பிறெளவ்பி (மட்டக்களப்பு )
என்னைக் கைது செய்து
மௌனிக்க வைத்து
தடுமாற்றித்
தீண்டித் தழுவி
என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!அப்போது என் மனம்
நீ என் மீது வைத்துள்ள
காதலையும் நம்பிக்கையையும்
ஆய்வு செய்து
அறிக்கை எழுத தவறவில்லை.!
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பதுதான் – காதல்!
என் விருப்பு வெறுப்புக்களைத் துறந்து
உனக்காக மட்டும் வாழ
ஊமைக் காதலியா?
அன்பை அதிகாரம் செய்து
கேட்க எனக்குப் பிடிப்பதில்லை
அது நிலைக்காது என்பதால்.
உன் அன்பு போலி என்று
உணர்ந்தாலும்
பேதை மனம் கேட்பதில்லை
நீயே வேண்டும் என்கிறது!
உன் பொய்களுக்குள் நான்
நிஜமாகவே வாழ்கிறேன்.
என் நம்பிக்கையில்
காலத்தைக் கழிக்கிறேன் – உனக்காக
உன்னைக் குறித்து ஆயிரங்
குற்றங்கள் சுமத்தப்பட்டாலும்
உன்னை விட்டுவிடும்
திராணி எனக்கில்லை.
இறைவா..
அதுவாக விரும்பாத போது
அதன் மீது என் மனம்
அசையாத ஆசை கொண்டதன்
அர்த்தம் என்ன?