தமிழ் பெண்களாகிய நாம் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் மற்றையப் நாட்டு பெண்களிலும் பார்க்க கூடுதலாகவே உள்ளன. எமது கூட்டு வாழ்க்கை முறை, சாஸ்திர விதிகள், சமூகச் கட்டுப்பாடுகள் பண்பாடு என்பன எம்மை இன்னும் இன்னும் பிரச்சினைகளை எதிர்நோக்க்கவே செய்கின்றன. குடும்பம் என்கின்ற அமைப்பை விட்டு வெளிவந்து வாழும் பெண்களும் சரி குடும்ப அமைப்புக்குள் , நாலுசுவருக்குள்ளே வாழ்ந்து வரும் பெண்கள் சரி, ஏன் வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சினைகள் கூடுதலாக ஒரு பெண்ணின் ஒழுக்கம் பற்றியும் பாலியல் தன்மை பற்றியதாகவுமே இருக்கின்றது. இவ்வாறு பெண்ணை அடக்கி ஒடுக்க சமூகத்தால் வரையறுக்கப்பட்டது தான் அவளின் பாலியல்பு பற்றியதாகும்.
இதை விட பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதால் மட்டும் தான் உளவியல் பிரச்சினைகளை எதிநோக்குகிறாள் என்றால் அது தவறானது. ஏன் ஆண்களும் கூட உளவியல் பிரச்சினைக்கு உள்ளாகின்றான். ஆனால் கூடுதலாக எல்லா சமூக அமைப்பினுள்ளும் பெண்களே பாதிக்கப்படுகிறாள். பெண் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூடுதலான சமூகங்களில் பெண்கள் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் தன் சுய ஆளுமையை வெளிக்கொண்டு வராத அளவிற்கு கட்டுப்படுத்தப்படுகிறாள். உயிரியில் ரீதியாக மட்டும் அன்றி பெண் என்பவள் குறையுடையவள் ஆணுக்கு குறைந்தவள் என்ற சிந்தனை பெண்கள் சமூகத்தினுள்ளும் வீட்டிலும் வேலைசெய்யும் இடங்களிலும் நசுக்கப்டுகிறார்கள். இதுவும் ஒரு வகை உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு பெண்ணை உளவியல் ரீதியில் கூடுதலாக பாதிப்பது இந்த ஆணாதிக்கத்தால் வரையறுக்கப்பட்டுள்ள ~கற்பு| ஒரு பெண்ணை சமூகம் அடக்கி ஒடுக்க பாவிக்கும் ஒரு ஆயுதம் என்றே கூறலாம். அத்துடன் குடும்பத்தில் நிகழும் சச்சரவுகள் உட்பட கணவன் மனைவிக்கிடையிலான உறவுகள், மனைவி, பிள்ளைகள் சகோதரிகள் மேல் ஆண் நடாத்தும் ஒடுக்குமுறைகள், போராட்டச்சூழல், போராட்டத்தினால் கணவன் மாரை இழந்த பெண்கள் பொருளாதாரம் போன்ற காரணங்களினாலும் பெண்களுக்கு உளவியல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
புகலிடங்களில் ஆணாதிக்கத்தின்பேரால் எமது தமிழ் பெண்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படவில்லை என்று மறுப்பது தவறானது.
அடிக்கிற கை தானே அணைக்கும் புருசன் தானே அடிக்கிறான் இன்றைக்கு புருசனும் பெண்ணடாட்டியும் அடித்துக் கொள்வார்கள் நாளைக்கு சேர்வார்கள் போன்ற கருத்துக்கள் உட்பட பல பிற்போக்குத்தனங்களுக்கு ஆதரவளிக்கும் ஆணாதிக்கத்தால் பெண்கள் மேன்மேலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு மனநோய்க்கு ஆளாகின்றார்கள்.
இதற்கு ஒரு உதராணம் புகலிடத்தில் பாடசாலைக்கு போகும் சிறுமியொருத்தியிடம் ஒரு தடவை நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கேட்கப்பட்டது அதற்கு அச்சிறுமி அவர் அப்பாவா அவருக்கு பேசவே தெரியாதே? அவர் என்னை, தம்பியை, அம்மாவை எந்தக் கேள்வியும்கேட்காமல் எந்த நேரத்திலும் அடிப்பார் என்றாள். அச்சிறுமியின் அடிமனதில் ஆழமாக பதிந்து விட்ட அச்சம்பவம் அவளை உளவியல் பாதித்திருப்பதையே காட்டுகின்றது. இப்படி பல வற்றை நாம் கூறலாம்
இதே போல் இன்றைய சினிமாக்களும் பெண்களை உளவியல் ரீதியில் தாக்கம் செலுத்தி வருவதால் பல பெண்கள் பிரச்சனைகளை அலசி ப்பார்க்க முன்வருவதில்லை. மக்களின், பெண்களின் ஏன் ஒரு சமூகத்தின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பவைகளாக இருந்தால் பரவாயில்லை. இச்சினிமா மூலமாக பல பெண்கள் தம்மைச்சுற்றி ஒரு கற்பனை வாழ்க்கையை உருவகிப்பது மட்டுமல்ல இறுதியில் தம் பிரச்சினைக்கான தீhவுகளைக் கூட சினிமா பாணியிலேயே நடத்துகின்றார்கள். உண்மையிலேயே இது ஒரு வருந்ததக்க விடயமாகும். இவ்வாறு பல வகைகளில் பெண்கள் கூடுதலாக தமிழ் பெண்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறாhகள். எங்களுக்கு ஏன் வீண் வேலை என்னும் மனோபாவங்களும் இனவாதமும் பாதிப்புற்ற பெண்களை மேலும் தளர்வுறச் செய்கிறன. அதனால்
~~ஜன்னல்களைத் திறந்து விடுங்கள் அப்போது தான் வெளியே மழை பெய்கின்றதா, பனி கொட்டுகிறதா . அல்லது வெயில் காய்கின்றதா என்று தெரியும் வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும் அவதிப்படுவோரின் அழுகுரல்களும் நமக்கும் கேட்கும்.||
றஞ்சி(சுவிஸ்) 13.06.2004 IBC RADIO