இந்தியாவில் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் கனடாவில் ரொறன்டோ நகரில் வாழ்ந்து வருகிற பெண்நிலைவாதி இனவாத எதிர்ப்பு போராளி ~லீலா ஆச்சார்யா| ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவர் இவரின் நேர்காணல் ஒன்று 1995ம் ஆண்டு சரிநிகரில் வெளிவந்தது.
லீலா ஆச்சாhர்யா இப்படி கூறுகின்றார். ஓரு பெண் என்ற முறையிலும் மற்றும் பெண்ணிலைவாதி, ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவள் என்ற முறையிலும் தென்னாசியக் கலாச்சாரத்தின் பல அம்சங்கள் என்னை ஒடுக்குவதாகவே நான் உணர்கிறேன்.எனினும் நான் முற்றாகவே தென்னாசியக் கலாச்சாரத்தை ஒதுக்கி விடுகிறேன் என்பது அல்ல இதன் அர்த்தம் எனது கலாச்சாரத்திலிருந்து முக்கியமானதும் ஆதர்சம் மிக்கதுமான விஷயங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் ஒடுக்குமறை அம்சங்களை மாற்ற என்னாலியன்றவரை தீவிரமாக முயல்கிறேன். நான் பரோபகார ஆணாதிக்கவாதிகள் (டீநநெஎழடநவ Pயவசயைசஉhள) என்று அழைப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் புரிந்துணர்வுள்ளவர்களாகவும் கனிவு மிக்கவர்களாகவும் ஆண்கள் இருந்த போதிலும் பெண்கள் என்று வருகிற போது பால்வாதிகளாகவும் ஆணாதிக்கவாதிகளாகவும் தான் இவர்கள் இருக்கிறார்கள்.
ஓருபால் உறவுகள் எமது சமூகத்தையோ அல்லது மனித குலத் தொடர்ச்சியையோ அழிக்கப்போவதில்லை ஒருபால் உறவினராகிய நாம் காலங்காலமாக பெற்றோர்களாகவும் குழந்தைகளைப் பேணுபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறோம். இருந்து வருகின்றோம். மற்றைய எல்லாச் சமூக அங்கத்தவர்களைப் போலவே நாமும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் மிக்க அங்கத்தவர்கள்.
தன்னுடைய நண்பன் ஒருவனுடனான உறவைப் பற்றிக் குறிப்பிடும் போது தானும் தனது நண்பனும் மிக நெருக்கமானவர்கள் என்றாலும் அவனுடன் ஒன்றாகப் படுத்தெழும்பமுடியாது என்று ஒரு தமிழ் ஆண் சொன்னார் இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று லீலா ஆச்சார்யாவிடம் வினவ கேள்விக்கு அவர் இப்படி பதில் கூறுகிறார்.
ஆப்படி என்றால் இவர்கள் உணர்ச்சிபூர்வமாக நெருக்கமானவர்கள் அல்லர் பாலியல்ரீதியாகவும் அல்ல என்று தெரிகிறது. உண்மை என்னவென்றால் பாலியல்ரீதியாகவும் ஒருவரோடு ஒருவர் நெருக்கமான ஆண்கள் உள்ளனர் என்பதே. ஆனால் இதனை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள இல்லையோ ஆனால் இது உண்மை. ஓருபால் உறவு வெறுப்பு (ர்ழுஆழுPர்ழுடீஐயு) என்பது ஒருபால் உறவு பற்றிய பயமும் மறுப்புமே ஆகும். இது உள்ளார்ந்தும் இருக்கலாம் வெளிப்படையாகவும் இருக்கலாம். தனது நண்பனுடன் மிக நெருக்கம் ஆனால் படுத்தெழும்ப மாட்டேன் என்று சொல்வதும் ஒருவகை உள்வாங்கிய ஒருபால்உறவு வெறுப்பே ஆகும் இது உள்வாங்கிய உள்ளார்ந்த இனவாதம் போன்றது தான்.
ஆடிப்படையான தளத்தில் மனிதர்கள் விலங்குகளைப் போல என்பது சரிதான். வுpலங்குகளைப் போலவே சில அடிப்படையான உள்ளுணர்வுத் தாண்டல்கள் எமக்கும் உள்ளன. உதாரணமாக அபாயத்தை உணர்ந்து கொள்வது இதுபொலவே உணவு,நீர் இருப்பிடம் போன்றவை தொடர்பாகவும் விலங்குகளைப் போலவே எமக்கும் அடிப்படையான தேவைகள் உள்ளன. மனிதர்களுடைய மூளையின் அமைப்பு அவர்களை மேலும் சிக்கலானவர்களாக ஆக்குகிறது. வுpசயங்களை பகுத்தாய்வு செய்ய எங்களால் முடிகிறது. புலதரப்பட்டதும் பல தளப்பட்டதுமான அனுபவங்களையும் உணர்வுகளையும் மற்றைய மனிதர்கள் தொடர்பாக நாம் பேணமுடிகிறது. ஏனவே மனிதர்கள் மகிவும் இலகுவான விலங்கியல் உள்ளுணர்வுத் தூண்டல்களுக்கும் நடத்தைகளுக்கும் அப்பாலானவர்கள் என்பது தெளிவு.
ஓருபால் உறவுகள் என்பன மிகவும் இயற்கையானவையே இத்தகைய உறவுகள் இயற்கைக்கு மாறானவை என்னும் வாதம் பிற்போக்காளர்களாலும் வலது சாரித் தீவிரவாதத்தாலும் திருச்சபையினராலும் வழமையாக முன்வைக்கப்படும் ஒன்று. குழந்தைகளை பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளும் பெண்கள் தொடர்பாகவும் திருச்சபையும் அரசம் இது இயற்கைக்குமாறானது ஏனும் வாதத்தை முன்வைக்கின்றன.
இந்த வாதத்தின் அடிநாதம் என்ன வென்றால் பெண்களுக்கு அவர்களுடைய வாழ்வின் குறிக்கோள் குழந்தைகளை பெறுவது தான். என்பதாகும். உண்மையில் குழந்தைகள் பெறுவது எநன்பது பெண்களுடைய உயிரியல் உரிமையாகும். இந்த உரிமைக்கு எப்போது அர்த்தம் எற்படுகின்றது என்றால் குழந்தைகள் பெறுவதைத் தீர்மானிப்பது நாங்களாக அதாவது பெண்களாகிய நாங்களாக இருக்கும்போது மட்டுமே.