12.10.2003 ஞாயிற்றுக்கிழமை
13.30 இலிருந்து 20.00 வரை
“ஊடறு “
2002 இல் வெளிவந்த தொகுப்பு. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்,
கட்டுரை கவிதை சிறுகதை விமர்சனம் ஓவியம் என தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.தொகுப்பாளர்கள் : றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி)
“மட்டக்களப்புத் தமிழகம் “
பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களால் 1964 இல் எழுதப்பட்டு வெளிவந்த இந் நூல் இப்போ எக்ஸில் வெளியீடாக இரண்டாம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் தனித்தன்மையை பண்பாடு, கலை வடிவங்கள், கவி மற்றும் நாட்டுப்பாடல்கள், பேச்சுவழக்குகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கை சார்ந்த விடயங்கள்… என பல தளங்களிலும் பேசும் நூலாக -அதாவது ஓர் ஆய்வுநூலாக- எழுதப்பட்டுள்ளது.
இவ் இரு நூல்களும் அறிமுகம் செய்யப்பட்டு அவை தொடர்பானதும் தொடர்பாகவுமான திறந்த கலந்துரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைவுறும்.
அத்தோடு அரசியல், இலக்கியம், தலித்தியம், பெண்ணியம்… போன்ற விடயங்களில் பேசப்படும் நூல்களாக அண்மையில் வெளிவந்த நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.இச் சந்தர்ப்பத்தை உங்களுக்கானதாக அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் பங்குபற்றல் இதுபோன்ற நிகழ்ச்சிகளை உற்சாகப்படுத்துதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்ற புரிதலுடன்…
இந் நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
நி கழ்ச்சிகள்
“தலைமை”
கண்ணன் (சுவிஸ்)
2அறிமுக உரைகள்”
வி.சிவலிங்கம் (லண்டன்)
ஏ.ஜி.யோகராஜா (சுவிஸ்)
செ.சந்திரவதனா (ஜேர்மனி)
இருநூல்கள் தொடர்பாகவும் தொடர்ந்தும்
திறந்த கலந்துரையாடல்
நிகழ்ச்சி நடைபெறும் இடம் “
VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich
Switzerland
தொடர்புகளுக்கு: ரவி,றஞ்சி -0041 552801778,ranr@bluewin.ch