முழு உலகிற்கும்
பால் தரும்
முலையிலிருந்து சுரக்கும்
சக்திமிக்க இரத்தத்துளி
பெண்!
****
நீ!
சக்தியின் புதிய தோழியடி
பாசத்தின் புதிய அhத்தமடி
போராட்டக்கவிதையின் இராகமடி
ஆனால்
இன்னும் நியாயத்தின்
தொடக்கத்தைக் காணாதவள்
இங்கு
வீட்டுக்கு வீடு
வாசலுக்கு வாசல்
மாமிசத்தைக் கழுவிச் சாப்பிடும்
ஆசார சீலர்கள்
கதவோரங்களில்
எச்சில் வடித்தபடி.
எங்களின் நாளைகளின்
விதியை நினைக்கையில்
வேதனை இதயத்தைக்
பிளந்திடக்காண்கிறோம்
பொய்மைக்கு பாலாபிஷேகம்
செய்த நாட்கள்
இன்றோடு தொலையட்டும்
அடிமையாய் சிந்திய
கடைசித்துளி கண்ணீரையும்
துடைத்து விட்டு
புறப்படுவோம்
புதிய பாதையில்
மந்திரவாதிகளே!
கண்களைத் திறவுங்கள்
முழு உலகிற்கும்
பால் தரும்
முலையிலிருந்து சுரக்கும்
சக்திமிக்க இரத்தத்துளி
பெண்
(நன்றி ஊதா 1992)
very nice Kavithai