சந்தியா யாழ்ப்பாணம்
ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும் அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் என்றும்; இவ் கணவனையிழந்த பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் மன உள பாதிப்புக்கான வைத்திய முறைகளை செய்வதற்கான வழிவகைகளை |
யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதாக அண்மையில் வெளியாகய செய்திகள் கூறுகின்றன. வன்னியில் இன்னமும் யுத்தம் நடைபெற்ற இடங்களில் யுத்த வடுக்கள் மாறாத நிலையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தமது வாழ்வை எவ்வழியில் கொண்டு செல்வது என தத்தளிக்கின்றனர் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்கோ அல்லது உதவுவதற்கோ யாருமில்iலாத நிலையில் அவர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள். அத்துடன் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதினாலும் அவர்களின் வாழ்வு சீர்குலைந்துள்ளதினாலும் அவர்கள் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்று உளவியல் டாடக்டர் தயாளினி தியாகராஜா அண்மையில் கூறியுள்ளார்.
ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும் அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் என்றும்; இவ் கணவனையிழந்த பெண்களுக்கு பயிற்சிகள் மற்றும் மன உள பாதிப்புக்கான வைத்திய முறைகளை செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய அவசியத்தை யார் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பலர் உள்ளனர்.இதே போல் அண்மையில் ஊர்காவற்றுறையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது பல பெண்கள் காணமல் போன தமது பிள்ளைகள் கணவன்மார் மற்றும் சகோதரர்கள் எங்கே என கண்ணீர் விட்டு அழுதபடி இருந்ததை நாம் கண்டோம். அங்கு சில பெண்கள் அமைப்புக்களுக்கும் எமக்கும் உள்நுழைய அனுமதி இல்லை. ஆனாலும் அங்கு கண்ணீரில் இருந்த பெண்களிடம் உரையாடியபோது அவர்களது மனக்கொதிப்புக்களை எம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஒருவரிடம் நீங்கள் யாரை தேடுகிறீர்கள் எனக் கேட்ட போது அவர் தனது மூன்று பிள்ளைகளையும் கணவனையும் தேடுவதாக கூறி அழுதார். ஒரு குடும்பத்தில் நால்வரை தொலைத்துவிட்டு அப்பெண் இருந்ததை என்னால் உண்மையில் ஜீரணிக்க முடியவில்லை. இபபடி பல தாய்மார்கள் பெண்கள் தமது பிள்ளைகளை தேடி முகாம்களின்வாசலிகளிலும் சிறைகளுக்கு முன்னாலும் முடங்கி கிடக்கிறார்கள். இந்த அவலம் இன்னும் எத்தனை சகாப்தத்திற்கு நிலைக்கும் என்ற அச்சம் எம் மனதில்….???
0 Comments on “யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சி”