இரா.பிரேமா.
அன்புடையீர்,
வணக்கம். நான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். பெண்ணியம் குறித்துப் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். அவ்ற்றுள் பல தமிழக பல்கலைக் கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடமாகவும் நோக்கு நூல்களாகவும் உள்ளன. தற்போது பல்கலைக்கழக மான்யக் குழுவிற்காக ‘உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்கள்-யார்? எவர்?’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
புலம் பெயர்ந்து உலகம் முழுதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர்களைத் தொகுக்கும் முயற்சியாகவும் அடையாளம் காணும் முயற்சியாகவும் இது அமையும். உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களே! இதற்குத் தங்களின் இதயபூர்வமான ஒத்துழைப்பு தேவை. நான் இத்துடன் இணைத்துள்ள தன்விவரக் குறிப்புகளை நிரப்பி எனக்கு மின் அஞ்சல் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.பலருடைய குறிப்புகள் என்னிடம் இருந்தாலும் அவை முழுமையாக இல்லை. சில தகவல்களை வலைப்பூக்கள் மூலம் அறிய இயலவில்லை.
எனவே தயவு செய்து இந்த முயற்சிக்குப் பூரண ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்குத் தெரிந்த பிற பெண் கவிஞர்களுக்கும் இதை மின் அஞ்சல் செய்து தகவல்களைப் பெற உதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்.நன்றி.
கவிஞரின் தன் விவரக் குறிப்புக்கள்
– பெயர்/புனைபெயர்
– பிறந்த தேதி
– பிறந்த இடம்
– பெற்றோர்
– குடும்பம்
– கல்வித்தகுதி
– தொழில்
– கவிதை வெளியீடுகள்(ஆண்டுகளுடன்)
– கவிதைக்ள் வெளி வந்த இதழ்கள்
– பிற வெளியீடுகள்
– விருதுகளும் பரிசுகளும்
– இயக்கம்/இலக்கிய அமைப்பு சார்பு(இருந்தால்)
– முகவரி
– மின் முகவரி
– தொலைபேசி எண்/கைபேசி எண்
– புகைப்படம்(சமீபத்தியது)
– வலைப்பூ முகவரி
தொடர்புகட்கு