணுகியும் பார்ப்பது வேடிக்கையான விமர்சனமாகவே தெரிகின்றது. பெண் தலைமைத்துவத்தின் கீழ் ஆண்கள் வேலை செய்வதினையும் செயற்படுவதினையும் மிகவும் சிக்கலான விடயமாகவும் தன்மானத்தை பாதிக்கும் விடயமாகவும், கேவலமான காரியம் போல எண்ணுவதும் ஆச்சரியமானதே. தொழில் சார்ந்த பதவிகள் என்பன பாலுக்குரியதாக கருதாமல் ஆளுக்குரியன என்பதனை உணர்ந்துக் கொள்ள அறிவு சார்ந்த கூர்மை விடயத்தில் தெளிவாக வேண்டியது அவசியம் என்பதனை உணர முடிந்தது. மேலேத்தேய நாடுகளை விட கீழைத்தேய நாடுகளில் அது குறிப்பாக பெருந்தோட்டப்பகுதி பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஆண்கள் அமர்த்தப்படுவதில்லை. அவ்வாறாக விரும்பாத உதாசீனப்படுத்தும் தன்மையை அவதானிக்க முடிந்தது. அது சார்ந்த உணர்வுகளை நான் மேலேத்தேயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மேலேத்தேய பெண்களின் பதவிகள் அவருக்கு கீழ் வேலை செய்வோரால் ஆதிக்க சூழ்நிலையால் அசைத்துப்பார்க்கப்படுவதாக எனக்கு தோன்றவில்லை. எனவே இவ்வாறான விடயங்களுக்காக மேலும் குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை ஆழமாக இப்பெண்கள் சந்திப்பில் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
 
ூக சீர்கேடுகள் குறிப்பாக மலையகம் குறித்து நீங்கள் கருதுவது என்ன?

 sam100சமூக சீர்கேடுகள் என்பது ஒவ்வொருவருக்கும் தாம் தாம் வாழும் சூழலை பொறுத்தே வரையறுத்துக் கொள்ள முடிகின்றது. மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்குள்ளும் கூட இது வேறு வேறானதாக காணப்படுவதினை என்னால் உணர முடிகின்றது. பெருந்தோட்ட சமூகம் என்ற ரீதியில் சமூக சீர்கேடுகளை அவதானிக்குமிடத்து குழந்தைகளையும் வயோதிபர்களையும் விடுத்து இளம் சந்ததியினரையே என்னால் கருத முடிகின்றது. இளம் சந்ததியினர் சமூகத்தின் திருப்புமுனையை கொண்டவர்களாகவும், இளம் வயதில் வாழ்வின் திருப்புமுனையை செயற்படுத்துபவராகவும் காணப்படுகின்றனர். எனவே இவ்வயதினரின் சீர்கேடுகள் முழு சமூகத்தையும் பாதித்து, நாட்டையும், இனத்தையும் பாதிப்பதாகவே அமைகின்றதெனலாம். இவ்வாறான சீர்கேட்டு வரிசையில் டிவி கலாசாரம் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பல்தரப்பட்ட சினிமாக்கள் அவர்களின் வாழ்வை முற்றாகவே அழித்து விடுவனவாகவே காணப்படுகின்றது. டிவி நிகழ்ச்சிகளிலே தொலைந்துப்போய் அங்கு காட்டப்படும் ஆளுமை எனும் மாயையில் அமிழ்ந்து காணமயிலாட கோலம்… இவர்கள் கோலமாகிவிடுகின்றது.
 

 கல்வியில் க.பொ.த. (சா.தஃஉ.த) இல் சித்தியடையாத பலர் தலைநகர நாகரிகம் காரணமாக கொழும்பு நோக்கி செல்வதும், திரும்பி வரும் பொழுது அலங்கார பொம்மைகளாகி வருவதினையும் காணமுடியும். இது இருபாலாருக்கும் பொருந்தும். இவர்கள் தமக்கு கிடைக்கும் அற்ப சொற்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னுமின்னும் அடிமைகளாய் வாழுவதே கொடுமையானது. அவர்கள் அநேகமாய் சிறு சிறு கடைகளிலும், காமன்ட்களிலும் மட்டுமே வேலைக்கு செல்பவர்களாகவும், எந்தவித EPF,ETF  பெறாதவர்களாகவும் இவர்கள் அடிமையாக்கப்படுகின்றனர்.
 

