கவிதை எழுதத் தொடங்கிய மனநோயாளிகளிடம் சில கதைகள் உண்டு.
1
நெஞ்சு கனக்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் பெண் இனம் பற்றிய கட்டுக்கதைகளையும் (கற்புக்கரசி கண்ணகி, பத்தினி சீதை), இன்னும் புரியப்படாத மர்மமொன்று அவளை சுற்றியலைவதாக வெற்று யூகங்களில் திரிய வைத்த சூன்ய இலக்கியங்களையும் பகிஷ்கரித்துக்கொண்டு முற்றிலும் வேறான புதிய இலக்கிய செல்நெறியை தமிழில் பெண் கவிதையாளர்கள் ஏற்படுத்தினர். மதம், கலாச்சாரம், பழமை பேணல் போன்ற பாரம்பரிய சமூக அசைவியக்கக் கட்டமைவுகளுடன் விழுந்து கிடந்த குடும்ப நிறுவனமே பெண்களது முதலாவதும் மிகப் பெரியதுமான சவாலாக எழுகிறது. அதேவேளை, அடிமைப்படுத்தப் படுகிறோம் என்று தெரிந்தே அடிமைப்படுத்தப் படுவதும் ஒடுக்கப் படுகிறோம் என்று தெரியாமல் ஒடுங்குவதுமான தார்மீக விஷயங்களும் பெண்களுக்குப் புரிந்து போயிற்று. உடல் அமைப்பைக் காரணம் காட்டி பெண் மென்மையானவள் அதனாலேயே வலுக்குன்றியவள் என்று கீழ்மைப்படுத்துகிற ஒரு கருத்தியலும்இ தாய்மையைக் காரணம் காட்டி மதிக்கப்படவேண்டியவள்இ பூஜித்துப் பாதுகாக்கப் படவேண்டியவள் (சக்திமரபு) என்று மேன்மைப்படுத்துகிற மற்றொரு கருத்தியலுமே இலக்கிய மரபாகிப் போனது. இலக்கியவாதிகளோடு சமூகவியலாளர்களும், வரலாற்றாய்வாளர்களும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி இது.ஆண்வழிப்பட்ட சிந்தனைகளே பெண்ணின் சிந்தனைகளாக இருந்த காலம் போய் நவீன இலக்கிய காலம் ஒரு திருப்பு முனையாக எழுகிறது. பெண்ணை ஏன் உயர்த்த வேண்டும் அல்லது கீழ்மைப் படுத்த வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு அவளை அவளாக இருக்க விடுங்கள் என்ற நியாயமான கேள்வியை மனித உறவுகளிடம் விடுத்துக் கொண்டு எழுந்தவை தான் பெண் எழுத்துக்கள். இங்கு நிழல்களின் இரைச்சலாய் எழுத்துக்கள் குவிகிற வழக்கம் மாறி பெண் பதுக்கி வைத்த பார்வைகள் வெடித்துச் சிதறியது. பனியில் எழுந்து விழியால் கரைந்து அறைக்குள் கழித்த மூன்று காலங்களையும் மரண விசாரணை செய்தார்கள். மட்கிப் போகிற மார்பின் அளவுகள் பற்றிய சந்தேகங்களை கொளுத்தி விட்டு கடற்கன்னிகளைச் சந்திக்கப் புறப்பட்டுப் போனார்கள்…சங்கரிஇ சிவரமணிஇ ஆழியாள்இ ஒளவைஇ மைத்ரேயிஇ செல்வி போன்றவர்களிலிருந்து இன்றைய திகதி வரை எழுதிக் கொண்டிருக்கும் பெண்ணியா வரை பெண்ணிய அமைப்புகளாலும்இ சஞ்சிகைகளாலும்இ ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்த வகையில் பெண்ணிய அமைப்பான ஊடறுவின் முதல் முயற்சி ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ எனும் பெண்ணியாவின் கவிதைத் தொகுதி. இதில் 15 கவிதைகள் உள்ளன.
