வருணன் (இலங்கை)
எழுத்தாளர் மகாநாடு என்றால் சைவச் சாப்பாடு தான் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. எனது 1000 ரூபாவுக்கு நல்ல கோழிக்காலும் புரியாணியும் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல படமும் பார்த்துவிட்டு தூங்கியிருந்தால் என் மனம் ஆறியிருக்கும் அல்லது ஒரு நேர சோறுக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு இவ் 1000 ரூபாவை கொடுத்திருந்தால் என் மனம் நிம்மதி அடைந்திருக்கும் இவ்வளவு என் மன உளைச்சலையும் நானே என் செவிப்பறையில் ஓங்கி அறைந்து கொள்கிறேன். |
(நட்புடன் ஊடறு ஆசிரியர் குழுவினருக்கு நான் ஒரு எழுத்தாளர் அல்ல தற்போது நான் ஊடகவியல் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றேன். எனது சக தோழியுடன் இம்மகாநாடு பற்றி என் கோபத்தை கூறியபோது என் கருத்தை எழுதி உங்கள் இணையத்திற்கு அனுப்பம்படி கூறினார் எனது இச்சிறுகுறிப்பை பிரசுரிக்க முடிந்தால் மிகவும் நன்று.)
*****
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகாநாட்டுக்கு எனக்கும் அழைப்பிதழ் வந்தது. நானும் அதில் பங்கு பற்றுவதற்காக 1000 ரூபா செலுத்தி மிகவும் ஆவலாக காத்திருந்தேன் மகாநாடும் நடைபெற்றது. இம் மகாநாட்டுக்கு பல எதிர்ப்புக்குரல்களும் ஒரு ஆதரவுக்குரலும் வெளிக்கிளம்பின. இவ் ஆதரவு,எதிர்ப்புக் குரல்கள் அனைத்தும் தமது அரசியல் இலாபங்களை முன் வைத்தே செய்யப்பட்டது என நான் நினைக்கின்றேன்.
இம் மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சாதியத்திற்கு எதிராக எப்படி குரல் கொடுக்க முடியும்? எப்படி இந்துத்துவ கலாச்சாரத்தை ஆதரிக்க முடியும்…? யாழ் மேலாதிக்கத்திற்காக குரல் கொடுப்பவர்கள் எப்படி இந்து சமய கலாச்சாரத்தை பேணிப்பாதுகாக்கும் ஆறுமுகநாவலரைப் பற்றி பேசுவதை ஆதரிக்க முடியும்?? என்பதெல்லாம் என் மண்டைய மீண்டும் குடைய…??
ஊடகம் சுதந்திரம் பற்றியும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் கொலை மிரட்டல்கள், செய்தித் தணிக்கைகள், கடத்தப்பட்டவர்கள் காணமற்போனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் தாங்கள் என தம்மை கூறிக்கொள்வோரும் அல்லது தாமும் ஊடகவியலாளர்,தலித்துகள் எனக் கூறிக்கொள்வோரும் எப்படி இம் மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்ற கேள்வியும் என்னுள் குடைய…அவற்றையெல்லாம் புறந்தள்ளி இம் மகாநாட்டில் நான் பங்கு பற்றியிருந்தேன். மகாநாட்டின் தொடக்கமே என்னை உறைய வைத்தது.
– தமிழ்ச்சங்கத்திலும் ராமகிருஸ்ணமண்டபத்திலும் வரவேற்புக்காக போடப்பட்டிருந்த கலர் கலரான கோலம்,
– சைவ கோயில்களின் தேர்திருவிழா போல் மேள தாளங்களோடு வீதியால் வாகன பவனியாக ஸ்பீக்கரில்
பிரபல்யமான பாட்டு ஒலிக்க ஊர்வலமாக மகாநாடு ஆரம்பிக்கப்பட்டது,
– மகாநாட்டிற்காக பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது,
– அதையும் விட சைவ யாழ் வேளாளர்கள் (இவர்கள் தான் சமூக சீர்திருத்தவாதிகள்) பட்டு வேஷ்டிகள் சகிதம் திருநூறு பூச்சுடன் வந்தது …
ஆக இம்மகாநாட்டுக்காகவும் தமது அரசியல் இலாபங்களுக்காகவும் மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், போன்ற பல கோட்பாட்டு தத்துவங்களை தமதாக்கி கொண்டு மார்க்சியம் என்றால் எனது, தலித்தியம் என்றால் எனது,பெண்ணியம் என்றால் எனது என சொல்பவர்களைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்.இவர்கள் எல்லாம் தமது சொந்த நலன்களுக்காகவும் தமது அரசியலைக் காப்பாற்றுவதற்காகவும் இவற்றை பயன்படுத்துகிறார்களே ஒழிய மக்களுக்காக அல்ல. அதே போல் தான் சர்வதேச எழுத்தாளர்கள் மாநாடும் இருந்தது. இதை வைத்து பணம் பணணியவர்கள் வாழ்க? வளர்க.
இலங்கையில் ஊடகசுதந்திரம் பறிபோனது பற்றியோ, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் பற்றியோ, அல்லது சிறையில் வாடும் பெண் அரசியல் கைதிகள் பற்றியோ, அல்லது கணவனையிழந்த பெண்கள் பற்றியோ, கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தம் வாழ்க்கையை பறிகொடுத்தவர்கள் பற்றியோ, அல்லது இன்றும் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் காடையர்கள் பற்றியோ, அல்லது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தலித்துக்கள் பற்றியோ, அல்லது புலிகளை ஒழித்து விட்டோம் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று கூறும் இவர்கள் இன்றும் கடத்தப்பட்டுகொலை செய்வது பற்றியோ வாய்திறக்கவில்லை.
ஒரு சிலர் கட்டுரை வாசித்தார்கள் இங்கு பெயர் தெரியாத ஒரு சில இந்திய எழுத்தாளர்களும், சிங்கப்பூரில் இருந்து ஓரிரு எழுத்தாளர்களும் இலங்கை அரசுக்கு ஆதரவு கொடுப்போரும்(வெளிநாடு,உள்நாடு) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கேஸ்வரியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சேனாதிராஜாவும் இவ் மகாநாட்டில் பங்கு பற்றியிருந்தார்கள்.
தங்கேஸ்வரி பேசும் போது 1957ம் ஆண்டு கிழக்கில் எப்படி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோ அதே போல் இப்பவும் வெள்ளம் பெருகுகிறது என்றார்.
கார்த்திகேசு சிவத்தம்பி பேசும் போது தமிழ் எழுத்தாளர்களுக்கு இம் மகாநாடு ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது என்றார்
அதையும் விட என்னை மிகவும் விசனத்தில் ஆழ்த்திய ஒரு விடயம் தமிழ்ச்சங்கத்தில் பல ஆண் கவிஞர்களின் statue (சிலைகள்) வைக்கப்பட்டிருந்தன ஆனால் ஒரு பெண்கவிஞர்களின் statue (சிலைகள்) கூட இருக்கவில்லை ஏன் இந்த பாராபட்சம் ஏன் அவ்வையார் ஆண்டாள் போன்றவர்களின் சிலைகளை வைக்கவில்லை இவற்றில் கூட பாராபட்சம் எப்படி மறந்தார்கள் அதுவும் அவ்வையாரை எப்படி மறந்தார்கள்???. இவர்கள் தான் பெண்ணியம் பேசுகிறார்கள்
இதில் தான் பாரபட்சம் என்றால் கலாச்சார நிகழ்வுகளில் கூட பாரபட்சம் கலர்புல்லாக நடைபெற்ற பரதநாட்டியம், நாடகம், பாட்டு மேளக்கச்சேரி,என நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மக்களின் ஒரு சிறு கலாச்சார நிகழ்வுகள் கூட நடைபெறவில்லை என்பதை நான் இங்கு கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டும்.
இங்கு பல முஸ்லிம் நண்பர்கள் எழுத்தாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் என்று பங்கு பற்றியிருந்தார்கள் ஆனால் ஏன் முஸ்லிகளின் ஒரு கலாச்சார நிகழ்ச்சியாவது நடைபெறவில்லை என்ற கேள்வி யாரிடமும் எழவில்லை அப்படி கேட்டுத்தான் என்ன பிரயோசனம்?
சும்மா சுத்துமாத்துக்காக இவர்கள் அனைவரும் சாதிய அடையாளத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு அரசியல் பிணக்குகள் ஏற்படும் போது தமக்கு ஆதரவுப் பெற இம் மகாநாட்டிலும் சாதியை மறைமுகமாக இயங்க வைத்துள்ளனர். அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் தன் சாதிக்கு ஆபத்தாக அமையுமென சிலர் மௌனமாகியதை நாம் அறிவோம். தங்களது இலக்கை அடைமுடியாது விரக்தியடைந்தவர்கள் அதை ஈடு செய்ய இன்னொரு துறையில் இன்பம் காண முயல்கின்றனர். அது தான் சாதி. சமத்துவம் மறுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களின் கருத்துக்களை தேவை ஏற்படும் போது பயன்படுத்துகின்றனர் அதைத்தான் தாங்கள் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்பதைக் காட்ட தெனியானை மகாநாட்டு அழைத்துள்ளனர்.இதில் இன்னும் ஒரு விடயமும் சுட்டிக்காட்டப்பட வேண்டும் என நினைக்கின்றேன்.
எழுத்தாளர் மகாநாடு என்றால் சைவச் சாப்பாடு தான் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. எனது 1000 ரூபாவுக்கு நல்ல கோழிக்காலும் புரியாணியும் சாப்பிட்டுவிட்டு ஒரு நல்ல படமும் பார்த்துவிட்டு தூங்கியிருந்தால் என் மனம் ஆறியிருக்கும் அல்லது ஒரு நேர சோறுக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு இவ் 1000 ரூபாவை கொடுத்திருந்தால் என் மனம் நிம்மதி அடைந்திருக்கும் இவ்வளவு என் மன உளைச்சலையும் நானே என் செவிப்பறையில் ஓங்கி அறைந்து கொள்கிறேன்.
இவர்களின் முகத்தை வெளிக்காட்டியதற்கு நன்றி
பேனை எதுக்கு இப்பிடி ……. போல எழும்பி நிக்குது? எழுதுற பேனை புத்தகத்தைப் பார்த்தல்லோ இருக்கும்?
விஜய்
சர்வதேச எழுத்தாளர் மாநாடு என்ற பொய் முகத்திரையை கிழித்த –
வருணனின் எழுத்துக்கும், படங்களுக்கும் வருணனுக்கு நன்றி.
பிரசுரித்ததுக்கு ஊடறுவுக்கு நன்றி.
விஜய்