|
- இதனால் உளவியல் தாக்கங்களுக்குள்ளாகிறார்கள் என முகாமில் இருந்து சொந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறி
- மீண்டும் இன்னுமொரு முகாமிற்கு அழைத்து வரப்பட்ட அருணாச்சலம் என்பவர் பிபிசி சிங்கள வானொலிக்கு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்52 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுகிறோம் எனக் கூறி மீண்டும் கிளிநொச்சி சென்ரல் பாடசாலையில் தங்க வைத்துள்ளதாகவும் தாங்கள் 600 மீற்றர் தூரத்தில் உள்ள சலூனுக்கு கூட தலைமயிர் வெட்டுவதற்கு அனுமதிக்க படவில்லையென்றும் தனது வீடு 800 மீற்றர் தூரத்தில் உள்ளதாகவும் ஆனால் தான் இன்னமும் கிளிநொச்சி சென்ரல் பாடசாலையிலேயே தனது குடும்பத்துடன் இருப்பதாகவும் தங்களை தயவு செய்து தங்களது வீடுகளில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.