2
ஒரு படைப்பாளியின் ஆளுமையை ஆய்வு செய்வதென்பது அதன் வடிவம் புலப்பாடுஇ என்ன விதமாக அமைந்துள்ளது என்பதோடும், அவை படைப்பாளியின் எந்த விதமான உளவியலை வெளிப்படுத்துகிறது என்பதோடும், இவை எல்லாவற்றுக்கும் காரணமான படைப்பாளியின் வாழ்க்கைப் பின்னணி எவை என்பதை ஆய்வு செய்வதோடும் தொடர்புடையது. அதேவேளை பழம் பெரும் பண்பாட்டுக்குள் மனிதர்களைப் புதைக்கிற வாழ்க்கை மரபை மிக அவதானமாக மறு விசாரணைக்குப் போடுகிற எழுத்தாளர்களை திறனாய்வின் மூலம் மீள்கட்டுமானம் செய்யும் போதுதான் இலக்கியத்தின் வீரியத்தன்மையும் எல்லை கடக்கிறது. மொழியின் எளிய அழகிய வெளிப்பாடான கவிதையில் மொழியினுடைய திரிபு நிலை அற்புதமாகச் சாத்தியப் பட்டுப் போவதால் தான் இலக்கிய வகைகளில் கவிதை உன்னதமாகப் பார்க்கப் படுகிறது.
3
அது நாங்கள் புலம்பெயர்ந்து மறவன்புலோவில் ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த காலம். அழகிய குளம்இ கண்ணுக்கெட்டிய து£ரம் வரை விழுந்து கிடக்கும் வயல், நெல்லி மரத்துடனான பால்ய சினேகம். நான் போகும் போது கையாட்டி விடைபெறவும்இ அழும் போது தலை தடவி ஆறுதல் சொல்லவும் ஒரு சினேக ஜீவனாய் அந்த நெல்லி எனக்கிருந்த காலம். புளிப்பும் இனிப்பும் தட்டிய அதன் கனிகளையும்இ அந்த நெல்லி மரத்துடனான நேசத்தையும்இ பனியடர்ந்த ஒரு அதிகாலையில் பெண்ணியாவை வாசித்த போது நான் உணர்ந்தேன். ‘நேசம் அல்லது நெல்லிமரம்’ என்ற கவிதையில் பத்து வருடங்களுக்கு முன் கரைந்த என் காலங்களைக் கண்டெடுத்தேன். இயற்கையின் செல்வங்களில் அலாதியாக அன்பு கொள்ளும் பெண்ணியா – ஒவ்வொரு மாலைகளிலும் மிளிரவைக்கும் நட்சத்திரங்களை எண்ணி இராக்களைக் கழிப்பவர்இ பறவைகளுடன் பனிது£வும் இரவுகளுடன் அமைதியும் மகிழ்வுமாக வாழ்ந்து கழித்தவர். கரும் பறவைகளில்இ பரந்த மேகங்களில் மெல்லிய பனித்திரையின் பின் அடுக்கடுக்காய்த் தொடரும் பெரும் மலைகளில் கால் நனைந்து சலித்துக் கொள்ளும் சிற்றலைகளில்இ தன் ஊமைத் தனத்தை ஒளித்து வைத்தவர். மலர்ந்து வாடிய பூக்களையும் தேய்ந்து மறைகிற நிலவையும் குறியீடாக்கி மாறுபட்ட இயற்கை நயத்தலைச் சாத்தியமாக்கியவர்.
“உன்னை
உன் பிரிவை
நான் உணர்கிற போது
ஒருவரும் இல்லாத தனி வீதியில்
ஒரு மஞ்சள் விளக்கு கம்பத்தின் கீழ்
மெல்லிய மழைத்துளியில் நனைய நான்.
என் கண்களில் நீ
நினைவுகளாய் ஈரலிக்க..”
என்று கூறி காதல் நினைவுகளில் நனைகிறார். அவன் நினைவில் அமிழ்வதும் அழிவதும் பெண்ணியாவுக்குப் பிடித்திருக்கிறது. அவனது குளிர்கரங்கள் பற்றி கைவிரல்கள் சூடேறினாலும்இ அவனது இரவுகள் பனிது£வினாலும் அவன் பிரிவை னக்கியெறிந்து விட்டுத் தன்பாட்டில் பயணிக்கிற தன்மை பெண்ணியாவுக்கு இருக்கிறது.
இவரது கவிதைகள் பேசும் முக்கிய பொருள்:
1) பெண் பற்றிய சிக்கல்களும், விடுதலையை அவாவுகிற தன்மையும்.
2) காதல்.
