போரில் ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ இல்லாத அவளின் பெயர் மல்லி |
–சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் தி டெரரிஸ்ட்…
தன் அண்ணாவின் இறப்பால் பாதிக்கப்பட்டு போராளியான ஒரு பெண்ணின் கதை தி டெரிஸ்ட்.
போரில் ஆண்களை விட பன்மடங்கு வீரமும், வேகமும் காட்டியஅந்தப் பெண், தான் இருக்கும் போராளி இயக்கத்திற்காக நடத்தப்படும் முக்கிய வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறாள். தயார் செய்யப் படுகிறாள். ஒரு உயிரைக் கொல்வதில் எந்த விதமான தயக்கமோ, வருத்தமோ, யோசனையோ இல்லாத அவளின் பெயர் மல்லி !
முக்கியப் பிரமுகரைத் தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வது என்று செய்யப்பட்டவுடன் இயக்கத்திலிருக்கும் சிறந்த பெண் போராளிகளை வரவழைத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்த பின் மல்லி தெரிவாகிறாள் அதன் பின்னர் ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் அந்த ஊர் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள் அவ்வூரில் முட்டாள் என்றும் கிறுக்கன் என்றும் சொல்லும் விவசாயம் செய்யும் ஒருவர்; வீட்டில், தங்க வைக்கப்படுகிறாள் மல்லி. படிப்புக்காக ஆராய்ச்சி செய்யும் மாணவி என்று பொய் சொல்லி தங்க வைக்கிறார்கள் அந்த போராளி இயக்கத்தினர். ஆவள் தற்கொலைத் குண்டுத் தாக்கல் நடத்த இருக்கும் பிரமுகர் அந்த ஊரிற்கு வர இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் மல்லிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது
.
போர் முனையில் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு வீரனால் மல்லி கருவுற்றுருப்பது பயிற்சியின் போது தெரியவருகிறது சாவதற்கு பயிற்சி நடந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் கூட அவளுக்கு உயிர் வாழும் ஆசை வருகிறது. ஆண்களை மிஞ்சும் வீரம் இவளது பலமாகக் இயக்கத்தில் காட்டப்பட்டதினால் இவ் தற்கொலைத் தாக்குதலுக்கு மல்லி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள். ஆனாலும் பெண்களுக்கே உரிய மென்மை, தாய்மை இறுதியில் மல்லி அங்கம் வகிக்கும் இயக்கத்தின் கொள்கைக்கே சவாலாக வந்து நிற்கிறது. ஒவ்வொரு முறையும் தன் வயிற்றில் வெடிகுண்டைக் கட்டிப் பார்க்கும் போது வாழ வேண்டும் என்கிற ஆசை தீவிரமடைவது அவளை அறியாமலே அவளுள் ஏற்படுகிறது இவள் தாயாகப் போவதைத் தெரிந்து கொண்ட, மகனை இழந்த அந்தப் பெரியவர், இவளை மகளாக நினைத்துக் காட்டும் அன்பில் மனம் கரைவதும், தன் லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற பயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்வதும், மழையில் ஓடுவதும், நனைவதும் என்று நாள் நெருங்க நெருங்க மல்லி மூர்க்கமாக செயற்படத் தொடங்கினாள் முதலில் காட்டப்படும் மல்லியே இல்லை என்ற அளவுக்கு இருந்தாள் சாகப் போகும் மனிதனிரின்; மன வலியை மல்லியாக நடித்த Ayesha Dharker அற்புதமாக நடித்துள்ளார். ´
அடர்ந்த காட்டிற்குள்ளிருந்து ஆற்றைக் கடக்க உதவும் அந்த ‘லோட்டஸ்’ சிறுவனின் கதையும், சுவற்றில்தொங்க விடப்பட்டிருக்கும் படங்களில் உள்ள பெண்களைப் போல் மல்லி தன்னை பார்ப்பதும் புது உடைகளை ஆசையாக முகர்ந்து பார்ப்பதும் இலையில் போட்ட உணவை பருக்கை விடாமல் ருசித்து உண்பதும மிகவும் சுவாரசியமானது சூழ்நிலையால் தீவிரவாதியானவர்களின் வலிகளைப் பதிவு செய்யும் இடங்கள். மகனை இழந்த பெரியவர், பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவரது மனைவி, மகன் இருந்த இடத்தை மல்லி நிரப்ப மாட்டாளா என்னும் ஏக்கம் என்ற புதிய உறவின் வலிகளையும் பதிவு செய்கிறது தி டெரிஸ்ட்.
வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது அதை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் மல்லி திடீரென்று ஜன்னலை ஒரு குத்து விட்டு உடைக்க உள்ளே மழைச்சாரல் தெறிக்கும்…. படத்தின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வாhத்தைகள் இல்லை… 1999 ஆம் ஆண்டு வெறும் பதினைந்து நாட்களில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளை எடுத்துள்ளது. கெய்ரோ திரைப்பட விழாவில் ((Cairo International film Festival)) திரையிடப்பட்டுள்ளது.