மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும்.
மலையக மக்கள்.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலைகள் மின்னல் வேகத்தில் ஏறினாலும் அம்மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு கூட்டப்படவில்லை.மிக மோசமான உழைப்பு சுரண்டலை எதிர்கொள்கின்றனர். எத்தனையோ மனித உரிமைகள் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் இருந்தும் இந்த விடயம் குறித்து கவனம் எடுக்கவில்லை.
இப்போது அவர்கள் 1000 ரூபா கேட்டு தெருவுக்கு வந்திருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் போராட்டங்களில் எம்மால் கலந்துகொள்ள முடியவில்லையாயினும், போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தத் தீவிலிருந்து வெளிச்செல்லும் ருசிகரமாசன தேநீரில் மலையக மக்களின் இரத்தம் கலந்திருப்பதை உலகுக்கு தெரியப்படுத்துவோம்