சமூக சீர்கேடுகளில் இன்னொன்று தான் ‘புது சாமியார்கள்’ வரவென்பது மலையகப் பகுதிகளில் அதிகமாக காணமுடியும். ஏற்கனவே பல்வேறுபட்ட கலாசார பண்பாட்டு அம்சங்களில் கண்டுண்டு எழும்ப முடியாது அடிமை வாழ்வும் மூட நம்பிக்கைகளும் நிறைந்த எம் வாழ்வில் புதிதாக முளைந்துள்ள சாமியார்கள் ஒரு கேடாகவே காணப்படுகின்றனர். ஆரம்ப காலம் தொட்டே எம் மக்களுக்கு ஒரு விடயம் உணர்த்தப்பட வேண்டுமென்ற ஒன்று கோடாங்கி அடித்து சாமியார் சொல்ல வேண்டும் அல்லது பொலிஸ் வந்து செய்ய வேண்டும். அந்தளவு அறிவு விருத்தியற்ற சமூகத்தில் இந்த புதிய சாமியார்கள் வரவு அந்த மக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் இன்னும் மூட நம்பிக்கையில் மூழ்கிச்செய்வதும் ஒரு வகை கொடுமைதான்
 மேலும் ‘அரசியல் கலாசாரம்’ என்பது மலையகத்தை பொருத்தளவில் இந்த மக்களை விடியச் செய்யாத அடிமை வாழ்வில் இன்றும் ஆழ்த்தும் கொடுமையான கலாசாரம்.

எத்தனை தான் கல்வி கற்று அறிவாளிகளாக்கிவிட்டாலும் பட்டங்கள் பதவிகளுக்காக அரசியல்வாதிகளை நத்திப்பிழைக்கும் பேக்கும் தூக்கும் நிலை பொதுவாகவே மலையக கல்விமான்களின் கண்களை குருடாக்கிப்போகும், மூளையை மழுங்கச் செய்யும் சித்து விளையாட்டாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்ட அரசியல்வாதிகளை தவறாக பேசுவது கூட தெய்வக்குற்றமாய் கருதும் பழுத்த அறிவாளிகளும் மலையக மக்களின் நிறையப் பேர் உள்ளனர். ஒரு சமூக விடிவுக்கு அறிவியல் சிந்தனைகள் அவசியமாகுமிடத்து இவைகள் அந்த சமூகத்தையே சாகடிக்கும் சாக்கடைகளாகவே காணப்படுகின்றனர்.
 

புது சாமியார்களின் பின் ஆண்களைவிட பெண்களே அதிகமாக செல்வதும் குறிப்பிட வேண்டும். வழிந்து புது சாமியார்களுக்கு செய்யப்படும் சாங்கியங்களும் சாஸ்திர முறைகளும் வணக்க முறைகளும் கூட புதிது புதிதாக புகுத்தப்படும் மூடப்பழக்கங்களாகும். சாமியார் படங்களில் தேனும், பாலும், சந்தனமும் குங்குமமும் இன்னும் கொட்டுகின்றது என்பதை நம்பி அந்த சந்தனத்துக்காக காத்திருக்கும் பெண்கள் அதிகமோ அதிகம். நாட்டில் நடக்கும் நாளாந்த செய்திகள் அறிய ஆவலே கொள்ளாத அநேக பெண்களும் எந்த சந்தியில் எந்த சாமியாரை தரிசிக்க வேண்டும் என்பதும் அத்துப்படி. இதில் படித்த ஆண் பெண்கள் குறிப்பாக ஆசிரிய ஆசிரியைகள் கூட அரோகரா சாமியார்கள் தான் என்றால் அது பொய்யில்லை. இது இந்த சமூகத்தை விழிப்படைய செய்யாமல், அறிவு ப+ர்வமாய் சிந்திக்க விடாது. மூட நம்பிக்கைகளிலும், கருத்து சார் விடயங்கள் அமுக்கி அவன் எல்லாமே சாமியார் தரும் பாவனையில் வாழ்ந்தது இன்னமும் கொடுமை.
 

