யசோதா (இந்தியா)
கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
உலகிலேயே மிகவும் பிரச்சினைக்குரியதும் கோரமானதும் அசிங்கமானதும் என விபரிக்கப்படும் யுத்தங்கள் நடைபெற்று வரும் நாடுகளுக்கு, ஐ.நாவின் அமைதிப்படையாக அனுப்பி வைக்கப்படும் இராணுவத்தினர் பற்றிய புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தருபவையாக உள்ளன. போர் நடைபெறும் நாடுகளுக்கு அனுப்பபடும் ஐ.நா இராணுவத்தினர் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கைத்தரம் குறைந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று அண்மையில் வெளியான ஐநாவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஐநாவின் சமாதான நடவடிக்கைகளில் சுமார் 100.000 ஐ.நா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களுள் அதிகாரிகளிலிருந்து காவல் துறையினர் மற்றும் சாதாரண சிப்பாய்கள் வரை அடங்குகின்றனர். சிப்பாய்களில் பெரும்பாலானவர்கள் ஆபிரிக்கா, தெற்காசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். உலகில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிக்கலானதும் அத்தோடு கொடூரமான யுத்தங்கள் நடைபெறும் பகுதிகளில் சமாதானத்தையும் மனித உரிமைகளையும் (போலி) பேணிக் காக்கும் வீரர்களாக இவர்கள் பணிப்புரிகின்றனர்.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 7000 இராணுவத்தினர் ஐநாவின் சமாதானப்படை அணியில் அங்கம் வகிக்கின்றனர். இந்த எண்ணிக்கையுள் முன்னைய சோவியத் அணியைச் சேர்ந்த நாடுகளும் அடங்குகின்றன. ஐநாவின் சமாதானப்படையில் அங்கம் வகிப்போரில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா, இந்தியா, மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் பெருமளவிலானோர் அடங்குகின்றனர்.
தற்போது ஐநாவின் சமாதானம் என்ற சொல்லைக் காக்கும் படைப்பிரிவு ஆபிரிக்காவில் சூடானின் டவூர், கொங்கோ, ஐவரிகோஸ்ற், லைபிரியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய பிரதேசங்களில் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐநாவின் கொங்கோ (ஆழுNருளுஊழு) இன் படையணியில் பங்களாதேஷ், இந்தியா, நேபால் பாகிஸ்தான், உருகுவே, கானா மற்றும் எகிப்திய ஐ.நா இராணுவத்தினர் தமது பங்களிப்பை வழங்குகின்றனர். ஆனால் இவர்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான 19000 ஐநா இராணுவத்தினரே மேலைத்தேயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மனிதவளம் அதிகளவு காணப்படுவதால் அவற்றை அதிகளவு பயன்படுத்தும் அதேவேளை மேலைத்தேய நாடுகள் அந்த யுத்தம் நடைபெறும் நாடுகளில் சுரண்டிய வளங்களை, பணத்தை செலுத்தி ஐநா படையை உருவாக்குகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது பெண், ஆண்; இராணுவத்தினரை அல்லது தமது அமைதிப்படையை போர்முனைகளுக்கு அனுப்ப பெரிதும் விரும்புவதில்லை ஏனெனில் தாம் விற்பனை செய்யும் ஆயுதங்கள் நிச்சயமாக அவர்களின் உயிரைக்குடித்து விடும் என்பதும் சிதறுண்ட உடலங்களே வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்பதும் இவர்களுக்கு நிச்சயமாக தெரியும். மேலைத்தேய நாடுகள் யுத்தம் நடைபெறும் நாடுகளிலும் , அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலும் சுரண்டிய வளங்களையே அதே நாடுகளுக்கு கடனாக கொடுத்து மனச்சாட்சியை சரிபார்த்துக்கொள்கின்றனர் என்றே கூறலாம்
ஆனாலும் கொங்கோ ஜனநாயக குடியரசில் ஐ.நா அமைதிப்படையினர் பிரசன்னமாக இருந்தாலும் கொங்கோவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள நடைபெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில், சம்பவங்களில் அந்நாட்டு இராணுவத்தின் பிராந்தியத் தளபதிக்குத் தொடர்பிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள நகரொன்றில், இவ்வருடத்தின் முதல் வாரத்தில் இக் குற்றச் சம்பவம் இடம் பெற்றதாகவும், அதில் அப்பகுதி இராணுவத் தளபதிக்கும், இராணுவத்தினர்க்கும் தொடர்பிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை ஐநா அமைதிப்படையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் உறுதி செய்திருப்பதாகவும், அதே வேளை பாதிப்புற்ற பெண்களுக்குச் சிகிச்சை அளித்த அம்மாநில வைத்தியசாலை அதிகாரி ஒருவரும் இச் செய்தியினை, உறுதி செய்து சாட்சியமளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலைத் தகவல்களின்படி, இச்சம்பவத்தில் 50க்கும் அதிகமான பெண்கள் பாதிப்படைபுற்றிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இக் குற்றசாட்டிற்கான பொறுப்பினை இப் பிராந்தியத்தின் தளபதி மறுத்துள்ளார். எங்கு ஐநா அமைதிப்படை நிற்கிறதோ அங்கு பிரச்சினைகள் கூடுகின்றனவே ஒழிய போர் நின்றபாடாய் இல்லை என்பதே கண்கூடு.
2010 மார்கழியில் பணிபுரியும் ஐ.நா அமைதிப்படையினர் விபரம் வருமாறு
பாகிஸ்தான் 10, 652
பங்களாதேஷ் 10,402
இந்தியா 8,691
நைஜீரியா 5, 841
எகிப்து 5, 409
நேபால் 4,431
ஜோர்தான், ரூவாண்டா 3,810
ஹானா 2,966
உருகுவாய் 2,453
செனகல் 2,358
எத்தியோப்பியா 2,301
இத்தாலி 1741,
பிரான்ஸ் 1540
ஸ்பெயின் 1,114
ஐக்கியஇராச்சியம் 282
டென்மார்க் 175
ஐக்கிய அமெரிக்கா 87
நோர்வே 65.
சுவீடன் 57
பின்லாந்து 25
(ஆதாரம் ஐநா.வின் புள்ளிவிபரம் 31 மார்கழி 2010)