புத்தகம் பேசுது சஞ்சிகையின் பெண்கள் தின சிறப்பு பகுதி
இச்சமூகத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு அவலங்கள், கொடுமைகள்.. சிறுமைகளை பட்டியலிட்டால் அவை அனைத்துமே ஒரு பொது கருத்திற்கு கீழே அடங்கும்.இச்சமூகத்தின் இருபத்தியோராம் நூற்றாண்டு அவலங்கள், கொடுமைகள்.. சிறுமைகளை பட்டியலிட்டால் அவை அனைத்துமே ஒரு பொது கருத்திற்கு கீழே அடங்கும். ஆணாதிக்க அμகுமுறை சக்திகளின் பொறுப்பற்ற வெறியாட்டம் என்பதே அது. குழந்தை சித்தரவதைகளிலிருந்து மதவாத பயங்கரவாதம் வரை அனைத்துமே எங்கோ ஒரு இழையில் ஆண்தன்மை கொண்டு இயங்குவதைப் பார்க்கிறோம். மகளிர் இட ஒதுக்கீடு என்பது வெற்று கண்துடைப்பாகவும், மாதர்க்கு எதிரான குற்றங்களே நமது நீதிமன்ற வழக்குகளில் அதிகம் என்பதும் வேறுவேறு செய்திகள் அல்ல. வெறும் இச்சைப் பொருளாக சுருக்கப்பட்ட பெண், தனது குறைந்த பட்ச நியாயத்திற்காகக்கூட குரல் கொடுக்க உரிமையும், விழிப்புணர்வும் அற்றவளாளிணி இருப்பதும், பாலசாமியார்கள், பாலியல் சாமியார்களாக பிடிபடுவதும் வெவ்வேறு சங்கதிகள் அல்ல.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்று நமது வானொலி எஃப்.எம் முதல் தொலைக்காட்சி சானல்கள் வரை ஏதோ பெண்கள் விருப்ப நிகழ்ச்சி, வாழ்த்து சொல்வது, பாட்டு ‘டெடிகேட் பண்μவது’ என காதலர் தின அளவிற்கு அதை சுருக்கியாயிற்று. ஆனால் அந்நாளின் பின்னணி பெரும்தியாகங்ள்க நிறைந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
உண்மையில் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்றுதான் அழைக்கப்படுகிறது.1911 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெர்மனியில் மார்ச் 19 அன்று நூற்றுக்கணக்கான உழைக்கும் மகளிர் ஆடவருக்கு இணையான ஊதியம் கேட்டு வீதிக்கு வந்து போராடி சர்வதேச மகளிர் தினத்தை அறிவித்தார்கள் இது அத்தகைய அறிவிப்பின் நூறாவது ஆண்டு.இந்த அழைப்பு வந்தவுடன் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் உழைக்கும் மகளிர் வேலைகளைப் புறக்கணித்து வேலையில் பாதுகாப்பும், ஆண்களுக்கு இணையான வேலை உரிமையும் கேட்டு அணி திரண்டனர். அரசுகஷீமீ செவிசாளிணிக்காத நிலையில் 1911 மார்ச் 25, அன்று, நியூயார்க்கில் டிரையாங்கிள் துணி ஆலை தீ வைக்கப்பட்ட பெரிய சதியில் 140 உழைக்கும் பெண்கஷீமீ கருகி உயிர்நீத்த கொடுமை அரங்கேறியது. அவர்களில் பலர் மகளிர் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய தோழமை உஷீமீளங்கஷீமீ என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக இருந்ததாக நாடகமாடிய அரசு
அந்த தொழிற்சாலையை மூடி தொழிற்சங்கத்தை கலைத்தது.தொடர்ந்து சம-உரிமைக்காகப் போராடிய மகளிர் தொழிற்சங்க அமைப்புள் அடுத்த ஆண்டு மார்ச் எட்டாம் தேதி அன்று ஐரோப்பா முழுவதும் கதவடைப்பு செய்து மகளிர் தினத்தை அனுசரித்தன. சோவியத் யூனியன் உதித்தபோது, மகளிர்தினத்தை பொது விடுமுறையாக அறிவித்து சோவியத் மகளிரின் புகழ் போற்றும் தினமாக ஏற்றுக்கொண்டது. மகளிர் உரிமைக்காக தொடர்ந்து பல நாடுகள் குரல் கொடுத்தாலும் ஐ.நா.சபை மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் என்று 1975ல் தான் அறிவித்தது. இன்றும் கூட ஈரான், ஆர்மீனியா போன்ற பதினாறு நாடுகளில் மகளிர் தினம் அனுசரிக்கத் தடை உள்ளது.
மாபெரும் எழுச்சிமூலம் ஆடவருக்கு இணையான வேலை உத்தரவாதம் கேட்டு அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்த சர்வதே மகளிர் தினத்தை இந்தியாவில் முதலில் அனுசரித்த பெருமை கேப்டன் லட்சுமியையே சாரும். பெண் உரிமையை ஸ்தாபித்து சக தோழமையான மரியாதையும் பாதுகாப்பும் பெண் அடையும் வரை சர்வதேச மகளிர் தினம் எத்தனை நூற்றாண்டானாலும் தொடரும்…தொடரவேண்டும்.