இவ்வாறான சமூகத்தில் சீர்குழைக்கும் மலையக மக்கள் கருத்தியல்களாலே வென்றெடுக்க வேண்டும். பல்வேறுபட்ட ஆழ்ந்த வாசிப்புகள் அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. கற்றவர்கள் சுயமாக சிந்திப்பதனாலும் தன்மானத்துடன் வாழும் சமூகமாக ஆக்கி வைக்கும் பொழுது தன் மலையக சமூகம் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு தனியாக தம்மை அடையாளங்காட்டக்கூடிய சமூகமாக அடையாளப்படுத்தப்படும். தம் விடுதலையை தாமே சிந்திக்க அவர்களுக்கு வழிவிட்டு கொடுக்க வேண்டும். மலையக சமூகத்தில் கிட்டத்தட்ட 80மூ னோர் தோட்ட தொழிலாளர்களே. இவர்களை சாதாரணமாக கல்வி அறிவினை பெற்றுக் கொண்ட பாமர மக்களே இம்மக்களை வழி நடத்த எந்த அரசனும் தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் அப்படி இருந்தால் தான் அவர்களின் வாழ்வு ஜமீந்தார்களாக ஜொலிக்கும். ஆனால் அந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்து கல்வியில் தேறிய புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் எது விடுதலை என்பதை அவர்களுக்கு சரியாக அடையாளங்காட்ட வேண்டிய சமூக கடப்பாடு கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்களை சரியாக விடுவிக்க துணை போகாத எல்லா மலையக மக்களின் பிரதிநிதிகளும் சரித்திரப் புத்தகத்தில் திருடர்களாகவும் காட்டிக் கொடுப்பவர்களாகவுமே அடையாளப்படுத்தப் படுதல் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை.
 

  மிழ் தேசியத்துக்கும் மலையக மக்களின் தேசியத்துக்கும் இடையிலான முரண்கள் எவை எனக்கருதுகின்றீர்கள்?
 

* தமிழ் தேசியமென்பது முற்போக்கு சிந்தனைகளையும், பழமை உடைப்புகளையும்; கொண்டதாக இருக்குமானால் மட்டும் அதனை ஆதரிக்க முடியும்;. பழமையாக காணப்படுகின்ற சாதிய அடக்குமுறைகளும், முதலாளித்துவ உயர்த்திப் பிடித்தல்களும், கலாசார பண்பாட்டு பொய்மைகளும் மூட்டை கட்டி சுமந்துக் கொண்டு வருமானால் அதனை நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் சமூகம் எந்த முட்டாள் தனங்களால் அழிந்துப் போனதோ அந்த முட்டாள் தனங்களும், மூடத்தனங்களும் களைத்தெறியப்படல் வேண்டும். அறிவியல் சிந்தனையும் ஆக்கப்ப+ர்வமான முயற்சிகளும் கொண்ட முற்போக்கு சிந்திப்புகள் உடையதாக இருக்கும் தேசியமென்பது நிச்சயமாக வரவேற்கக்கூடியது. அவ்வாறான தேசியத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எம்மிடம் உந்துதலாக இருக்கவேண்டியது அவசியமும் கூட மேலும் தமிழ் தேசியத்துக்குள் ஒட்டு மொத்த தமிழ் தேசியமாக அது காணப்படுகின்றதா?

தமிழ் பேசும் அனைவரினது பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் கொடுக்கின்றதா? எல்லா தமிழ் மக்களின் ஒட்டு மொத்த பிரச்சினைகள் முற்போக்கு முறையில் சிந்தனைக்கு உட்படுத்தி அறிவியல் ப+ர்வ சிந்தனைகளுடன் பேசப்படுகின்றதோ அன்று தமிழ் தேசியம் பலம் பொருந்தியதாக காணப்படும். தேசியம் வென்றெடுக்கப்படுவதன் சாத்தியமும் இதனால் உண்டாகும். பழமை உடைப்புகளை ஏற்படுத்துவதென்பது தமிழ் கலாசார பண்பாட்டு அம்சங்களை ஒட்டு மொத்தமாக கிழித்து வீசும் நிலையினை நான் குறிப்பிடவில்லை. கலாசார பண்பாடுகள் கூட முற்போக்கு சிந்தனைகளைக் கொண்டதாக வளர்த்தெடுக்கபடுமானால் தமிழ் இருப்பை அது வலுப்படுத்தும். ஒன்றை ஒன்று பிரித்துக் கொச்சைப்படுத்தாகவும் தமக்குரியது மட்டும் மேலானதாக கருதும் அல்ப சிந்தனைகள் அகற்றப்பட்டு ஒவ்வொருவரின் தனித்துவ தன்மைகளும் சிறப்புடையனவாக பேணப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் தமிழ் தேசியத்தினை சரியான முறையில் இனங்காட்ட உதவுமெனலாம்.


