யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)
இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்ற ஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று தன கூறவேண்டும் |
17.09.2010 அன்று சுசிமன் நிர்மலவாசனின் கருவாடு ஓவிய தாபனக்கலை கண்காட்சியை பார்வையிடுவதற்காக கண்காட்சி மண்டபத்தினுள் நுழைந்ததுமே, மண்டபத்தரையில் ஒட்டப்பட்டிருந்த கருவாட்டு ஓவியங்களை பார்த்தவுடனேயே காலில் அணிந்திருந்த செருப்புக்களை கழற்ற வேண்டுமோ என ஒரு கணம் எண்ணி தயங்கி நின்றேன். அந்தளவிற்கு தரை எங்கும் கருவாடு காய விடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதைப் பார்த்தவுடன் கடற்கரை மணல்பரப்பிலே உண்மையாகவே கருவாடுகள் உப்பிலிட்டு உலர வைத்திருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.
இத்தகைய உணர்வோடு உள்ளே நுழைந்து அங்கு நிரையாக தொங்கவிடப்பட்ட ஓவியங்களை நடந்து பார்க்கின்ற பொது கூட என்னால் இயல்பு நிலையில் நடக்க இயலவில்லை. ஏனெனில் என் மனசினுள் தரையில் இருப்பான உண்மையான கருவாடுகள் அவற்றை மிதித்து விடக்கூடாதே என்கின்ற எண்ணம் மாறாமலே இருந்தது. இவர்கள் செருப்பை வாசலிலே கழற்றி விட்டு வரும்படி அறிவித்திருக்கலாமோ என்று கூடத் தோன்றியது.
பார்வையாளர் பார்வையிடுவதற்கு வசதியாக ஓவியங்கள் அழகாகவும், நிரையாகவும், நேர்த்தியாகவும் தொங்கவிடப்பட்டிருந்தன.அதுமட்டுமின்றி அனைத்து ஓவியங்களும் ஏதோ ஒரு அர்த்தத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் கொடுப்பதாகவே இருந்தது.
எந்த ஒரு விடயமாயினும் சரி,கலையாயினும் சரி,பார்த்தவுடன் மனதைத் தொடுகின்ற விடயங்கள் கட்டாயமாகவே இருக்கும். அது வெளிப்புற அழகு சார்ந்தோ,கருத்தியல் சார்ந்தோ இருக்கலாம்.ஆனால்,நினைத்தவுடன் எம் மனக்கண்முன்னே தோன்றுவதாய் அமையும்.அந்த வகையில் இங்கு காட்சிபடுத்தப்பட்ட ஓவியங்களுள் தலை சீவுதல், வயிறுகளின் வரிசை, மரங்கொத்தி, நேற்றைதேடுதல், அலவாங்கை விழுங்குதல் வெள்ளைக்காகம், கெட்டநேரம் போன்ற ஓவியங்கள் பார்த்த உடனேயே மனத்தைக் கவர்ந்தனவாக இருந்தன.
‘கருவாடு’என்கின்ற தலைப்பிற்கும் அங்கிருந்த ஓவியங்களுக்கும் இடையேயான உறவு உன்னதமகவே இருந்தது.ஆனாலும் கருவாடு என்ற தலைப்பை அழைப்பிதழில் பார்த்ததுடன் சட்டென்று எம் அனைவரது எண்ணங்களிலும் ஏதோ உண்மையான கருவாடுகள் பற்றிய ஓவியமவே இருக்கும் எனத் தோன்றியது.ஆனால் அவ்வாறில்லாமல் அங்கு சென்று ஓவியங்களைப் பார்த்த பின்னரே அதற்கான உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
மனித அவலங்களின் வெளிப்பாடு ,அவர்களின் உள்ளக்கிடக்கைகள்,என்பனதேளிவகவும், அழுத்தமாகவும் இந்த ஓவியங்களுக்கூடாக காட்டப்பட்டிருந்தது எனலாம். இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்றஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம், தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று தன கூறவேண்டும்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சூழலில் ஒவ்வொரு நாளும் நசுக்கப்பட்டும்,அடக்கப்பட்டும்,வாழ்ந்து வருகின்றோம்.இந்த தன்மையானது பெண்கள் வன்முறை சார்ந்ததாகவும்இஅரசியல் சார்ந்ததாகவும்,யுத்த அவலங்கள் சார்ந்ததாகவும்,மனிதர்களின் வேறுபட்ட உணர்வு,ஏக்கம் சார்ந்தும் காணப்படுகின்றது எனலாம்.இவ்வாறான உணர்வுகளை ‘கருவாடு’கண்காட்சியில் கண்ண்ண்டு கொள்ள முடிந்தது. உயிரற்ற வெறும் உடல் கருவாட்டைப் போன்றது. அதே போன்று பலமிழந்த, தைரியமற்ற, நலிவுற்ற மனசும் காய்ந்த கருவாட்டைப் போன்றதே.
இவற்றை கருத்தில் கொண்டு ஓவியர் தனது கற்பனைக்கு வடிவம் கொடுத்து எண்ணங்களை ஓவியங்கள் மூலமும்இஅதற்கான தலைப்பு மூலமும் உண்மையாகப் படைத்துள்ளார்.
ஒவ்வொரு சுவைஞனுக்கும் கலைப்படைப்புக்கள் ஏதோ ஒரு தாக்கத்தை மனசினுள்ளே ஏற்படுத்தி நிற்கின்றன.அந்த வகையில் என்னைப்பொறுத்த வரை ‘கருவாடு’ காய்ந்து போன உள்ளங்களின் உணர்வு வெளிப்பாடாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.