“என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். |
முதியவர் நாராயணன் சன்யாலை மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு அவர் ஒரு மனித உரிமைப் போராளி மட்டுமல்ல பழங்குடி மக்கள் இயக்கத் தலைவர் அவளவுதான். என்கிற அளவில் டாக்டர் பிநாயக்சென்னின் மனைவி இலினா சென் அரசியல் தஞ்சம் தரும் ஜனநாயக நாடொன்றில் தஞ்சமடைவதைத் தவிற தனக்கு வேறு வழியில்லை என்று சொல்லியிருக்கிறார். பிநாயகச் சென்தான் பாரத தேசத்தின் கற்புக்கு களங்கம் விளைவித்து விட்டார். செலீனாவையும் அவரது மகள், மகன்களையும் கூட ஏன் துரத்துகிறார்கள்.
“என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். ஆனால் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட சதிச் செயல்கள். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதன் மூலம் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக்கூடும். என்னை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கேட்பதே இப்போது எனக்கு தெரிந்த ஒரே வழியாக உள்ளது. சொந்த நாட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை. எனக்கு 20, 25 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். என் கவலை எல்லாம் அவர்களைப் பற்றிதான் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்ட் என்று அவதூறு பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்தால் அதை சட்ட விரோதமாக பார்க்கும் நிலை நாட்டில் நிலவுகிறது. என் கணவருக்கு பிறகு இப்போது நானும் அவதூறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளேன்” என்றார் இலினா சென். ” (நன்றி தினமணி).
இலினாவுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும் தொடபு என்று சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தியாவுக்கு எதிரான உளவுச் சதியில் சிக்கவைத்து ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கைது செய்ய திட்டமிட்டமிட்டிருக்கலாம் என்று செய்திகள் வரும் நிலையில் அதிகமான முஸ்லீம் நண்பர்களைக் கொண்டிருப்பது இந்தியாவில் ஒருவருக்கு எத்தகைய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் என்பதை இலினாவின் வாக்குமூலத்திருந்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மாவோயிஸ்டா? டெரரிஸ்ட்டா? நக்சலிஸ்டா? பண்டமெண்டலிஸ்டா? புலியிஸ்டா? என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது அதை முடிவு செய்வது அரசின் உரிமை என்பதை பிநாயக்சென் கைதும் தொடர்ந்து துரத்தப்படும் இலினாவின் சூழலும் நமக்கு உணர்த்துகிறது.
இலினாவை குறிவைக்க இவர்கள் இரண்டு மெயில்களைக் காரணம் காட்டுகின்றனர். ஒரு மெயிலில் அமெரிக்க ஜனாதிபதியை “We have a chimpanzee in the White House,” என்று இலினா கிண்டலாக குறிப்பிடுகிறார்.இதை சட்டீஸ்கர் போலீஸ் இது மாவோயிஸ்டுகளின் சங்கேத வார்த்தைகள். ஓபாமாவைக் கொல்ல சதி நடக்கிறது என்றும் சொல்கிற காவல்துறை அதற்கு தொடுப்பாக இலினா பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI – Inter-Services Intelligence) அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்று இன்னொரு கதையையும் சொல்கிறது. உண்மையில் இலினா புது டில்லியில் இருக்கிற Indian Social Institute என்ற ஐ.எஸ்.ஐ நிறுவனத்தில் இருக்கிற வால்டர் பெர்னாண்டஸ் என்பருக்கு ஒரு மெயிலும் வாரணாசியில் இருக்கிற காந்தி இன்ஸ்டியூட்டிற்கு இன்னொரு மெயிலும் அனுப்பியிருக்கிறார். அதைத்தான் இந்த துப்பரியும் சாம்புகள் பாகிஸ்தான் என்றும் சங்கேத வார்த்தைகள் என்றும் கதை கட்டுகிறார்கள்.
நன்றி ஆதிரை,வன்மம்