இன்றைய குடும்ப அமைப்புகளிலிருந்து இயல்பாக செயல்படுவதற்கான சமூக கட்டுமானங்கள் மிகக்குறைவு எனக்கூறப்படுகின்றது? அது மலையகத்துக்கும் பொருந்தும் இது பற்றிய உங்களது கருத்து என்ன?

* குடும்ப அமைப்புகள் மலையகத்தில் இயல்பாக செயற்படுகின்றதென்பது உண்மை. இவைகளுக்கு சமூக கட்டுமானங்கள் மிகக்குறைவு எனக்கூறுவது பொருத்தமானதாக தெரியவில்லை. இன்னும் கூட மலையகத்தில் பாரம்பரியங்கள் மேலோங்கிக் காணப்படுவதினை அவதானிக்க முடிகின்றது. சாதிய   ரீதியிலான குடும்ப அமைப்புகள் சமூக கட்டுமானங்களை இழந்ததாக தெரியவில்லை. சில உயர் சாதியினர் என தம்மை கருதுவோர் தம்முடைய சாதிக்குள்ளும் குடும்பத்துக்குள்ளும் சமூக கட்டுமானங்களை வழிந்தே அமர்த்திக் கொள்ளும் பண்புகள் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைமை அநேகமாய் தோட்டங்களில் காணப்படுவது குறைவாகவே இருக்கின்றது. தோட்டப் புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து நகரத்தை மையமாக கொண்ட வாழ்வில் இந்த சமூக கட்டுமானங்கள் தாக்கம் செலுத்துகின்றதினை காணமுடிகின்றதும், ‘வெள்ளாளர்’ என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சாதியினர் நகர் புறங்களுக்குள் அண்டி தம்மை வாளர்த்துக் கொள்வதும், தமக்கும் தோட்டத்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததை காட்டிக் கொள்ளும் போலித்தனமே இங்குண்டு. மேலும் தோட்டத்துறையும் – தோட்டங்களுக்குள் குறைந்த சாதியினருக்கும் உரியது என்று மனப்பாங்கும் மலையகத்தில் பலருக்கு உண்டு. படித்து, தோட்டத்துறை சாராத தொழில் கொண்டவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் நகர் புறத்தை அண்டியே தம்முடைய வாழ்வை அடையாளங்காட்டுவதும் காணப்படுகின்றது.

malaiyagam-08

தோட்டம் என்பது தம்முடைய விலாசத்தில் இருப்பதுகூட வெட்கம் நிறைய மத்திய தர வர்க்கத்தின் போக்காகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இன்னொன்றாகவும் இருக்குமெனவும் தோன்றுகின்றது. தோட்டத்தில் 8 X 8 X 10 X 10அடிக்காம்பிராக்களே அதிகம். சொந்த நிலம் கிடையாது. அடிப்படையாக வசதியாக வாழ வீடமைக்க, சுகாதாரமாய் வாழ முடியாத சூழலில் இது சாத்தியமாகின்றது. ஆனாலும் குறிப்பாக மலையகத்தில் சமூக கட்டுமானங்கள் கொண்ட குடும்ப அமைப்புகள் உதிரியாக செயற்படுவதினை காணமுடிகின்றது. ‘சாதியத்தினை’ தூக்கிப்பிடிப்போர் குடும்ப அமைப்பையும் தூக்கிப்பிடிப்பதனை அவதானிக்க முடிகின்றது.

 

 பெண்ணியம், பெண்மொழி உருவாக்கம் பற்றி பேசுகின்ற பொழுது பெண் தனது உடலுறுப்பு பற்றிய சொற்பிரயோகங்களை எழுத்துக்களை பலர் எதிர்த்து வருகின்றனர். கவிஞன் என்ற ரீதியில் இவ்வெதிர்ப்புகளை எப்படி பார்கிறீர்கள்?
 