3) இயற்கை
பரம்பரை பரம்பரையாக இருட்டுக்குள் இருக்கும் தன் மூதாதைகளிடம் என்னை வாழ விடுங்கள் அல்லது கொன்று போடுங்கள் எனக் கேட்கும் பெண்ணியா சம்பிரதாயங்களால் பிழிந்து கயிற்றில் தொங்கவிடும் ரகசியம் வாய்ந்த மூலங்கள் பற்றி அலுத்துப் போகிறார். தகப்பனின் நம்பிக்கையற்ற பார்வைகளினூடும்இ தாயின் குமுறல்களினூடும்இ உறவுகளின் சகிக்க இயலாத பேச்சுக்களினூடும் வாழ்வேன் என்று மார்தட்டிக் கொள்ளும் துணிச்சல்இ எதுவெல்லாம் தம் உரிமைகள் வென்று சுதந்திரம் பற்றிப் பறந்து திரிகின்றனவோ அதுவெல்லாமாய் தன்னை நினைத்துக் கனவு காணுகிற தன்மை இவருக்குண்டு.
முற்றிலும் மாறான மனித அனுபவங்களையும் அவற்றைப் பதிவு செய்வதற்கான அவசியத்தையும் ஒரு கவிஞர் கட்டாயம் உணர்ந்திருக்க வேண்டும். அன்றாட வாழ்வின் சிக்கல்களை பதிவாக்கியிருக்கும் பெண்ணியா சமூக அனுபவங்களை ஏன் தவற விட்டார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பெண்ணுக்குரிய அனுபவங்கள்இ அவளின் குடும்ப உறவுகளுடன் மாத்திரம் கட்டுப் பட்டவையல்ல. தந்தையின் பூடகத் தன்மையையும்இ வாழ்க்கைக் கடப்பாடுகளையும் கதைக்குமளவுக்கு கலாச்சார மத ரீதியில் பெண்ணை மறுதலித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சம்பிரதாயங்களில் கட்டுண்ட அவரது வாழ்க்கைப் பின்னணியையும், அதற்குள்ளிருந்து வெளிவரும் சமூக, அரசியல், பொருண்மியக் கோட்பாடுகளையும், அதனை அர்ச்சிக்கிற அவரது பார்வை என்ன என்பதையும் ஏன் தௌ¤வு படுத்தவில்லை என்ற கேள்வியுடன், இவர் இந்த வாழ்க்கையை நிராகரித்து அந்நியமயப்பட்டுப் போகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நாத்தழுதழுக்க வந்து விடும் பெண் சோகமும்இ காதலிலிருந்து கிளைத்தெழுகிற பிரிவின் கதைகளும் என்ற இரண்டிற்குமிடையிலாகவே இவரது கவிதை மொழி விழுகிறது. அவரது கவிதைகளும் அதையே கதைக்கிறது. போலி இருப்பை மறுதலிக்கும் உக்கிரம் விடியலுக்காகப் பிரயாசைப்படும் தனித்த குயிலின் சோகம் இவையே இவரது கவிதையின் பாடு பொருட்கள்.
“இன்றைய பொழுதில்
எனக்கு அவளும் இல்லை
அந்த உலகும் இல்லை”
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையிலான வேறுபாடு என்பது மேய்ந்து திரியும் பசுவுக்கும்இ காட்டெருமைக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது.
இவரது கவிதையின் உயிர்நாடி எளிமை. அதைத் தொட்டு அணுகியிருக்கிறார். ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ என அழகாக எளிமையாகக் கூறுகிற அதே நேரம்இ சிந்திக்க வைக்கிற கவிதை மொழி பெண்ணியாவுக்குக் கைகூடியுள்ளது. ‘நான் துயிலறுத்திருக்கிறேன்’ போன்ற கவித்துவமான சொற்களின் சேர்க்கையும் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்தத் தொகுதி அது பேசும் பொருள்இ அதன் எளிமை என்பவற்றாலேயே முக்கியப்பட்டுப் போகிறது. கவிதையின் எண்ணிக்கையை விட அதன் கனம் தான் படைப்பாளியின் இருப்பைத் தக்க வைக்கிறதென்ற உண்மையையும் விளங்கச் செய்கிறது.
தேவைக்கு அதிகமாகச் சொல்வத்கும்இ சொற்சிக்கனத்தை சில சமயங்களில் கவனத்தில் எடுக்காத தன்மையும்… இப்படி அலுப்படைய வைக்கிற பலவீனங்களைப் பலவீனம் என்று சொன்னால்இ திறந்த நிலையிலான எளிமையும்இ பேசும் பொருட்களும் இவரது கவிதையில் பலம் என்று சொல்லலாம். அதோடு துருப்பிடித்த சமூக விழுமியங்களை வலியோடு பேசுகிற குரலும் கவனிக்கப் பட வேண்டியது. ‘கல்’ ‘வெறுமை’ போன்ற கவிதைகள் கவனிப்பிற்குரியவை.
