சக்திக்கு
புலம்பெயர்ந்த பெண்களின் சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதி வருவது இதுவே முதல் தடவை என்று எண்ணுகிறேன். அழகான வடிவமைப்பு நல்ல அட்டைத்தேர்வு, நேர்த்தியான அச்சு,கலைத்தன்மை வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இப்படி எல்லா வகையிலும் இது சிறந்து காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் ஒரு சீரிய முயற்சி. என்வாழ்த்துக்கள்.
பொதுவாக எல்லா கதைகளுமே ஒரு விதத்தில் மனதை ஈர்க்கும்படி தெரியாத ஒரு கோணத்தை பெண் பார்வையில் வெளியே கொண்டு வந்து அதியோக்கியத் தன்மையுடன் இருக்கின்றன. ஓன்றன் பின் ஒன்றாகவே எல்லாக் கதைகளையும் நான் இரவு முடிவதற்குள் வாசித்து முடித்துவிட்டேன். அதுவே இந்த நூலின் வெற்றிக்கு போதிய சாட்சி.
பக்கத்து பக்கத்தில் வந்த நாலு கதைகள் ஒரே விடயத்தை சொல்லுகின்றன.
கானல் நீர்- சுகந்தி
விலங்குடைப்போம் – சந்திரவதனா
கல்யாணச் சீரழிவுகள் – சுகந்தி
மாறியது நெஞ்சம் – விக்னா
இவை எல்லாமே தெரியாத ஒருவனை மணம் செய்ய இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு வந்த அபலைப் பெண்களைப் பற்றியது இந்தப் பெண்கள் கணவன்மாரின் கெடுபிடிகள் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மணத்தை முறித்து தனிவாழ்வு தேடிப்போகிறார்கள். ஆனால் கதைகள் சொல்லப்பட்ட விதத்தில் அவற்றின் தனித்தன்மை பேணப்பட்டிருக்கிறது.
அதிசயமாக அருகருகே வரும் இரண்டு கதைகள் கூட ஒரே மாதிரியான கருத்தையே சொல்கின்றன.
சுபைதை ராத்தாவின் ஒரு நாள் பொழுது- நந்தினி(ஜேர்மனி)
மூளைக்குள் ஓர் சமையலறை நந்தினி(நோர்வே)
இதன் ஆசிரியர் இருவரும் ஒருவரோ அறியேன். ஆனால் இரண்டுமே நல்ல கதைகள். அதிலும் சுபைதா கதை எனக்கு நன்கு பிடித்துக் கொண்டது. வாழ்நாளில் பெரும் பகுதியை சமையலறையில் கழிக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது.அவளுடைய துக்கம் எல்லாம் ஆசிரியர் எழுதிய வரிகளளின் இடைவெளிகளிலிருந்து வெளிப்படுகிறது. கதையில் ஆசிரியரின் முதிர்ச்சியும் செய்நேர்த்தியும் வடிவப் பிரக்ஞையும் தெரிகிறது. இதைப்படிக்கும் போது 14 மணிநேரம் குசினிலேயே கிடந்து வாடிய என் தாயாரின் ஞாபகம் தான் வருகிறது. நூற்றுக்கணக்கான சிறுகதைகளை நாளுக்கு நாள் படிக்கிறோம். ஆனால் மனதில் நிற்பவை புதுமையாக ஒருவிடயத்தை புதுக்கோணத்தில் சொல்லும் கதைகள் தான்.
அந்த வகையில் சதுரங்கம் கதையை சொல்லலாம். இப்படியான கதைகள் தமிழில் வருவது அபூவம் பெண்ணொருத்தி தான் அலுவல் பார்க்கும் இடத்தில் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறாள். புகலிடத்து வாழ்க்கையை Pழளவைiஎந டiபாவ இல் காட்டுவது அரிதான ஒன்று.
தஞ்சம் தாருங்கோ – நிருபா எனக்கும் பிடித்த இன்னொரு கதை புகலிடத்திற்கு வரும் பெண்களுகு;கு ஏற்படும் இன்னல்களையும் சிறுமைகளையும் இப்படி சவுக்கடி போல உறைக்கும் விதமாக நான் வேறு ஒரு இடத்திலும் படித்ததில்லை. சொல்முறை உத்தி என்னை அசத்திவிட்டது.
வேலைக்காரிகள் உதயபானு இன்னொரு அதிர்ச்சிக்கதை இறுக்கமான வடிவமும் உண்மைத் தன்மையும் கொண்டது.
அக்கரைப் பச்சை றஞ்சி உருக்கமான கதை கணவனுக்காக மனைவிக்காகவா யாருக்காக அனுதாபப்படுவது. முடிவு எடுக்க முடியவில்லை.
கசப்பான பலாக்கனி மல்லிகா இதுவும் மனதைக் கவருவது வறுமையின் கோரத்தை ஒரு வரியில் இவ்வளவு துல்லியமாக கொண்டு வந்த ஆசிரியரின் திறமையே.
முகம் இது இன்னொரு நினைவில் வைக்க வேண்டிய கதை
காவேரியின் கதை இந்திய பிராமணத் தமிழில் எழுதப்பட்டது அதன் எழுத்து முறையில் தனியாகத் தெரிகிறது.
இறுதியில் உங்கள் மேலான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். பணி மேலும் வெற்றியுடன் தொடரட்டும்.