* ெண்ணியம், பெண்மொழி என்பதை கருத்திற் கொள்ளும் பொழுது உடலுறுப்பு பற்றிய சொற் பிரயோகங்கள் பிரயோகிப்பதனை எதிர்பார்ப்பதற்கு நான் உடன்படமாட்டேன். பொதுவாகவே பெண் கொச்சைப்படுத்தப்படுவதும், இழிவாக்கப்படுவதும், விபச்சாரியாக்கப்படுவதும் கூட உடலுறுப்பின் அடிப்படையில் தான். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உடலுறுப்பமைப்பென்பது உயிரியல் ரீதியிலான வேறுபாடுகளே தவிர வேறொன்றுமில்லை என்பதனை உணர்த்த அவசியமாகும்;;. ஆணின் மார்பகங்கள் பற்றி பிரஸ்தாபிக்காத உலகம் பெண்ணின் மார்பகங்கள் என்றவுடன் வெட்கமடைவதும், கூட ஒரு கருத்தியல் பிரமையே தவிர வேறொன்றுமில்லை. சமூகம் பெண்ணுறுப்புகளின் மீது வலிந்து ஏற்றி வைத்த பல பண்பாட்டு சோலிகள் வெறும் போலித்தனமானவைகவே.

இவ்வாறான போலித்தனமான சமூகமும், இலக்கியங்களும், சமயங்களும் பெண் மீது திணித்து விடப்பட்ட கட்டுமான்களும், கருத்தியல்களும் ஏராளம், தாராளம். இத்தகைய கருத்தியல்கள் உடைக்கப்படாமல் பெண்ணியம் பற்றி பேசுவதும் முடியாத காரியம். ஆகவே ஆண் பேசும் விடயம் ஒன்றை பெண் பேசுவது கூட (உடலுறுப்பு சம்பந்தமாக) பெண்ணை அடக்கி மற்றவர்கள் பார்க்கும் நிலை சமூக நிலையில் அதிகமாக காணப்படுகின்றது. பெண்ணும் ஆணும் இது உடைக்கப்படுதல் அவசியம். பேசும் மொழியில் கூட வேறுபடுத்திக் காட்டப்படுவதென்பது கூட பாரபட்சத்தின் ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது. பெண் அவ்வாறு உடலுறுப்புகள் பற்றி பேசுவதற்கு முழு சுதந்திரமுடையவள். அது பற்றி எழுதுவதற்கும் மேடையில் பேசுவதற்கும் கூட அவள் தயக்கம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

பெண் உறுப்புக்களை வார்த்தைகளாய் பாதுகாப்பது கூட பெண் அடிமைத்தனத்தை வலுப்படுத்துவதாக நான் எண்ணுகின்றேன். கவிஞர் என்ற ரீதியில் பெண் இவ்வெதிர்ப்புகளை வெறுமையாகவே நோக்குகின்றேன்;. உடலுறுப்பு பற்றிய தேவையற்ற விதத்தில் அச்சங்கொள்ளவோ, வெட்கமடையவோ வேண்டிய தேவையில்லை. அது வெறும் உயிரியல் ரீதியானது என்ற அறிவியல் சிந்தனைகளை எதிர்ப்பவர்கள் பெற்றுக்கொள்வது நலமாகும்;;. இது சம்பந்தமான எதிர்பார்ப்புகள் இன்னும் பெண்மை அடிமையாக்கும் அளவீடுகளை தேடிக்கொண்டிருப்பதும், எழவிடாமல் முடங்கச் செய்வதற்குமான எத்தனங்களே இவை என்பது என் கருத்து. உடலுறுப்புகள் பற்றி பேசுவதினை தப்பாகவும் கொச்சையாகவும் வெட்கமாக கருதியனால் தான் பெண் அடிமைப் படுத்தப்பட்டால் என்ற சிந்தனை வராத வரை இது தொடரும். என் எழுத்தில் பேச்சில் இவை மிகச் சாதாரணமான உயிரியல் தன்மை கொண்டவையே. ஆணின் உறுப்புகளை போல.

 ாதிய ேலாதிக்கத்தை நிலை நிறுத்தப் பயன்படும் ஒரு கருவியாக பெண்ணின் பாலியல் தன்மை கருதப்பட்டு அடையாளப்படுத்தப்படுகின்றது. மலையகத்திலும் சாதிய மேலாதிக்கம் அடையாளம் படுத்தப்பட்டுள்ளது என்று கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
 