“மழைக்காலங்களில்
அடுப்பில் வைத்துக் கறுத்த
சட்டியின் நிறம் போன்ற
அதன் தண்டு” – என்ற படிமம் வழக்கமாக கையாளுகிற படிமங்களைத் து£க்கியெறிந்து விட்டு தான் புழங்கிக் கொண்டிருக்கும் உலகிலிருந்து ஒரு படிமத்தை எடுத்தாளுகிற வல்லமை பெண்ணியாவுக்கே உரியது என்பதைக் காட்டுவதோடு அவருக்கான பாதை அடுப்புக்கும் சட்டிகளுக்கும் இடையிலேயே மட்டும் திறந்து விடப்பட்டிருப்பதையும் காட்டுகிறது.
“எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்
ஒரு யுகத்திலும் எறிந்து விடாதபடி
கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பிப் பிடித்திருப்பது எவருடைய கைகளோ”
என்று யதார்த்தத்தை படிமத்தின் மூலம் எழுதுகிற மனத்தின் வெளிப்பாடாயும் தெரிகிறது.
அந்தரங்க அனுபவத்தை இவர் கதைக்கும் போது தியானித்தலையும் கதை சொல்லல் கலையையும் கலந்திருக்கிறார். ஆனாலும் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காத தனிக்கோட்டுக் கவிதைகளும் சில இடங்களில் கலந்திருக்கிறது. தான் என்ற சுயம் ஓங்கி ஒலிக்க அக நிலையில் நின்று விடுதலையை யாசிக்கிறஇ வேலி தாண்டிய கூக்குரலே இவரது கவிதையின் எல்லையும் ஆழமுமாக விரிகிறது. மிருகத்தனத்தின் முடிச்சுக்கள் தேடியலையும் அவரது விரல்களிலேயே அவரது கவிதைகளுக்கான இருப்பும் அர்த்தமும் வழிகிறது. நவீன கவிதைகளின் தொனியில் புனையப்பட்டிருப்பதனால் தெரிந்தோ தெரியாமலோ இவரது கவிதைகளில் அழகியல் அனுபவம் மட்டுப்பட்ட அளவிலேயே கிடைக்கிறது. ஆனால்இ கவிதையின் பயன் என்பது அழகியல் அனுபவத்துடன் மட்டும் முடிந்து போகிற ஒன்றல்ல. அது இலக்கிய மரபில் ஏற்படுத்த வேண்டிய தாக்கங்களையும் சுட்டிக் காட்டுவது.
அந்த வகையில்,
- தெரிந்தெடுத்த பாடு பொருள்.
- புலப்பாட்டு உத்தியில் காட்டப் பட்ட எளிமை.
- காலாதி காலமான சமூக மரபை கேள்விக்குள்ளாக்குவதன் ஊடாக அந்த சமூக மரபில் தொங்கிக் கொண்டிருக்கும் இலக்கிய மரபையும் கேள்விக்குள்ளாக்குவது.
- காத்தான் குடியில் இருந்து வெளிவரும் முதல் பெண்கவிதைத் தொகுதி என்ற வகையில் அப்பிரதேசத்தின் இலக்கிய வரலாற்றுப் போக்குக் கோட்டை அசைத்தமை.
ஆகியவற்றைப் பலங்களாகக் காணலாம்.
- மட்டுப்படுத்தப் பட்ட பாத்திரப் படைப்பின் சிருஷ்டிப்பு. (தந்தை – காதலன் – தோழி)
- அடைக்கப் பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு பாடுவது.
- சமூக விமர்சனம் இடம்பெறாதது பற்றிய கேள்விகள்
என்பவற்றைக் குறைகளாகவும் சுட்டலாம்.
மொத்தத்தில்இ நவீன கவிதையின் திறந்த நிலை சாத்தியமாக்கப் பட்டு கவிதை வனப்பு பெருமளவுக்கு கலைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணியா சிதைந்த காலத்தின் முன் திகைத்துப் போன கண்களைப் பிடுங்கியெறிந்து விட்டு கவிதை புனைய முயன்றிருப்பதும் தெரிகிறது. அவரது சிறகுகளின் மீது நீளும் எல்லாக் கைகளுக்கெதிராகவும் ஆரம்பிக்கப் பட்ட பயணம் இன்னொரு கவிதைத் தொகுதியும் எமக்காக காத்துக் கொண்டிருப்பதை புலப் படுத்துகிறது.
“என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை” (கவிதைகள்)
பெண்ணியா
ஒக்டோபர்.2006
ஊடறு வெளியீடு
விலை – ரூ.100 (இலங்கையில்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-02-01 00:00