புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் உண்டு.அதே சமயம் குழந்தை பேறு இல்லாத இராணிகள் முனிவர்களின் ஆசியினால் குழந்தை பேறு பெற்றதும், இன்னும் பரிசென ஐவருக்கு மனைவியாக பாஞ்சாலி பணிக்க பட்டதும் இதே புராண கதைகளில் உண்டு. இதில் பாஞ்சாலியின் விருப்பம் என்ன என்று யாரும் கேட்கவில்லை என்பது புறமிருக்க, பந்தயத்தில் அவளையே பணயம் வைத்த கணவன் கதையும் உண்டு. சபை நடுவே துகிலுறிய துச்சாதனன் முறப்ட்ட போது மூத்தோர் கூடிய அவையில் அனைவரும் உயிரை பணயம் வைத்து காத்திருக்க வேண்டாமா? இல்லை ஏன் என்றால் அவமானப்பட்டது பெண் அல்லவா?இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.
இதற்கு பின் வந்தது தீவக கற்பு என்பார். அப்போது பார்ப்பதோ பேசுவதோ தவறில்லை, தொட்டால்தான் தவறு கற்பிழந்தவர் என்ற நிலை வரும். இந்நிலையில் தான் கம்பர் சீதையை குடிலுடன் இராவணன் தூக்கி சென்றதாக கூறுகின்றான்.பேருந்துகளின் இடிமன்னர் இடையில் சிக்கி திணசரி அலுவலகம் இன்ன பிற இடங்களுக்கு பெண்கள் செல்வது தங்களுக்கும் தேவையானதாக இருக்க, அதே சமயம் பெண்களுக்கும் உரிமை தருவது போல ஆண்கள் இதை ஏற்று கொண்டனர்.
நான் இரண்டு வருடம் முன் இந்தியா தஞ்சை பெரியகோவிலுக்கெ சென்றேன். அங்கே பள்ளி சிறுவர், சிறுமிகள் தூணுக்கு இருவராய் அமர்ந்து கொண்டு உறவாடிக்கொண்டிருந்தனர். திருமணத்துக்கு முன் உறவாடுதலில் தவறில்லை எனவும், உறவு கொள்வதாகவும் கருத்து கணிப்புகள் பல டீசவைiளா அநனiஉயட தழரசயெட இல் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் செய்தால் அது சரியாகிவிடுமா? புகை பிடித்தல் மது அருந்துதல் போல இது தனிநபர் செய்கை அன்று. இரண்டு பேர் வேண்டும் அது ஓரின சேர்க்கையாக இருந்தாலும். அப்படி இருக்க பெண்கள் மீது மட்டும் தடை எதற்கு? பள்ளி சிறுமிகளிடம் பலாத்ககரம் செய்யும் ஆசிரியர்களை தண்டிப்பீர்களா?
திருமணமான ஆண்கள் அனைவரும் உத்தம சீலர்களாயின் இத்தனை குடும்ப பெண்களுக்கு யுஐனுளு, ளுவுனு வந்தது எப்படி? தாணுவின் பதிவில் உள்ள புள்ளிவிவரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.குழந்தைப்பேறு இல்லை என்ற காரணத்திற்காக தன் மைத்துனன், மானார் போன்றோருடன் வலுக்கட்டாயாமாக உறவு கொள்ள செய்யப்படும் பெண்களை பற்றி அறிவீர்களா? இல்லை என்றால் தனக்கு வேலை இல்லை என்பதாலும் தன் தந்தையின் சொத்துக்களில் வாழ்வதாலும் தன் மனைவியின் குற்றச்சாட்டுக்களை ஒதுக்கி என் அப்பாதானே இப்ப என்ன வந்தது என்று சொல்லும் கணவர்களை பார்த்திருக்கிறீர்களா?
நாடுவிட்டு நாடுவந்து தன் மனைவியை தன் தம்பி மற்றும் தந்தையுடன் கட்டயாப்படுத்தி நிர்வாணமாக்கி துன்புறுத்திய கணவனை பற்றி என்ன சொல்கிறீர்கள்? இங்கே எல்லாமல் கற்பிழந்தவளாக நீங்கள் சொல்லும் அந்த நிலைக்கு வற்புறுத்தியவர்கள் சீலர்களோ?
மெஹ்ரோலி என்ற ஊரில் பல ஏழை குடும்ப குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனைகள் செய்திருக்கிறேன். குழந்தைகளின் தந்தை ஒருவரே இருந்தது இல்லை. இது பற்றி அவர்களும் அறிவார்கள். இது சகஜமாக ஏற்று கொள்ள பட்டிருக்கிறது.குடியின் மயக்கத்தில் தன் 5 வயது பெண்ணை வன்புணர்ந்த தந்தைக்கு தண்டனையே இல்லை. தாயிடம் 5000 ரூபாய் தந்ததாக படித்தேன். 16 வயதான தன் பெண்ணிடம் உறவு கொண்டு அந்த பெண் தன் தந்தையின் கருவையே தாங்கி இருக்கும் அவலத்தையும் ஜூனியர் விகடனில் படித்தேன். தன் அண்ணியுடன் உறவு கொள்ள அவளை வற்புறுத்தி அவள எரிந்து போன கோரத்தையும் பார்த்தேன்.
அது கணவன் மனைவி உறவாயினும், நட்பாயினும் அல்லது சகோதர சகோதரி உறவாக இருந்தாலும். ஒழுக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதற்கென அவரவர்க்கு அளவுகோல் உண்டு.
இப்படிப்பட்ட சில சட்டதிட்டம் கூக்குரல்களால் பாதிக்கப்படுவது பெண்களே. எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டிருக்கின்றனர்? எத்தனை பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்? மும்பை நகரில் காரில் பெண்கள் அமர்ந்திருக்க ஆண்கள் சாவிகளை குலுக்கி போட்டு மாற்று காருக்கு சென்று இரவை பெண்களுடன் கழிக்கும் கலாச்சாரம் இருக்கிறது. மறுநாள் சாவிகள் மேசையில் குவிக்கப்பட்டு அவரவர் தம் காரின் சாவியை எடுத்து கொண்டு சென்றுவிடுவதாக கேள்விப்பட்டிருகிறேன். யாருடன் உறவு என்பது ரகசியமாக இருக்குமாம். மேல்தட்டில் செல்வந்தர்கள் செய்தால் அது சரியோ?
இப்படிப்பட்ட சில செய்திகளால் ஊர் என்ன சொல்லுமோ என்பதற்காக பயந்து அவசர முறையில்லா கருச்சிதைவுகளால் உயிரழந்த பெண்களும் நோய்வாய்ப்படுகின்ற பெண்களும் உண்டு.
இந்த வார அவள் விகடனில் தன் பெண் கெட்டுவிடுவாளோ என்று பயந்து திருமணம் நிச்சயம் செய்து விட்டிருக்கின்றனர். இருவரும் இரண்டு வருடம் பழகி பெண் நம்பிக்கையை வளர்த்து விட்டிருக்கிறாள். இந்நிலையில் நட்சத்திரம் சரியில்லை என்று பெண்ணை நிராகரித்திருக்கிறார்கள். இரண்டு வருடமாக பழகிய பையனோ பெற்றோரின் வாக்கே என் வாக்கு என்று விலகிவிட இப்போது அந்த பெண் குழம்பி போயிருக்கிறாள். மனத்தால் நான் வாழ்வது இவனுடந்தான். எப்படி இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று. அவளின் பெற்ரோர்கள் அவனை மறந்துவிடு, இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறோம் என்கிறார்களாம்.
கவலை பட எத்தனையோ விஷயம் இருக்க ஆதிக்கம் செலுத்த ஒரு ஆயுதம் தேடி போகாதீர்கள்.
oct20 05