மலையகத்தில் சாதிய மேலாதிக்கம் ஆரம்பக்காலத்திலிருந்தே அடையாளப்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றது. தமிழகத்திலிருந்து கூட்டி வரப்பட்டவர்கள் குறைந்;த சாதியினராகவும், கூட்டி வந்த ஆள்காட்டிகள் எனப்படும் கங்காணிகள் உயர் சாதியினராகவும் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆரம்பக்காலத்தில் தோட்டங்களில் கங்காணிமார்கள் (உயர் சாதியினர் எனககூறப்படுவோர்) தம்முடைய ஆதிக்கத்தினை செலுத்தியுள்ளனர். இன்றும் அதன் தொடர்ச்சி மலையக அரசியலில் தலைவிரித்தாடுவதனை காணமுடிகின்றது. சாதிய அரசியலில் மலையகம் கொடிக்கட்டிப் பறக்கின்றது. சாதிக்கெதிரான அரசியல் ரீதியில் இணைந்துக்கொள்வோரும் உள்ளதை அவதானிக்கமுடியும்;.
 

மேலும் சாதிய அமைப்பு தோட்டங்களில் கலப்புப் திருமணங்களையும், பல்வேறுப்பட்ட நிலையிலும் கலைத்தெரியப்பட்ட நிலை நகரங்களில் அவை கோயில் திருவிழாக்களில் கோயில் கமிட்டி உருவாக்குவதிலும் தாக்கத்தினை செலுத்துவதினை அவதானிக்கமுடியும். கல்வி நிறுவனங்களில் கூட இது தாக்கத்தினை செலுத்துவதினை மலையகத்தில் காணமுடிகின்றது. வெளிப்படையாகக இது காணப்படாது போன்ற நிலையில் மறைமுகமாக இது காணப்படுகின்றது.

உங்கள் கவிதைகள் ஆக்கிரோஸத்துடன் எழுதப்பட்டுள்ளன எங்கள் கிராமங்கள் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வும் எங்கள் அடையாளமும் மொழியும் அழிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து யாது?

என்கவிதையின் குரல்கள் ஆக்கிரோசமாய் வெளிவருவதற்கு பல காரணங்கள் உண்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருக்கும் மலையக தொழிலாளர்கள் உழைப்பாளிகள் முதலாளித்துவ மேலாதிக்கத்தால் நசுக்கப்படும் கொடுமை வெறியூட்டுவது போன்ற உணர்வை தருகின்றது. எந்த ஒரு ஆதிக்க வழியை (எது சம்பந்தமாக இருந்தாலும் பரவாயில்லை) கண்டாலும் முகத்தில் எத்தி உதைத்து கிழிக்கவேண்டுமென்ற வெறியை இயல்பாகவே ஏற்படுத்துகின்றது. நான் மனித சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள்;  அடக்கு முறைகள் ஒடுக்குதல்கள் சுரண்டல்கள் ஏகாதிபத்திய திணிப்புக்கள் இன ரீதியாக,மத ரீதியாக,சாதி ரீதியாக,வர்க்கரீதியாக அனுபவித்திருக்கிறேன், ஒவ்வொரு மனிதனும் உலகத்தில் கௌரவமாக வாழ வேண்டுமென்று நினைத்திருக்கிறேன். ஏனைய மனிதனை எந்நவிதத்திலாவது குறைவாக மதிப்பிடும் செயலைக் காணும் பொழுது கருத்தை காணும் பொழுதும் அதனை எனக்கு ஆக்கிரோசமில்லாமல் சந்திக்க முடியவில்லை, அதன் வீச்சில் எழும் கவிதைகள் ஆக்கிரோசமாய் உணரப்பட்டு வெளிவருகின்றது

ஒடுக்கப்பட்ட மேலாதிக்கமுல்ல சமூகத்தில் சும்மாயிருந்து வெற்றிக்கொள்வது சாத்தியமில்லை. எனவே போராட வேண்டிய கட்டாயம் எனக்குரியது. இந்த போராட்டம் உடல் போராட்டமாய் இல்லாதுவிடின் என் பேனையின் ஒவ்வொரு மொழியுமானது போராட துணியவேண்டும் அவ்வாறு துணிகையில் அது ஆவேசமாய் வெளிவருவதும் போராட்ட குணாம்சம் கொண்டிருப்பதும் சாத்தியமாய் தெரிகின்றது நிறைய பேர் ஆக்கிரோசமாய் கூறாதபடியாலோ என்னவோ இந்த சமூகத்தின் நிலை இன்னும் இப்படியே இருந்து ||அந்த மக்கள் பிறப்பதும் வாழ்வதும~~;.. வாழ்வின் சகல துக்கங்களும் சந்தோசங்களும் 200 வருட காலமாக எட்டடி லயத்துக்குள் முடங்கி அடிமைகளாய் உலகுக்கும் தெரியாமல் வெந்து நொந்து செத்துப்போய் விடுகின்றார்கள் எனவே இங்கு வாழ்வழித்தல் இருப்பழித்தல்; என்பது எல்லோருக்கும் இலகுவாய் போய்விட்டிருக்கின்றது எங்கள் அடையாளங்களையும் இருப்பையும் போராடி பெற்றுக்கொள்ளும் உலகச் சூழ்நிலையில் வாழ்ந்துக்கொண்டிருப்பதனால் அவற்றைப் போராடி பெற்றுக்கொள்ளும் துணிவு வேண்டும் அல்லது அதற்காக நேர்மையாக எழுதவாவது துணிவு வேண்டும் கேட்கும் மனப்பக்குவமுள்ளவர்கள் கேட்கட்டும் கேட்காதவர்களைப் பற்றிய  கவலைக்கொள்வதும் வீணோ. இதுவும் இல்லாவிடில் நம் வiலாறு நம்மை பிழை கூறுவதும் – வாழ்வே நம்மை மிதிப்பதும் வழிந்தே வந்து சேரும். ஆகவே~~.. இருப்புக்காக குரல் கொடுப்போம்.

உழைக்கும் வர்க்கத்தில் பிறந்த எனக்கு போராட்டம், வாழ்வியலோடு உணர்த்தெடுக்கப்பட்ட வார்ப்பு. மற்றவர்களுக்காக வாழ்தல் விருப்பம் எதனையுமே மென்மையாகவோ, சலாப்பியோ, சந்தர்ப்பத்துக்கோ, சார்பாகவோ வேண்டிய நேரத்துக்கு வேண்டிய படியோ நானோ என் கவிதைகளோ பேசியதாக நினைவில்லை. உள்ளது உள்ளப்படி பார்ப்பது இன்று வரை திருத்தி தருவதாய் அமைந்திருக்கின்றது. குறைந்த பட்சம் நேர்மையாகவாவது வாழ்வின் எல்லா விடயத்தையும் ரசிப்புக்குள்ளாக்கி மனுசியாய் என்னை வாழ வைத்திருக்கின்றது. இந்த புரிதல் தொடர என் கவிதைகளின் ஆக்ரோசத்தை தவிர்க்க முடியவில்லை. “இருப்பு” எனக்கும்.. என் பிள்ளைகளுக்கும் வேண்டும் என் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் அது எத்தனை முக்கியத்துவ வாய்ந்ததென|| தெரியாத மனிதர்கள்||.. புத்தி ஜீவிகளாய் இருக்க முடிவதில்லை. மனிதர்களாய் கூட இருக்கத்தகுதியில்லை. ஆகவே மொத்தமாய் நமது வாழ்வும் பணியும் போராட்டமும் எதிர்வினைகளும் மனிதகுலம் வாழ்வதற்காக மட்டுமிருக்கட்டும்.

இசைப்பிழியப்பட்ட வீணை என்னும் மலையக பெண்கள் கவிதைத் தொகுப்பு ஒரு பல்குரல் வரலாற்று ஆவணம் என்ற கருத்து பற்றி உங்கள் விமர்சனம் என்ன?

isai piliyapadda veenai

இசைப்பிழியப்பட்ட வீணை என்னும் மலையகப் பெண்களின் கவிதைத் தொகுப்பு சுவிஸ் ரஞ்சி, தேவா அவர்களின் முயற்சியுடனும் சொந்த செலவுடனும் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பாகவே காணப்படுகின்றது. இதிலுள்ள கவிதைகளை பத்தனை வே.தினகரன்  இங்கு வெளிவந்த சஞ்சிகைகளிலிருந்து தொகுத்து அனுப்பியிருந்தார். அவற்றில் காணப்பட்ட கவிதைகளின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டோ உணர்வுகளை அடிப்டையாகக் கொண்டோ அது முழுமையாக மலையக வரலாற்று ஆவணமாக என்னால் கொள்ள முடியவில்லை. அவ்வாறு கொள்ளப்படுவதற்குரிய ஆழமான மலையக மக்களின் பிரதிபலிப்புகளை வாழ்வியல் கலாசார அம்சங்களை அக்கவிதைகளை என்னால் உணர முடியவில்லை. அதில் பேசப்பட்ட கவிதைகள் யாவும் தன்னுணர்ச்சி கவிதைகளாகவே காணப்படுகின்றன. தனித்துவமாய் ||உழைக்கும் மக்களுக்குரிய|| எந்த பண்பாட்டு அம்சங்களையும் அக்கவிதைகளை உள்ளடக்கியிருக்கவில்லை. மேலும் அக்கவிதைகளில் பல மத்திய தர வர்க்கத்தினருக்குரிய பாங்கோடு எழுதப்பட்டக் கவிதைகளாகவே கொள்ளக்கிடக்கின்றது. மலையக மக்களின் வாழ்வியலின் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், போராட்டம், அரசியல் பொருளாதாரம், சமூக கலாசார சுரண்டல்கள் என்பவற்றை நேர்மையாக ஆழமாய், உண்மையாய், பேசப்படுகின்ற கவிதைகளாக அவை இல்லாதபடியால் அவற்றை முழுமையான ஆவணமாக கொள்ள முடியவில்லை. இருந்தும் அதில் பேசப்படுகின்ற சில கவிதைகள் புறம்பானவையாகவும் வரலாற்று ஆவணமாகவும் கொள்ள முடியும்.

அங்கு கூறப்பட்ட சோகங்களையும் விட கொடுமைகளை விட வீச்சு செறிந்த நிலமை இன்னும் மலையக மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கின்றது. ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனத்திற்கேயுள்ள அடக்குமுறைகளும் உழைக்கும் வர்க்கத்தேயுரிய ஓங்கிய குரலில் ஒலிக்கப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. பெண்களின் கவிதைகளாக இருக்கின்ற படியாலோ என்னவோ மெல்லுணர்வு கொண்டதாக இருக்கின்றன எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு மலையக மக்களின் உண்மை நிலை அதுவில்லை. பொருளாதார, சமூக, அரசியல் ரீதியில் அடிமைகளாய் இன்னும் சங்கிலியால் கட்டப்படாத நிலையில் நிறையப்பேர் ஒருவேளை சோற்றுக்கும் கூட வழியில்லாமல் வாழும் கொடுமை வெளிப்படாத குறை எனக்குண்டு. இன்னும் வீச்சான எண்ணமும் கூடைவாளை உருவிக் கொண்டு வந்து ஆக்ரோசத்துடன் குத்துமாயின், இந்த சமூகத்தின் நிலை வெளிப்பட்டிருக்கும். மலையக சமூகத்தின் அல்லது அடக்குமுறையை எதிர்நோக்கிய சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்த இன்னும் வீச்சாய் அர்த்தப்புஸ்டியாய் கவிதைகள் வெளிப்பட வேண்டுமென்பது என் தாழ்மையான கருத்து…

 

 

 

  

 

4 Comments on “சந்திரலேகா கிங்ஸிலியுடன் ஓர் நேர்காணல்”

  1. ஊடறுவக்கு எமது வாழ்த்துக்கள் . அத்துடன் பல பெண்களின் குரல்களை பதிவு செய்யும் ஊடறுவுக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு பத்திரிகையை கொண்டு வருவது என்பதே பெரிய பாடாக உள்ள போதும் வசயம் அதிலும் பெண்களின் ஆக்கங்களுக்கு நாம் படும் பாடு அப்பப்பா ஆனால் ஊடறு சளைக்காமல் தனது பணியை செய்து வருவது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம் உங்கள் உழைப்புக்கு முன் நாமெல்லாம் எங்கே ஊடறுவுக்கும் அனைத்து பெண்களுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.

    பரணிதரன்

  2. சந்திரலேகாவின் பேட்டி அரமை தக்க தருணத்தில் மலையகத்தில் இருநஇது ஒரு பெண் எழுத்தாளரை றஞ்சி பேட்டி எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதில் எனக்கு பிடித்த கேள்வியும் பதிலும்– தமிழ் தேசியத்துக்கும் மலையக மக்களின் தேசியத்துக்கும் இடையிலான முரண்கள் எவை எனக்கருதுகின்றீர்கள்?

  3. mmm,. its a good interview with Mrs.Chandraleka. I have to share my opinion about ISAI PILIYAPPATTA VEENAI. Soon as possible I’ll type it in tamil.

    Nice job.

  4. நல்லதொரு பேட்டி.மலையகம் சார்ந்த பல கேள்விகளை கேட்டிருக்கலாம்.
    வதிரி.சி.ரவீந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *