மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் அரச வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் 65 வயதாகும் சூகி 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவர் மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இதனையடுத்து இராணுவ அரசு அவரை தொடர்ந்து சிறை வைத்துள்ளது. இந்நிலையில் அவரது தண்டனை காலம் நவம்பர் 13ஆம் தேதியுடன் (இன்று) முடிவுக்கு வருகிறது. இதனால் அவரை விடுவிக்க வேண்டிய கட்டாயம் மியான்மர் இராணுவ அரசுக்கு ஏற்பட்டுள்ளது. |