ஒரு 20ஆண்டுகளுக்கு முன் நடேசய்யர் பற்றிய இலக்கியஆய்வுக்கூட்டத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் கொண்டு அங்கு கலந்துகொண்டேன். பேர்லினில் அது நடைபெற்றது என ஞாபகமிருக்கிறது.. அங்கே நடேசய்யரின் இலங்கை தோட்டத்தொழிலாளருக்கான தொழில்சங்கசம்மேளனம் தொடர்பானவைஇமற்றும் அவர் சட்டநிரூபணசபைக்கு தெரிவானது.
அவரின் அரசியல்செயற்பாடுகள் என விரிவாக ஆராயப்பட்டிருந்தது. அவர் மனைவி மீனாட்சி அம்மையாரும் கணவரின் போராட்டத்தில் பங்களிப்பு செய்திருந்தார் என அறிந்திருந்தாலும், அது எவ்வகையான பங்களிப்பு என்பதை இவ்வளவு வருடங்களின் பின் அவரின் படைப்பை ஒருசேர வாசிக்கும் போதே பெரும் வியப்பு ஏற்பட்டது. அவரின் ஆளுமை பத்திரிகையாளர், பாடகர்,பாடலாசிரியர், மேடைப்பேச்சாளர், கவிஞர்,பெண் சமஉரிமைக்காக-இலங்கை தோட்டத்தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர் என நீண்டுகொண்டே போகிறது.
இவரின் இலக்கிய,அரசியல்போராட்டவரலாற்றை பற்றி பலகட்டுரைகள் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளன.. ஆங்காங்கே மீனாட்சி அம்மையாரின் ஆக்கங்கள் காணக்கிடைத்தன. ஆனாலும் அவைகளை ஒருசேர தொகுத்த பணி எம்.எம்.ஜெயசீலன் அவர்களினதும்இ ஜெ.ஹறோசனா அவர்களினதும் ஆகும்.ஒரு விரிவான பதிப்புரையும் மீனாட்சிஅம்மையாரின் தோட்டதொழிலாளர் அரசியலில் அவரின் ஈடுபாட்டையும்,இலக்கிய செயற்பாடுகளையும் விரிவாக முன்வைத்திருக்கிறது. ஊடறுவினதும். விடியல் பதிப்பகத்தின் முயற்சியும் சேர்ந்து 1930களிலேயே மீனாட்சிஅம்மையார்தொழிலாளருக்காக இயற்றிய புரட்சிபோராட்ட ஆக்கங்கள் நூலாக- ஒரு ஆவணமாக , 2022ல் முதல்பதிப்பாக வெளிவந்துள்ளது.
பாடல்கள் கட்டுரைகள்,பின்னுரை என மூன்று பாகங்களாக அவரின் படைப்புக்கள் விரிந்திருக்கின்றன. எம்இஎம். ஜெயசீலன் அவர்களின் பின்னுரைக்கட்டுரை மீனாட்சிஅம்மையாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்,மதக்கொள்கை சீரமைப்பு,பெண்களுக்கான வாக்குரிமை, சமூகசீர்திருத்தம், பெண்அடக்கு முறைக்கான எதிரான குரல் என இன்னும் பலஆற்றல்களை ஆழமான பார்வையில் பதிவு செய்திருக்கிறார்.
இலங்கை தோட்டதொழிலாளர் நிலைமை, வாழ்க்கைதரம் இன்னுமே மோசமானநிலைமையில் இருப்பது கண்கூடு. 1930களில் அவர்களின் வாழ்வுசிதைப்பு வஞ்சகப்படுத்தியிருப்பது,வேலைக்கேற்ற சம்பளமின்மை(இன்றும் அதே நிலைமை!!!) பெண்களின் வேதனைகளை யாவருக்கும் புரியும்படியான பாடல்மெட்டுகளில் உணரவைத்திருக்கிறார். தோட்டத்தொழிலாளர் பற்றிய அவரின் அக்கறையினால் தொழிலாளர் நிலைமை உலகுக்கு தெரியப்படவேண்டுமென்ற பேரவா ஆக்கங்கள்வழியாக வெளிப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டிருந்தவர்களும் ,வேலை செய்து கொண்டிருக்கும் போது தம் அவலங்களை பாடல்கள்பாடுவதன் மூலம் தம்மை-மற்றோரை விழிப்படைய வைக்க முடியுமான தாக்கம் அவருடைய மெட்டுப்பாடல்களில் செறிந்துள்ளது. பத்திரிகையில் பிரசுரமாகும் விடயங்களை கற்றவர்களே-வாசிப்புதேவை உள்ளவரே உள்வாங்கலாம்.
ஆகவே மீனாட்சிஅம்மையாரின் படைப்புக்கள் எல்லா தளத்தினருக்கும் இசைந்து போகிறது. மீனாட்சிஅம்மையாரின்இஇஅந்தரப்பிழைப்பு, போலவே இலங்கை தோட்ட தொழிலாளரின் வாழ்வும் 20ம்நூற்றாண்டிலும் அந்தரத்திலே. அவரின் இலக்கியஆளுமையை,அரசியல் செயற்பாட்டை யாவருக்கும் பரந்தளவு அறிய செய்தலை இத்தொகுப்பு நிகழ்த்துகிறது. ஆவணப்படுத்தல் என்பது காலத்தின் ஒரு முக்கிய பணி. இளம்சந்ததி வரலாறு அறிந்து கொள்வதற்கு இது ஒரு சிறப்பான பதிவு.,மீனாட்சிஅம்மையாரின் படைப்புக்கள் பற்றி ஒரு குறிப்பே இங்கு எழுதியுள்ளேன்.நூலை வாசிப்போருக்கே அவரின் ஆற்றல்இ செயல்பாடுகள் பற்றி புரிந்துகொள்ளமுடியும்.