10 வது வருடத்தில் சக்தி


இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் ஆண்டு மார்ச் இதழுடன் சக்தியின் ஆசிரியர்குழுவில் அங்கம் வகித்த மைத்ரேயி விலகிக் கொண்டார்.

அதற்குப்பின்பு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் தயாநிதி (நோர்வே) மூலம் சக்தி மீண்டும் வெளிவரத் தொடங்கியது இதுவரை 23 சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. அச் சஞ்சிகைகள் பலருடைய எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் விதமாக அமையாத போதிலும் சஞ்சிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது உண்மையாகும். ஆரம்பத்தில் சந்தா சேகரிப்பதற்காக நாங்கள் வீடுவீடாகவும் பஸ்தரிப்பிடம் புகையிரதநிலையம் தென்பட்ட ஆசிய முகங்களுடன் எல்லாம் நாம் பேச முயற்சித்தோம.
;
ஆரம்பத்தில் சுவரொட்டிகள் தேபான் நிலையத்தில் சஞ்சிகையை எரித்தமை போன்ற எதிர்ப்புக்களுக்கும் எதிர்காலத்தில் தமிழ்;ஈழவிடுதலைப்புலிகளுக்கு சார்பான சஞ்சிகையாக சக்தி வெளிவரும் என்ற சில புத்தி சீவிகளின் பிரச்சாரங்களுக்கும் நாம் முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

1992 ;ம் ஆண்டில சக்தியை நான் தனியாக பொறுப்பெடுக்கும் போது என்னால் தொடர்ந்து சக்தியை கொண்டுவர இயலுமா என நான் தயங்கிய வேளையில் என்னுடன் தோள் கொடுத்த வர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.

பல சிரமங்களுக்கு மத்தியிலும் கவிதை கட்டுரை கதை விமர்சனம் என்பவற்றை எழுதியும் ஆக்கங்களைச் சேகரித்தும் வழங்கியது போல தொடர்ந்தும் உதவுவதாக உறுதியளித்த ராஜினிக்கும்

சொந்த வீட்டைவிட்டுப் பிரிந்து குழந்தையுடன் வசித்த போதும் தனது ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கிய தோழி அநாமிகாவுக்கும் தோழமையுடான வாழ்த்துக்களைக் குறிக் கொள்கிறோம்.

அத்துடன் சக்தியின் வடிவமைப்பில் எமக்குதவிய பிரேம்ராஜ் (நோர்வே) மற்றும் ரவி சுவிஸ் ஆகியோருக்கும் எமது இதயபர்வமாக நன்றிகள்

இந்த பத்து வருட காலத்தில் சக்தியுடன் இணைந்து செயற்படும்படியும் சக்திக்கு ஆக்குங்கள் வேண்டியும் நாம் தொடர்பு கொள்ளாத இடங்களே இல்லை என்று கூறலாம். ஐரோப்பிய சூழலில் வேறு பெண்கள் சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் நாம் அவர்களிடம் சக்தியுடன் இணைந்து செயற்படும் படி பல மறை வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும் யாரும் எம்முடன் கைகோர்க்க விரும்பவில்லை அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்களுடைய அரசியல் பின்னணி எங்களுடைய அரசியல் பின்னணி இன்ன பிற காணிகளைக் நாம் கூறலாம். அன்றிலிருந்து இன்றுவரை சக்திக்கு பெண்களின் ஆக்கங்களுக்கு தட்டுப்பாடு நிலவியே வருகிறது. பெண்களின் ஆக்கங்களுக்கு முதலிடம் வழங்கவேண்டும் என்கின்ற ஆர்வத்தை எப்போதும் சோதனைக்குட்படுத்துவதாகவே ஒவ்வொரு தடவையும் சக்தி வெளிவந்துள்ளது. 10 வருடங்கள் சென்றபோதிலும் அந்த நிலமையில் கடுகளவும் மாற்றமில்லை இந்த வரிகளை நாம் எழுதும் போது மிகவும் வேதனையும் அதேநேரம் பெண்ணிலைவாதிகள் பெண் எழுத்தாளர்கள் பெண் விடுதலையின் ஆர்வலர்கள் என தம்மைக் குறிக்கொள்ளும் பெண்கள் மற்றும் ஈழவிடுதலை அமைப்புக்களில் அங்கம் வகித்தலே பெண்களின் உரிமைபோராட்டத்தின முக்கிய பணி என இறுமாந்திருக்கும் பெண்களுக்கு முன்னும் இந்தஅவல நிலையை நிறுத்துகிறோம்.

புகலிடச் சூழலில் ஆரம்பிக்கப்பட்ட ; இலக்கியசந்திப்பில் சக்திசஞ்சிகை பற்றி பல சந்திப்புக்களில் விமர்சனங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை; வாசகர்கள் அறிவீர்கள். ஆனாலும் சக்தி 10வது வருடத்தை புர்த்தி செய்யும் இந்த ஆண்டில் இலக்கிய சந்திப்பின் 26 வது அமர்வில் சக்தி சஞ்சிகைக்கான “அறிமுகம்” நடைபெற்றுள்ளது.ஆண்கள் இலக்கிய உலகம் இதையிட்டு பெருமிதம் அடையலாம் அத்துடன் பெண்விடுதலையில் ஆர்வம் உள்ளவர்களாக தம்மைக்காட்டிக் கொள்ளும்; ஆண்களும் இது பற்றி திருப்திப்பட்டுக் கொள்ளலாம்;. ஐரோப்பாவில் ஆரம்பத்தில வெளிவந்த சகல சஞ்சிகைகளும் நின்று போன நிலையிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சக்தி பெண்கள் சஞ்சிகை என்பதால் அதனை யாராலும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை போலும்.
இவைகளைக் கடந்து

இந்த 10 வருட காலத்தில் சக்தி
பல புதிய பெண் எழுத்தாளர்களை வெளிக்கொணர்ந்திருக்கிறாள் என்பதையிட்டு பெருமிதம் அடைகிறோம்.
சக்தியில் தமது முதல் ஆக்கத்தை எழுதிய பல பெண்கள் இருக்கின்றனர் என்பதையிட்டு நாம் மிக்க மகிழச்;சி யடைகிறோம்.
இன்றும் பல பெண்களுக்கு சக்தி களம் அமைத்துக் கொடுத்துள்ளாள் என்பதையும் பெருமையுடன் கூறிக் கொள்கிறோம்.
அத்துடன் புகலிடச் சூழலில் முதலாவது பெண்களின் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் இணையத்தளத்திலும் தடம் பதித்துள்ளோம்
நேற்று நடந்தவைகள்
முடிந்தவையாகட்டும்
நடக்குப்போறவை
எம்மால் ஆகட்டும்
நாங்கள் கரங்களைப்
பிணைத்துக்கொள்வோம்
ஆசிரியர்குழு.

-தயாநதி,(நோர்வே), றஞ்சி (சுவிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *