உண்மையிலேயே நாங்கள் கணவளையிழந்தவர்கள் தானா என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல பெண்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை)

Del438685 யுத்தத்தினால் போருக்கு முன்னரே கணவனையிழந்த பெண்களும் கடைசிநேரத்தில் இலங்கை அரசாங்கம் செய்த மனிதப்படுகொலையினாலும் போரைக்காட்டி தமது கணவர்களை பறிகொடுத்த பெண்களுமாக இன்று ஒவ்வொரு தடுப்புமுகாமிற்கும் தங்கள் கணவர்களைத்தேடி பெண்கள் அலைந்து திரிவதை பார்க்க சகித்துக்கொள்ள முடியவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆயிரம் பெண்கள் கணவனையிழந்தவர்கள் ஆக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் இவர்கள் அனுபவிக்கின்ற கஷ்டங்களைச் சொற்களில் வடிக்க முடியாது. இப்பெண்கள் தொடர்பான சிந்தனைகளும் அவர்களுக்கான செயற்பாடுகளும் மிகவும் பூச்சியமான நிலையிலேயே உள்ளது. போர் முடிவடைந்து கிட்டதட்ட 2 வருடங்கள் ஆகின்ற போதும் போரினால் கணவனையிழந்தவர்களாக ஆக்கப்பட்டோரின்  அவலம் நிறைந்த வாழ்விற்கு விடுதலை கிடைத்தபாடில்லை. உண்மையிலேயே நாங்கள் கணவளையிழந்தவர்கள் தானா என்பதைக் கூட உறுதிப்படுத்தப்படாத நிலையில் பல பெண்கள்  இன்று எங்கள் மத்தியில் வாழந்து கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய 20,000 பேர் வரையான ஆண்கள் தடுப்புமுகாம்களில் தடுத்து வைத்திருப்பதாகவும் அவர்களில் தங்கள் கணவர்கள் இருக்கலாமா? என்று எத்தனையோ பேர் இன்றுவரை முகாம்களுக்கு அலைந்து கொண்டிருக்கiயில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதில் இலங்கை அரசாங்கம் மெத்தனப்போக்கையும் இழுத்தடிப்பையும் செய்து வருகின்றது.

ஈழத்து தமிழ்மக்கள் அனைத்தும் பறிபோன நிலையில்   யுத்தத்தினால் போருக்கு முன்னரே கணவனையிழந்த பெண்களும் கடைசிநேரத்தில் இலங்கை அரசாங்கம் செய்த மனிதப்படுகொலையினாலும் போரைக்காட்டி தமது கணவர்களை பறிகொடுத்த பெண்களுமாக இன்று ஒவ்வொரு தடுப்புமுகாமிற்கும் தங்கள் கணவர்களைத்தேடி பெண்கள் அலைந்து திரிவதை பார்க்க சகித்துக்கொள்ள முடியவில்லை. அண்மையில்  கணவழைனயிழந்த பெண்களின் நலன்கள் தொடர்பாக அக்கறை செலுத்த முன்வரவேண்டும் என பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்த வேளையில் பாராளமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இப்பெண்கள் விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதென்ற செய்தி ஆறுதலை தந்தாலும் இவர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என்ற அங்கலாய்ப்பும்  கணவனையிழந்த பெண்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இப்பெண்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் நிதிகளும் பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் மோசடி செய்யப்பட்ட பல சம்பவங்கள் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  ஆனாலும் சில பெண்கள் அமைப்புக்கள் கணவனையிழந்த பெண்களின் விபரங்களைச் சேகரித்தல், அவர்களுக்கு உதவி வழங்குதல், தையல் மெசின்  , மாடு ஆடு கோழி  வளர்க்க p  உதவி செய்தல்   போன்ற செயற்பாடுகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *