தோழிகட்கு பெண்ணிலைவாதம் அல்லது பெண்ணியம் என்றால் என்ன என்பது பலருக்கு புரிந்து கொள்ள கஸ்டமாக உள்ளது. ஆண்களைத் திட்டுவது தான் பெண்ணியம் அல்லது பெண்ணிலைவாதம் என நினைப்பது தவறு. அதற்காகவே இக்கட்டுரையை நான் இங்கு பதிந்துள்ளேன். இது கிட்டதட்ட 19 பக்கங்களை கொண்டது. அதனால் இதை நான் தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு பதிய விரும்புகிறேன். (திங்கட்கிழமை தோறும்)
பெண்நிலைவாதம் சில கேள்விகள்
கம்லாபாஸின்
நிக்காத் ஸைத் கான்
மொலீனா தேன்மொழி
ஆகிய மூவரும் சேர்ந்து எழுதிய பெண்நிலைவாதம் சில கேள்விகள்
இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு
கம்லா பாஸின்
புதுடில்லியை சேர்ந்த பெண்நிலைவாதி. ஐக்கிய நாடுகள் சபையின் குழழன யனெ யுபசiஉரடவரசயட ழுசபயnளையவழைn அமைப்பின் பசிப்பிணியின்றும் சுதந்திரம் மாற்றத்துக்கான இயக்கத்தின் போராளி. பெண்களின் வளர்ச்சி நிலை பெண்களும் தகவல் தொடர்பு சாதனங்களும் பெண் கல்வி போன்றன பற்றி எழுதி வருகிறார். குழந்தைகளுக்கான பாடல்களும் புத்தகங்களும் எழுதி வருகிறார்.
நிக்காத் சைத் கான்
லாகூரைச் சேர்ந்த சமூகவியலாளர் பெண்நிலைவாதி லாகூர் பெண்கள் நடவடிக்கை அமைப்பின் தோற்றத்திற்கு காரணமானவர் விவசாயச் சீர்திருத்தம் பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். தற்பொழுது லாகூரில் ஆய்வகத்தின் இயக்குநராக இருக்கிறார்.
மொலீனா தேன் மொழி
ஈழத்தின் கடலோரக் கிராமமொன்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாம்பியாவிலும் பின் தமிழகத்திலும் கல்லூரி வாழ்வைத் தொடர்ந்தவர் பெண்ணுரிமை போராட்டங்களிலும் ஆர்வத்தோடு கலந்து கொள்பவர். ஈழத்தின் பெண்நிலைவாதக் கவிதைகளை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வுhசைன றழசடன உயடடiபெ பத்திரிகையில் பிரசுhரமானது.
பெண்நிலைவாதம் என்றால் என்ன?
பல்வேறு கோட்பாடுகளைப் போல இல்லாமல் பெண் நிலைவாதத்தின் தத்துவார்த்த அல்லது கருத்தியல் ரீதியான தளத்தை ஒரு தனிக் கோட்பாட்டின் தொகுப்பிலிருந்து அது பெற்றுக்கொள்ளவில்லை. எனவே அனைத்துப் பெண்களுக்கும் எக்காலங்களிலும் பொருந்தக் கூடிய ஒரு பொதுவான வரையறை இதற்கு கிடையாது. ஏனவே பெண்நிலைவாதம் ஸ்தூலமான வரலாற்று கலாச்சார நடைமுறைகளிலும் பார்வைகள், உணர்வுகள் செயல்பாடுகளின் நிலைகளிலும் தளம் கொண்டிருப்பதால் இதன் வரையறையானது மாற்றம் அடையக்கூடும், மாற்றமடையவும் செய்யும்.
17ம் நூற்றாண்டின் பெண்நிலைவாதம் என்ற சொல் முதன் முதல் உபயோகப்படுத்தப்பட்ட போது அது கொண்டிருந்த அர்த்தம் இன்று பல ஆண்டுகளில் அது கொண்டிருக்கும் அர்த்தத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாகவே இருந்தது. இது பல்வேறு நிலையிலுள்ள பெண்களால் அவர்களின் வர்க்கப் பிண்ணனி, கல்வித்தகைமை, உணர்வுநிலை போன்றவற்றைப் பொறுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு தேசத்துள்ளேயும் பல்வேறு வகையாகப் பேசப்படலாம். ஓரே நிலையிலுள்ள பெண்கள் மத்தியிலும் கூட குறிப்பாக தந்தை வழிச்சமூகத்தின் தோற்றம் மற்றும் ஆண்மேலாதிக்க உணர்வுகளின் காரணங்கள் (வரலாற்று வேர்கள்) பற்றியும் வர்க்க, ஜாதீய, இன, பாலினச் சார்பற்ற ஒரு சுரண்டலற்ற சமுதாயத்தை நிர்மாணிப்பது சம்பந்தமாகப் பெண்கள் போராட்டத்தின் தொலைநோக்கித் தீர்மானங்களைப் பற்றியும் மாறுபட்ட பெண்நிலைவாதக் கருத்தோட்டங்களும் விவாதங்களும் இடம் பெறவே செய்கின்றன. எனினும் பெண்நிலைவாதத்தின் ஒரு பரந்துபட்ட வரையறையாக இன்று எமக்கு இருப்பது இதுதான் சமூகத்திலும,; வேலைத்தளத்திலும், குடும்பத்திலும் நிலவும் பெண் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய பெண்களின் உணர்வு நிலைகளும் இந்நிலையை மாற்றுவதற்கு பெண்களும் ஆண்களும் எடுக்கும் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளும்…
இதன் படி பாலின ரீதியிலான ஒடுக்குமுறை வடிவங்களையும், ஆண் மேலாதிக்கத்தையும் தந்தைவழிச் சமூக அமைப்பையும் இனம் காணும் எவரும் ஒரு பெண் நிலைவாதியாகின்றார். ஆனால் வெறுமனே பாலின ரீதியிலான ஒடுக்குமுறை வடிவங்களை இனங்காண்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஆண்மேலாதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டும் என்ற வரையறை தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. இந்நடவடிக்கைகள் எந்த வடிவத்தையும் எடுக்கலாம். உதாரணமாக ஒரு பெண் அவள் சிறுமைப்படுத்தபடுவதை, நிறுத்த முடிவு செய்வதை, சுய கல்வி, கற்று ஒருதொழிலைத் தேடிக்கொள்ள முனைவதை பர்தாவுக்குள் மறைத்துக் கொள்ள மறுப்பதை, அல்லது குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை என்று தீர்மானிப்பதைப் போன்ற ஏனைய பல்வேறு ஸ்தாபன ரீதியான போராட்டங்களைப் போலவே பெண்நிலைவாத நடவடிக்கைகளாகவே நாம் கருதுகிறோம். ஆக்கபூர்வமாகச் செயல்படுவதற்கு ஒரு அமைப்பைச் சார்ந்திருப்பது நல்லது. எனினும் ஒரு பெண்நிலைவாதியின் நிலைப்பாட்டை எடுப்பதற்கு நீங்கள் ஒரு அமைப்பைச் சார்ந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.
முன்னைய நாட்களின் பெண்நிலைவாதிகளின் போராட்டமானது பெண்களில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமாக இருந்ததே. அக்காலத்திய பெண்ணியவாதிகளுக்கும் இன்றைய பெண்நிலைவாதிகளுக்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடாகும். அது கல்வி வேலைவாய்ப்புரிமை, சொத்துரிமை, வாக்குரிமை, பாராளுமன்றத்துக்குச் செல்லும் உரிமை, கருத்தடை, விவாகரத்துரிமை போன்றவற்றை உள்ளடக்கியதாயிருந்தது. அதாவது முன்னைய பெண்நிலைவாதிகள் சட்ட ரீதியான சீர்திருத்தங்களுக்காகவும்,சட்டரீதியான சமத்துவ நிலைகளுக்கான போராட்டங்களை குறிப்பாக வீட்டையும் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தாத போராட்டங்களையே முன்னெடுத்திருந்தனர்.
இன்றைய பெண்நிலைவாதிகளோ பாரபட்சங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சட்டரீதியான சீர்திருத்தங்களைத் தாண்டி மேலே போயிருக்கிறார்கள். அவர்கள் பெண்ணின் முழமையான விடுதலைக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இன்று பெண்நிலைவாதமானது வீட்டுக்குள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆண்களின் மேலாதிக்கம், குடும்பத்தினரால் அவர்கள் சுரண்டப்படுதல், கலாச்சார ரீதியிலும், மதரீதியிலும், வேலைத்தளத்திலும், சமூகத்திலும் தொடர்ந்து நிலவிவரும் அவர்களுடைய கீழான அந்தஸ்து உற்பத்தி ஆகிய இரு முனைகளிலும் அவர்களுடைய இரட்டிப்புச் சுமை போன்றவற்றுக்கு எதிரான போராட்ட வடிவங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அத்தோடு பெண்நிலைவாதம் பெண்மையும், ஆண்மையும் பரஸ்பரம் தனித்துவமானiவுயும் உயிரியல் ரீதியாக நிர்ணயிக்கப்பட்டதுமான இருவேறு இனங்கள் என்ற கருத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
எனவே பெண்கள் தமக்கெதிரான ஒருதலைப்பட்சமான நீதிகள் மட்டுமல்ல அரசியல் சமூக ஆண் மேலாதிக்க ஒடுக்குமறை போன்ற அனைத்து வடிவங்களிலிருந்தும் தமது விடுதலையை பெற்றிடத் தொடர்ந்து போராட வேண்டும ;என்று பெண்நிலைவாதிகள் கருதுகிறார்கள். பெண்கள் சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் அடக்கு முறைக்கும் பலியாகியிருப்பதால் பிற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும் நாம்தான் நமது நிலைகளையும் சமூக அமைப்பையும் மாற்றுவதற்கான போராட்டத்தை தொடக்கி வைக்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
சுhரம்சத்தில் இன்றைய பெண்நிலைவாதமானது பெண்களின் சமத்துவத்தை, மற்றும் கௌரவத்தை மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேயும் நமது வாழ்ககை முறைகளையும் நமது உடல்களையும் நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைத் தேர்வு செய்யும் உரிமையையும் வென்றெடுப்பதற்கான போராட்டமாகும். ஆணுக்கு நிகரான பெண்ணின் சமத்துவத்தைக் கேட்பது மட்டும் போதாது என்பதை நாங்கள் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். உதாரணமாக சமூகத்தால் மிருகத்தனமாக்கப்பட்ட, சுரண்ப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒரு ஆண் விவசாயிக்கு நிகரான சமத்துவத்தை ஒரு பெண் விவசாயி பெற்றுவிட்டாலும் அது அவளை முன்னேற்றப் பாதையில் வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லாது. எனவே பெண்நிலைவாதிகள் பெண்களின் சமத்துவத்தை மட்டுமல்ல பெண்கள், ஆண்கள் இருபாலார்க்குமான நியாயமான பாராபட்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவே போராடுகிறார்கள்..
பெண்நிலைவாதிகள் ஆண்களை வெறுப்பவர்களா?
பெண்நிலைவாதிகள் ஆண்களை வெறுப்பதில்லை. ஆனால் அவர்கள் மேலாதிக்கம், தன்னலம், ஆக்கிரமிப்பு, வன்முறை போன்ற தோற்றங்களில் வெளிப்படும் தந்தை வழிச்சமூக அமைப்புக்கும் ஆண்களில் காணப்படும் ஆண்தன்மைக்கும் எதிரானவர்கள். நாம் பெண்களை சக ஜீவிகளாக மதிக்காத ஆண்களையும், பெண்களைத் தமது சொத்துக்களைப் போல நடத்தும் அல்லது பண்டங்களாகப் பார்க்கும் ஆண்களையும் வன்மையாக எதிர்க்கின்றோம். துரதிஷ்டமாக பல ஆண்கள் ஆதிக்க உணர்வுள்ளவர்களாகவும் இத்தகைய குணாதிசயங்களை கொண்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அதிதீவிரமான செயல் மறவர்களாகக் கருதப்படும் ஜனநாயக் சோசலிஸ்ட் ஆண்களுக்கும் கூட இது பொருந்தும். இவர்கள் சமூகத்தில் சமத்துவத்தை விண்ணதிர முழங்கி விட்டு, வீட்டுக்குள் ஆண்-பெண் உள்ளுறவு முறைகளில் சமத்துவத்தை நடைமுறைப்படுத்த மறுப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
எனினும் பெண்கள் இயல்பாகவே அதிக அன்பையும் கவனிப்பையும் கொடுக்க கூடியவர்கள் என்பதை மறுக்கும் நாம் ஆண்களும் இயல்பாகவே அதிக ஆக்கிரமிப்பு மேலாதிக்க உணர்வுள்ளவர்கள் அல்ல என்று நினைக்கின்றோம். பெண்களைப் போலவே ஆண்களும் தமது உணர்வுகள் மற்றும் சமூக நிர்ப்பந்தங்களின் கைதிகளாகி அவர்களுக்கென சமூகத்தால் தீர்மானிக்கப்பட்ட போலி நியதிகளுக்குள்ளும் கருத்துகளுக்குள்ளும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிகமான ஆண்கள் இந்நிலையை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் எமக்குப் பிரச்சினையாக இருக்கிறது. சிலர் மட்டும் அவர்கள் மேலும் அதிக மனித மகத்துவத்தோடு வாழ்வதற்கும் உண்மையான ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கும் போராட்டங்கள் மூலம் தமது சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணுகிறார்கள். இருப்பினும் ஆண்களுக்கு இவ்வுணர்வை ஊட்டக்கூடிய எந்தச் சிறு நடவடிக்கையாவது பெண்கள் மேற்கொள்ளும் போது அது பகைமையுணர்வோடுதான் ஆண்களால் பார்க்கப்படுகிறது.
பெண் நிலைவாதம் ஒரு மேற்கத்தியக் கோட்பாடு என்பதும் எனவே அது தென்னாசியப் பெண்களுக்குப் பொருத்தமற்றது என்பது சரிதானா?
இது அபூர்வமாகத்தான் ஒரு கேள்வியாகக் கேட்கப்படுகின்றது. மாறாக இது ஒரு குற்றச்சாட்மாகவும், ஒரு தாக்குதலாகவும் ஒரு பேரூன்மையாகவும் கூட முன்வைக்கப்படுகிறது. இதனாலேயே பெண்நிலைவாதிகள் இயல்பாகவே கண்டனத்துக்குட்பட்டு விதண்டாவாதிகளாகக் கருதப்பட்டனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டை மேற்கத்திய நாகரீகத்தைத் தழுவிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கில மூலம் கல்வி கற்ற ஆங்கிலத்தை மட்டும் பேசும் மேற்கத்திய ஆடைகளை அணியும் ஆண்களே சிலபெண்கும் மிக அழுத்தமாக முன் வைக்கின்றார்கள். மேற்கத்திய நாகரீகத்தின் பரவலால் தோன்றிய நவீன விஞ்ஞானத்தையும் நவீன மயமாக்கலையும் பற்றி இவர்கள் விவாதிப்பதில்லை.
இதே மனிதர்கள் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி ஆட்சிமுறையின் மேற்கத்தைய தோற்றுவாயை மூலதனத்தின் வளர்ச்சியை நிலவுடைமை அமைப்பின் அழிவு மற்றும் தனிச்சொத்துடமையின் தோற்றத்தை இடதுசாரிக்கொள்கைகளை கேள்விக்குட்படுத்துவதில்லை. பெண்நிலைவாதம் என்ற பதம் தென்னாசியாவில் உருவாகவில்லை என்பது உண்மை தான். ஆனால் தொழிற்புரட்சி மார்க்சியம்இசோசலிசம் இன்னும் சொல்லப்போனால் நமது சில மதங்களுங்கூட தென்னாசியாவில் தோன்றவில்லையே ஜ்ன்ஸ்டீன் லாகூரிலேயும் மார்க்ஸ் கல்கத்தாவிலேயும் nலினி; டாக்காவிலேயும் பிறக்கவில்லை ஆயினும் அவர்களுடைய மேற்கத்தைய உருத்தோற்றம் அவர்ளுடைய கருத்துக்களை எமக்கு அவசியமற்றவையாக்கி விவில்லை. ஒரு கருத்தமைவை தேசிய பூகோள எல்லைக்குள் அடக்கிவிட முடியாது. புpற மனிதர்களுக்கு அவசியமற்றது என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது. ஏவ்வாறாயினும் பெண்நிலைவாதம் என்ற பதம் அந்நியமானதாயினும் அதன் கோட்பாடு ஒரு உருமாற்றத்திற்கான நடவடிக்கையாயே ஆகும். இந்நடிவடிக்கை தென்னாசியாவில் 19ம் நூற்றாண்டில் பெண்கள் மீது ஏவி விடப்பட்டிருந்த அடக்குமறைக்கு எதிராக ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டோடு அமைப்பு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது. எனவே பெண்நிலைவாதம் ஒரு அந்நியக் கருத்தமைவு என்றோ செயற்கையான முறையில் தென்னாசியப் பெண்கள் மீது திணிக்கப்பட்டது. என்றோ கூறிவிடமுடியாது
தொடரும்…
றஞ்சி -27.09.2004