உன்னத சங்கீதம் – -றஞ்சி (சுவிஸ்)

அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலைப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் திருடர்களுக்கு… என்று இப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் கட்டப்பட்ட இந்த மேற்கூறியவர்களுக்கு… என்று சொல்வதன்மூலம் மற்றைய அதிகார சக்திகள் இதற்குள்ளிருந்து விலக்குப்பெறுகிறார்கள். தொகுப்பாளர்கள் பேசும் பின்நவீனத்துவத்தின் பன்முகப் பார்வை இயக்க எதிர்ப்புக்குள் குறகிப்போய்விட்டதா என்ற சந்தேகத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு உன்னத சங்கீதத்தை பார்ப்போம்.

பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை பற்றி அடிக்கடி நாம் கேள்விப்பட்டாலும் இப்படியான வன்முறைகளை தோற்றுவிக்கும் ஆணாதிக்கர்கள் பெண்களை போகப் பொருள்களாக சித்தரிப்பதிலேயே உள்ளார்கள். இவர்களை நிராகரித்துவிட்டுஇ பாலியல் இலக்கியம் படைக்கப் புறப்படும் சிலர் புதிய மொந்தையில் பழைய வக்கிரத்தை ஊற்றுகிறார்கள்.

சாருநிவேதிதாவின் உன்னத சங்கீதம் இதை கச்சிதமாக செய்கிறது. பாலியல் ~சேட்டைகளில்| தன்னைவிட முதிர்ச்சிபெற்றவளாக ஒரு 13 வயதுச் சிறுமி உருவாகிறாள். அவள் இவருக்கு உன்னத சங்கீதத்தை ஊற்றுகிறாள். பாலியல் வக்கிரத்தைஇ பாலியல் அதிகாரத்தை ஆணிடமிருந்து பெண்ணிடம் மெல்ல வஞ்சகத்தனமாக கைமாற்றுகிறார் சாருநிவேதிதா. இதுதான் அவரின் புதிய மொந்தை. பாலியல் கல்வியை போதிக்கும்இ பாலியல் பற்றி பெற்றோருடனேயே சாதாரணமாக விவாதிக்கும் பக்குவப்பட்ட இந்த மேற்குலக வாழ்வியலிலேயே இந்த வயதை பாலியல் முதிர்ச்சி பெறாத வயதாக கருதுகிறார்கள். சட்டங்களால் பாதுகாப்புக்கூட கொடுக்கிறார்கள். சாருநிவேதிதா நுழைந்த சமூகம் எங்கிருக்கிறதோ தெரியவில்லை.

இங்கு பெண்ணைப் போகப் பொருளாக சித்தரிப்பது மட்டுமல்லாமல்இ 13 வயது சிறுமி மீது உளரீதியானதும் உடல் ரீதியானதும் வன்முறையை பாவித்து தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்கிறார் என்று வரவேண்டியிருக்கும் வழியை புத்திஜீவித்தனமாய் அடைத்துவிடுகிறார். அதாவது அந்தச் சிறுமி பாலியல் மேலாதிக்கம் பெற்றவளாக காட்டப்படுவதன்மூலம் இதைச் சாதிக்கிறார். பெண்ணை போகப்பொருளாக்கவில்லை என்று சாதித்துக் கொள்வதற்காக இந்த எதிர்ப்பால் உறவுக்கு வெளியே வந்து ஓரினச் சேர்க்கையிலும் இன்பம் காணும் பாலியல் எல்லைக்குள் விரிந்து நிற்பவனாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். பெண்ணை நேரடியாகவே பாலியல் பண்டமாய் சித்தரிக்கும் வியாபார செக்ஸ் எழுத்தாளர்களைவிடஇ பொறுக்கித்தனமான வெட்டியோடலே இவ்வகை எழுத்து.

இந்தப் பாலியல் செயற்பாட்டு விபரிப்புகள் எல்லாம் ஒரு போர்னோ படப்பிடிப்புகளை வர்ணிப்பது என்பதற்கும் மேலால் போகவில்லை. பாலியல் உணர்வு என்பது இலக்கியப்படுத்தப்பட்டதாக தாக்கமேதும் இல்லை. பாலியல் உறுப்புகளை நடப்பிலுள்ள வார்த்தைகளால் வெளிப்படையாக எழுதுவது என்பதே ஒரு கலகம்போலஇ ஒரு புதுமையை நிகழ்த்திவிட்டதுபோல நினைக்கிறார்கள்; சில எழுத்தாளர்கள். இந்தச் சொற்களையெல்லாம் மதுவெறியில் மனைவியைத் துன்புறுத்தும்போது சாதாரணமாக கொட்டித் தீர்க்கும்; ஆண்களின் குரல்களைத் தாண்டி இவர்கள் என்ன புதுவகை மொழியை கையாள்கிறார்கள் என்பது புரியாமலே இருக்கிறது. இதேபோலவே பாலியல் பொய்கள் என்று சொல்லப்படுகின்ற போர்னோ படங்களைவிட சாருநிவேதிதாவின் மசாலா எங்கு வேறுபடுகின்றது என்பதும் புரியாமலே இருக்கிறது. ~~எனது கதையை விளங்கிக் கொள்ள உங்களுக்கு அறிவு போதாது என்பார்களோ தெரியவில்லை.||

ஒரு பெண்ணை அவளது உடல் உறுப்புகளுக்குள் குறுக்கி விட்டு உடலுறுப்புக்களை ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாகக் கூட பார்க்காமல் உடலைச் சிதைத்து பகுதி பகுதியாக பார்க்கிறது ஆணாதிக்கப் பார்வை. அத்துடன் பெண்ணை ஒரு மனிதஜீவியாகப் பார்க்காமல் ஒரு பாலியல் பண்டமாகவே பார்க்கிறது. பாலியல் உறவானது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு வன்;முறைதோய்ந்த உறவாக உள்ளது. இந்தவகை வக்கிரங்களைஇ 13 வயதுச் சிறுமியின் பாலியல் செயற்பாட்டை மேலாதிக்கம் பெற்றதாகக் காட்டுவதன்மூலம் நைசாக மறைத்துவிடுகிறார் சாருநிவேதிதா. ஆணாதிக்கத்தின் சூழ்ச்சியில் கைதேர்ந்தவராக ஆகிறார். அந்தப் பெண்ணுடைய வாழ்வுஇ விருப்பு வெறுப்புகள்இ உணர்வுகள்இ உணர்ச்சிகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு அவளை ஆபாசமாகவும் ஆண்களுக்கு இன்பம் தருவதாகவுமே சித்தரித்துள்ளார்.

பாலியல் செயற்பாடு என்பது அறிதலுக்கு மட்டுமன்றிஇ அனுபவம் சார்ந்துமே விரிவடையத் தொடங்குகிறது. அது ஒரு வெறித்தனமான செயற்பாடாக சிலரிடம் வெளிப்படுவது என்பதுகூட இந்த அனுபவத்துள் நுழைவதன்மூலமே படிப்படியாக சாத்தியப்படுகிறது. இங்கு பாலியல் அறிதலை தொடங்கும் 13 வயதில் அவள் ஒரு தேர்ந்த பாலியல் செயற்பாடுள்ளவளாக காட்டப்படுவதும்இ அவளோடு பாலியல் உறவில் ஈடுபடுவதும் -சிறுவர் மீதான- பாலியல் துஷ்பிரயோகமாகவே கருதப்படவேண்டியது. குழந்தை வளர்ப்பு என்றாலே மாடு வளர்ப்புஇ பன்றி வளர்ப்பு என்ற வரிசையில் பார்க்கும் சில கோமாளித்தனமான கலகக்காரர்களின் பாசறையில் இளம் பருவத்தினர் மீதான பொறுப்புணர்வை நாம் தேடுவது முட்டாள்தனமானதுதான். சாருநிவேதிதாவின் கதையும் அதைத்தான் சொல்கிறது.

தமிழ்ப் போராளிகள் யோனின் கண்ணெதிரிலேயே அவரின் தாயாரையும் தங்கையையும் கொன்றார்கள்@ அதனால் வெறிகொண்டு யோன் இராணுவத்தில் சேர்ந்தான் என்பதெல்லாம் -தீவிரவாதிகள் என்பது பற்றியான- மணிரத்தினம் பாணி புரிதலையே நினைவுபடுத்துகிறது. அதிலும் பாருங்கள்இ யோனின் தகப்பனோ சகோதரனோ ஆண்பிள்ளையோ அல்லது குழந்தையோ கொல்லப்பட்டது என்று சாருநிவேதிதாவின்; பேனா மறந்தும்கூட எழுதாது. பெண்கள் தான் அந்தப் பேனாக்குத் தெரிந்த மனித இனம்.

கலவியின் மூலம் தன் மரணத்திலிருந்து உயிர்த்தெழுகிறேன் கிறிஸ்துவின் ரூபம் யோனியாய் மலர்ந்து என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது என்று சாருநிவேதிதாவின் வார்த்தைகள் குரூரம் கொள்கின்றன. சாருநிவேதிதா போன்றவர்கள் இந்திய அமைதிப்படையில் சேர்ந்து ஈழம் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தால்இ இன்னும் கோரமான கனவுகளே எழும். வதைகளில் இன்பம் காணும் மனோவியாதி பிடித்தவனாக மாறி குரூரம் கொள்கிறது அந்தப்; பாத்திரம். கொடுமைகளைக் கண்டு போர்க்குணம் கொண்டெழுந்தது ஈழப் போராட்டம். போராட்ட முறை பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இந்த உண்மையை இங்கு சொல்லவேண்டியுள்ளது. சாருநிவேதிதாவுக்கோ சிலுவையில் அறையப்படும் குரூரம் காமப் பசியை எழுப்புகிறது. இந்த அழகில்இ சமூகப் பொறுப்பில் கதையின் ஆரம்பத்தில் ஈழ நிலைமைகளுக்கூடாக வந்துபோவது தாஜா பண்ணும் வேலையோ என்று எண்ணத் தோன்றுகிறது.


“சின்னத்தனமாக ~உங்கள் ஆண்குறியைக் காட்டுவீர்களா| என சாருநிவேதிதாவை (பரீஸ் இலக்கியச் சந்திப்பில்) கேலி செய்தீர்கள்@ இதற்கும் சிலர் பல்லைக் காட்டினீர்கள்” என்று ஷோபாசக்தி ~அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு| என்று “அம்மா”வில் (இதழ்-13) எழுதியுள்ளார். ஷோபாசக்திக்கு அந்தக் கேள்வி ஆத்திரமூட்டியிருக்கிறது@ உன்னத சங்கீதம்… என்ன செய்கிறதோ? சாருநிவேதிதாவோ தான் நாலு வயதிலேயே தனது ஆண்குறியை பட்டனைத் திறந்து வேண்டுமென்றே -பெண்களின் கேலியை ரசிப்பதற்கு- வெளியே காட்டித் திரிந்ததாக சாதாரணமாக எழுதியிருப்பது ஷோபாசக்தியின் ஆத்திரத்திற்கான பதிலோ என்று எண்ணத் தோன்றுகிறது. குமுதம் வார இதழில் சாருநிவேதிதா தன்னை (சைபர் பாகை) குளிரில் நிர்வாணமாக நிற்கவைத்து சாகடிக்கப் பார்க்கிறார்களோ என்று எண்ணத் தோன்றியது என்று கோமாளிபோல் சொல்கிறார். கூட்டம் என்ன தெருச் சந்தியிலா நடந்தது என்று வாசகர்கள் கேட்டுவிட மாட்டார்களா என்றுகூட யோசிக்காமல் பினாத்தியுள்ளார். இதைவிட இப்படிக்கேட்டவர்களில் ஒருவர் உயிர்நிழல் ஆசிரியர் லக்ஷ்மி என்று பொறுக்கித்தனமாக வேண்டுமென்றே பொய்யை எழுதியுள்ளார். கேட்டவர்களில் ஒருவர் பெண் என்பதை தமிழக வாசகர்களுக்கு சொல்லி இன்னொரு வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்று.

சாருநிவேதிதா, ஷோபாசக்தி எல்லோருமே “கோப்பை கழுவி உழைத்த பணம்” என்று அழுத்தி அழுத்திக் கூறுகின்றனர். இந்த கோப்பை கழுவுவது என்பது ஒரு இழிவான தொழில் என்ற கசடு இவர்களின் மண்டைக்குள் இருப்பதை இது தெளிவாகவே காட்டுகிறது. முதலாளிமாரும்தான் றெஸ்ரோறன்ட் இல் தேவையானபோது கோப்பை கழுவலைச் செய்கிறார்கள் என்ற சாதாரண விடயம் இந்த கோப்பை கழுவிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொள்ளும் விளிம்புநிலை எழுத்தாளர்களின் தவிர்ப்புக்கு உள்ளாகிறது. இது சிரிப்புக்குரிய விடயம். கோப்பை கழுவிய பணத்தில் பரீஸ் வந்துபோனதில் சாருநிவேதிதா பெருமைப்படுவதாக வேறு -குமுதத்தில்- எழுதுகிறார். இது அற்பத்தனமானது. புலம்பெயர்ந்து வந்தவர்கள் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்கஇ ~கோப்பை கழுவலில்| வரும் பணத்தில்தான் தமது தாய் தந்தையரை -ஒருசில மாதங்களுக்கு- கூப்பிட்டு (விசா வசதியுள்ள) புலம்பெயர் தமிழர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது சாதாரண விசயம். இந்த விசயம்கூட தெரியாமல் பரீஸ் க்குள் அடைந்துகிடந்துவிட்டு போன சாருநிவேதிதா ஐரோப்பிய பயணம்இ புலம்பெயர் எழுத்தாளர்கள் (அவரின் பாசையில் தயிர்வடை எழுத்தாளர்கள்) பற்றியெல்லாம் பேசமுடிவதை என்னவென்பது. அடுத்துஇ இந்தப் பணத்தில் சிவகாமியையும் கூப்பிட்டதாக இவர்கள் சொந்தம் வேறு கொண்டாடுவது சுத்தப் பொய். சிவகாமி பெண்களின் (இவர்களின்; வார்த்தையில் சொன்னால் ~கோப்பை கழுவும்| பெண்களின்) பணத்தில்தான்இ அதுவும் பெண்களின் முழு முயற்சியினால்இ பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக வரவழைக்கப்பட்டார். தமக்கு சாதகமானபோது இழுத்துப் பிடித்து சொந்தம் கொண்டாடும் சந்தர்ப்பவாதமாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது.

~உன்னத சங்கீதம்| சம்பந்தமாக தொகுப்புரையில் தமது கருத்து என்ன என்பதை தொகுப்பாளர்கள் ஷோபாசக்திஇ சுகன் சொல்லவேயில்லை. “எஸ்பொவின் தலித்தியம்இ பெண்ணியம்இ புலிகள்இ இலக்கியம் குறித்து அஞ்சு சேத்துக்கும் உடன்பாடு இல்லை” என்று குறிப்பிட்டுள்ள தொகுப்பாளர்களின் இந்த உன்னத சங்கீதம் பற்றிய கருத்துத்; தவிர்ப்பு உடன்பாட்டின் அறிகுறி என்றே கொள்ளவேண்டியுள்ளது. சாருநிவேதிதாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள புலம்பெயர் எழுத்தாளர்களின் ~உன்னத சங்கீதம்| மீதான ரசனை வெளிப்படையாக வைக்கப்படுவதற்கு மாறாகஇ சான்றிதழின் பின்னால் மறைந்துபோய்விடாமல் இருந்தால் சரிதான்.

நன்றி பெண்கள் சந்திப்பு மலர் 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *