வடிவமைக்கபட்ட குழந்தைகள் – CUSTOMIZED BABIES – -பத்மா அரவிந்த் (அமெரிக்கா)

1984 முதன் முறையாக அலன் ட்ரொவுன்சன் என்பவரின் பரிசோதனை சாலையில் ஒரு அண்டம், விந்தணுக்களுடன் சேர்ப்பிக்கப்பட்டு ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.குழந்தை வேண்டுமென்ற பெற்றோர் நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தனர். “அழகான, 25 வயதிற்கு உட்பட்ட, நன்றாகப் படிக்கக்கூடிய பெண் தேவை. விளையாட்டுக்களில் தேர்ந்தவளாகவும், நீல நிறக் கண்கள் கொண்டவளாகவும் இருந்தால் பரிசீலிக்கப்டும். தகுந்த ஆதாரங்களுடன் வருக” என்ற விளம்பரத்தைப் படித்து விண்ணப்பித்த பெண்களில், கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பெண் ((SAT Score 1560> basket ball player) ) தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

அவளின் கோடை விடுமுறையில் அவளை மருத்துவர்கள் நன்றாகப் பரிசோதித்து எந்த வித நோய்களும் இல்லை என்று முடிவெடுத்த பின் அவளுக்கு கூ5000 பணமும், ஒரு வாரம் அவள் விரும்பும் இடத்தில் விடுமுறைக்கான செலவும், கல்லூரியில் படித்து முடிக்கத் தேவையான பணமும் தரப்பட்டது. அவள் செய்ய வேண்டியது வெகு சுலபம். அவளுக்கு ஈஸ்ட்ரோஜன் ஊசி செலுத்தி, மாதம் சுரக்கும் ஒரு அண்டத்திற்குப் பதில் பல அண்டங்களை சுரக்க செய்து, பிறகு அவற்றை எடுக்க ஒத்துழைக்க வேண்டும். மாதந்திர வலி அதிகம் என்றாலும், மிக எளிய வழியில் பொருள் சம்பாதிக்க முடியும் என்பதால் பல iஎல டநயபரந கல்லூரிகளில் இதற்காகத் தயராகும் மாணவிகள் ஏராளம்.

இதுபோலவே ஒரு நல்ல ஆண்மகனைப் பிடித்து விந்தணுக்கள் பெற்று, ஒரு கருவை உருவாக்கினார் மருத்துவர் அலன். குழந்தைப்பேறில்லா ஒரு தம்பதியிடம் இதை 50,000கூ விற்று, அவளின் வயிற்றில் செலுத்தி முதல் குழந்தை பிறந்தது. இப்போது இதுபோல முட்டைகளை விற்கும் பெண்கள் ஏராளம். இவர்களிடம் “உன்னுடைய ஜீன்களை வெளியே பரவவிடுவதைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன” என்று கேட்டபோது, அவள் சொன்னாள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை? பாலியல் வியாபாரத்தை விட இது எளிதல்லவா. மாணவி உதவியாளராக கடினப்பட்டு படித்து முடிந்து என் தலைக்கு மேல் கடன் இருக்கும் போது எனக்கென்ன பாராட்டுப் பத்திரமா வழங்கப் போகிறார்கள். Easy money> easy life”.

தனக்கு சம்பந்தமில்லா ஒரு குழந்தையை தன்னுடைய கருப்பையிலே வளர்த்த ஒரு காரணத்தினாலேயே தன்னுடைய வாரிசாகப் போற்றும் நிலை.
மருத்துவ ஆரய்ச்சியினால் பலதரப்பட்ட குழந்தைகளும் பிறக்க வாய்ப்பு உண்டு. இந்தியப் பெற்றோருக்கு பிறக்கும் சீனக் குழந்தையும், ஆப்பிரிக்க அமெரிக்கருக்குப் பிறக்கும் வெள்ளைக் குழந்தைகளும் பிற்காலத்தில் குழப்பமும் கோபமும் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்கலாம். இந்தக் குழந்தைகள் வளர்ந்து மாறுபட்ட குணங்களைக் கொண்டிருந்தால் பெற்றோரால் கடிந்து கொள்ளப்படலாம்.

பல நோய்களுக்கு மூலக்கூறுகளே காரணம என்கின்றபோது ஒரு சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யவேண்டும் என்றாலும் பெற்றோர்கள் கூட தானம் தர முடியாமல் போகலாம். சமுதாய குழப்பங்கள், மன உளைச்சல்கள் இவற்றைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எத்தனை தவறு?

ஆனால் இவ்வாறு முட்டையை விற்கும் பெண்களுக்கான விற்பனை திட்டம் பிகவும் கவர்ந்திழுக்கக் கூடியது. 1-877-BABY makers என்ற எண்ணை சுழற்றினால் போதும். இன்னும் சில விளம்பர வாக்கியங்கள் ஒரு உயிரை பரிசாக தாருங்கள் அல்லது “உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க முட்டைகளை தாருங்கள் என்றும் உற்சாகமூட்டுகின்றன.

அமெரிக்காவில் இது ஒரு உயர்ந்தரக நுணுக்கமான பரிசோதனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் பெயர்கள், அவர்கள் சாதனை, படிப்பின் தேர்ச்சி எண் போன்ற விவரங்களுடன் ஒரு புல்ளியல் விவரமாக கிடைகிறது. இதிலிருந்து விருப்பட்டவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.முஸ்லிம் நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளில் முட்டைக்கு பணம் வழங்குவது சட்டப்படி தடையாக உள்ளதால் இவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வருகிறார்கள்.சிண்ட்லர் என்ற பெண் ஆப்ஷன் என்ற நிறுவனத்திற்கு முட்டைகளை தர சென்றபோது அவர்கள் கேட்ட குடும்ப மருத்துவ வரலாறு கேள்விகளில் உள்ள நுணுக்கங்களைக் கண்டு அதிசயித்துப் போனார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் முட்டைகள் ஒரு வங்கியில் சேர்க்கப்பட்டு பார்வையாளர்களால் ஒரு சாதாரண பொருள் வாங்குவது போல பரிசோதிக்கப் படுகிறது.ஆப்ஷன் நிறுவனம் யாரையும் திருப்பி அனுப்புவதில்லை. ஒரு ஆசிய இனத்தை சேர்ந்த பெற்றோர்கள் வெள்ளை காகேசியன் முட்டை தேடி வர அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்திருக்கிறது. இதேபோல ஓரின சேர்கையாளர்கள், வயதானவர்கள் என்று பலருக்கும் கடைவிரிக்கிறது.

68 வயதான மூதாட்டிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள உதவி இருக்கிறார்கள். இவரால் அந்தக் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள முடியும் என்பது போன்ற கேள்விகளில் இவர்களுக்கு விருப்பம் இல்லை. கீழே உள்ள உதாரணம் இந்த முறை எப்படிப்பட்ட சிக்கலை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்பதை தெளிவாக்குகிறது:நிறைய உறவுப் போராட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் பார்த்துமிருக்கிறேன். ஆனால் இதுபோல ஒன்றை இப்போதுதான் பார்க்கிறேன். அகண்ட விழிகளும் குறும்பு மொழியும் இருக்குமிடத்தில் அனல் போல கோபமும், ஆறாத சினமுமாக நீதி கேட்டு வந்தான் ஒரு சிறுவன், 6 வயதுபாலகன். பள்ளி கவுன்சிலருடன் வந்திருந்தான். மிட்டாய் கேட்டு வந்திருந்தால், இப்படியா முட்டாள்தனம், நன்றிகெட்ட முரட்டுத்தனம் நமக்குதவா பாலகரே என்று சொல்லி இருக்கலாம். ஆனால் கேட்டது தன் தந்தையை அல்லவா?

அழகான புத்திசாலியான வழக்கறிஞர், படித்தது மிகவும் புகழ் பெற்ற பள்ளியில், ஊதியமோ 6 இலக்கத்தில். அவளுக்கு குழந்தைகள் என்றால் பிரியமதிகம். ஆனால், வந்ததோ கொடிய புற்றுநோய். மருத்துவர் ஆலோசனை பேரில், 2 வருடம் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி வைத்திருந்தாள். அந்த நாளும் வந்தது. மருத்துவர் அவள் கருவுற தடை ஏதுமில்லை, பூரண குணமாகிவிட்டது என்றதும், அழைத்தாள் தன் பள்ளி நண்பனை. அவரும் நல்ல புகழ் பெற்ற வக்கீல். புத்திசாலி. அவளின் வேண்டுகோள் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்பதே. திருமணம் என்பதில் இருவருக்கும் விருப்பமில்லை, ஆனாலும் தந்தை என்ற பந்தத்தில் சிக்கிக் கொள்ளவும், பின்னால் தன்னை உhடைன ளரிpழசவ என்று வாழ்க்கை பூராவும் அவஸ்தைப்படவும் அவருக்கு விருப்பமில்லை. முன்னாள் தோழியிடம் சொல்லிப் பார்த்தார், அவள் ஒரு ஒப்பந்தம் எழுதி, எந்த நாளிலும் அவருடைய பெயரை தெரிவிக்க மாட்டேன், எந்த நிலையிலும் பிறக்கும் பிள்ளைக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டபின் அவள் கருவுற்றாள்.குழந்தை பிறந்தபின் அவள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. குழந்தை மெல்ல பிற குழந்தைகளின் தந்தையைப் பார்த்து, தன் அப்பா எங்கே எனக் கேட்டு பயனின்றி, தன் தந்தை இறந்துவிட்டதாக சொல்லி வந்திருக்கிறது. மற்றக் குழந்தைகள் தங்களின் தந்தையைப் பற்றி பேசினாலோ, கயவாநசள னயல என்றாலோ வழலள உடைத்தும் அடித்தும் வந்திருக்கிறான். ஒரு கட்டத்தில், பள்ளி கவுன்சிலருக்குப் பொறுக்காமல் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.


இங்கே யாருடைய உரிமை முக்கியம் என்பதே வழக்கு. தன் விருப்பப்படி கருவறுவதையும், கர்ப்பத்தையும் உணரவேண்டும் , தனக்கும் ஒரு பிள்ளை வேண்டும் என்ற தாயினுடையதா, தன் பெயர் வெளியில் வரக்கூடாது எனக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்ற தந்தையுடையதா, அல்லது என் பெற்றோர் யாரென்று எனக்கு தெரிய வேண்டும் அது என் உரிமை என்கிற பிள்ளையுடையதா? நீதிபதியும் ஜூரர்களும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

ஒரு முட்டை விற்பவர், வாங்குபவர் இவர்களை சந்திக்க வைக்க, சட்டப் பிரச்சினையை தீர்க்க என்று கிட்டதட்ட பத்தாயிரம் டாலர்கள வரை பெற்றுக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கும் அடிக்கடி நிறைய முட்டை உற்பத்தி செய்ய மருந்துகள் தரப்படுவதால் பல இனப்பெருக்க உறுப்புகள் சம்பந்தமான நோய்கள் வருகிறது. இதனால் சாதாரண மாதவிலக்கு தடையாகி, மேலும் வலியும் வேதனையும் அடைகிறார்கள். ஆனால் தங்கள் கல்லூரி கட்டணம் கட்ட வேண்டிய கவலை இல்லை எனவே, சமாதானமாகி தயாராகிறார்கள். தேவையான விந்தணு வங்கிகளில் பெற்று, முட்டையையும் இன்னொரு பெண்ணிடம் பெற்று, பணம்கொடுத்து வேறொரு பெண்ணை கரு சுமக்க செய்து பெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கொண்டுவரும் குழந்தையிடம் என்ன வாரிசுத்தன்மை இருக்க முடியும்? இதற்கு பதில் ஏன் ஒரு ஏழை அனாதைக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டு வளர்க்கக் கூடாது?

 sep.2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *