சந்தியா (இலங்கை)
இலங்கையில் பல சிறைச்சாலைகளில் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. |
கடந்த யுத்தத காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் அரசியல் கைதிகள் தங்களை விடுவிக்கக கோரி மனிதநேய அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்து வரும் வேளையில் காலங்கள் பல கடந்தும் பயங்கரவாதம் மற்றும் அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே வாழ்வாகிப்போன தங்களின் இந்தப் பரிதாப நிலையை திரும்பத் திரும்ப நாம் ஞாபகப் படுத்துகின்றோம் என தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் பல சிறைச்சாலைகளிலுல் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கி வாழ்ந்து வரும் பெண் அரசியல்கைதிகள் பலர் தங்கள் குழந்தைகளுடன் சிறைகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இப்பிள்ளைகளின் எதிர்காலமும் ளே;விக்குறியாகி உள்ளது. இப்பெண்களில் சிலர் கருவிலேயே குழந்தைகளை சுமக்கும் போது இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் சிறையிலேயே குழந்தைகளை பெற்றெடுத்தும் உள்ளனர் இன்னும் சில பெண்கள் குழந்தைகளுடன் சிறைச்சாலைகளில் தங்கள் குழந்தைகளுடன் துன்புற்று வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில பெண்கள் கைது செய்யப்பட்டபின் மனநோயாளியானார்கள் இவர்களின் குழந்தைகளும் சிறையில் வாழ்கின்றனர். தமது பிரச்சினை தொடர்பாக பலரும் பல வாக்குறுதிகளை தந்தனர் ஆனால் நாம் இவ் வாக்குறுதிகளை கேட்டு ஏமாந்து விட்டோம். நாம் வேறு குற்றங்களை செய்தவர்களுடன் அடைக்கப்பட்டுள்ளோம் அதனால் எமது பிள்ளைகளின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
எமது பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூடக் கொடுக்க முடியவில்லை. சில குழந்தைகள் தங்கள் தகப்பனாரை இறுதி யத்தத்தில் இழந்து விட்டனர். சிலரின் தகப்பானர் கை கால்களை இழந்து அங்கவீனராகவும் காணாமல் போயும் உள்ளனர். கடந்த யுத்தத்திற்கு ஒரு தரப்பினரை மட்டும் குற்றம் கூறுபவர்கள் எங்களை ஏன் அடைத்து வைத்துள்ளார்கள். எம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள். சுpல பெண்களின் கணவர்மார்களும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சில பெண்கள் திருமணமாகமல் இளவயதினர் இவர்களின் நிலைமைகளை எண்ணிப்பாருங்கள.
இவ்வயதில் நாம் எமது இளைமையைத் தொலைத்தவர்களாகவும் ஆற்றல்கள் அளுமைகள் எல்லாம் முளையிலேயே கருகிவிடுவதுமான வாழ்க்கையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இது தவிர வாலிபம் கடந்தும் வயோதிபம் தள்ளாடும் வயதிலும் சிலர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர் எங்களுக்கு தண்டனை தருவதாயின் தரட்டும் அல்லது எமக்கு வாழ்க்கையைத் தரட்டும் எம்முடன் சேர்ந்து எமது குழந்தைகளும் தமது சந்தோசத்தையும் சமூகத்தின் அரவணைப்பiயும் இழந்து புறந்தள்ளப்பட்டு நிற்கின்னர் கடந்த கால யுத்ததித்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதில் தவித்துக் கொண்டிருந்த போது மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றோம். ஏம்மைத் தான் சிறைப்பிடித்தார்கள் ஆனால் எமது பிள்ளைகள்; செய்த பாவம் தான் என்ன. இவ் இருள் மயமான சிறையிலிருந்து எம்மையும் எமது குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.