“மைத்ரேயின்” கல்லறை நெருஞ்சிகள்

maithirai.1 நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. 1984 இல் ஆசிரியராக இருந்து சில மாதங்களில் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார் 1990இல் துருவச் சுவடுகள் என்ற தொகுப்பை அவரும் அவரது கணவரும் இணைந்து வெளியிட்டனர். 2002இல் த்ரொண்ட்ஹைம் தொழில் ஆய்வு நிறுவனத்தில் கணணிப் பொறியியற் கலாநிதி ஆனார்.

எண்பதுகளிலிருந்து கவிதைகளை எழுதிவரும் கவிஞர் மைத்ரேயி படைப்புலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். தனித்துவமும் புதிய அனுபவ வீச்சும் கொண்ட அவரது கவிதைகள் முதன் முதலாக கல்லறை நெருஞ்சிகள் எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ஆரோக்கியமான சமூகப்பார்வை கொண்டவர் மைத்ரேயி.

வரும் மற்றைய கவிஞர்களைப் போலவே போராட்டச் சூழலை, இனப்போராட்டத்தின் அம்சங்களை இனங்காட்டியும் மக்கள் வாழ்வியலில் ஏற்படுத்திவிட்ட அழியா வடுக்களை வெளிப்படுத்தியும் அரவது கவிதைகள் வெளிவந்துள்ளன.  போராட்ட வாழ்க்கைச் சூழலைப் தனது கவிதைகளில் பிரதிபலித்த அவர் பிறநாடுகளில் நிகழ்ந்த போராட்டங்களின் போது அந்நாட்டுக் கவிஞர் பாடிய போராட்டக் கவிதைகளை மொழிபெயாத்தும் உள்ளார். இவரது கவிதைகள் மரணத்தில் வாழ்வோம் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

இவரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் மொழிநடை தனித்து சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். பெண்நிலைக் கவிஞரின் வரிசையில் மைத்ரேயும் இணைந்தது மட்டுமல்ல இவர் புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்த போது பெண்ணிய சஞ்சிகையான   சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தார்.  இவரது பல கவிதைகள் சக்தியிலும் வெளியானது.

அவரது மொழிபெயர்ப்புக் கவிதையான நம்பிக்கையிலிருந்து சில வரிகள் (காணமற் போனவர்கள் என்ற ஆக்கத்தை  ஆங்கிலத்தில் ஆன் ரணசிங்க தமிழில் மைத்ரேயி)

எட்கார்டோ என்றிக்குவஸ் இற்கு
எனது மகன்
கடந்த வருடம் மேமாதம் 8ம் திகதியிலிருந்து
காணமற்போய் விட்டார்.

அவர்கள் அவனைச் சில மணித்தியாலங்களுக்கென்றே
அழைத்துச் சென்றனர்.
சில வழமையான கேள்விகளைகேட்கவென்றே
கூறினார்கள்

வண்டி சென்ற பின்பு
அந்த லைசன்ஸ் தகடு அற்ற கார் சென்ற பின்பு
அவனைப் பற்றி வெறெதையுமே
எம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இப்போது நிலமைகள் மாறிவிட்டன.
இப்போது வெளியே வந்த நண்பனிடமிருந்து
நாம் கேள்விப்பட்டோம்
ஐந்து மாதங்களின் பின்பு அவனை
‚’கிறிமோல்டி வில்ல’வில் வைத்து
சித்திரவதை செய்தார்கள் என்று
பரட்டாசி இறுதியில்
கிறிமோல்டிஸிற்குச் சொந்தமான சிவப்பு வீட்டில்
அவனை விசரித்துக் கொண்டிருந்தார்களாம்.

அவர்கள் கூறுகிறார்கள்
அவனது குரல்,அலறலைத் தாம் அடையாளம் கண்டதாக
அவர்கள் கூறுகிறார்கள்
சிலர் என்னிடம் வெளிப்படையாயே கூறுகிறார்கள்

நம்பிக்கை என்ற கவிதையில் ஒரு பெற்றோரின் ஒரே ஒரு ஆறுதல் அடுத்த வருடமும் காவற்படையினர் தம் மகனைத் துன்புறுத்தினர் என்னும் செய்தியைக் கேட்போம் என்ற திரிபுபடுத்தப்பட்ட நம்பிக்கைதான் ஏனெனில் இது அவர்களது மகன் இன்னும் உயிரோடு இருப்பதையல்லவா காட்டுகிறது.  இவ் மொழிபெயர்ப்பு கவிதை அலை பங்குனி 1983 ம் ஆண்டு வெளிவந்துள்ளது.

நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. 1984 இல் ஆசிரியராக இருந்து சில மாதங்களில் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார் 1990இல் துருவச் சுவடுகள் என்ற தொகுப்பை அவரும் அவரது கணவரும் இணைந்து வெளியிட்டனர். 2002இல் த்ரொண்ட்ஹைம் தொழில் ஆய்வு நிறுவனத்தில் கணணிப் பொறியியற் கலாநிதி ஆனார். புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில் இவரது பல கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் டெனிஷ், சுவீடிஷ், ஆகிய மொழிகளில் இவரது கவிதைகள் மொழபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது உயிர்ப்பு என்ற கவிதை பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் அட்டைப்படத்திற்காக 1997 இல் எழுதப்பட்டது.

உயிர்ப்பு

கம்பி வேலிக்குள்
எம்மை நெருக்கும்…
மீறி மீறி
நாம் வளர்வோம்

அடக்கு முறைகள்
மேலும் இறுகித்
தடம் பதிக்கும்
காய்த்துப் போன
வடுக்களினூடு கசியும்
இன்னும்
உயிர்த்துடிப்பு!

ஈழமக்களின் வாழ்வை இக்கவிதை சித்தரித்துள்ளது.

பெண் இனமே என்ற கவிதை சொல்லாத சேதிகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஆனாலும் அவரது எழுத்துக்கள் அவரை சிறந்த அனுபவம் நிறைந்த கவிஞராகவே எமக்கு இன்னும் அறிமுகம் செய்கிறது.

கல்லறை நெருஞ்சிகள்

பதிப்பு காவலூர் இலக்கியவட்டம்நாரந்தனை
ஊர்காவற்றுறை

அச்சகம்
ராம் பிறின்ரேஸ் கிரபிக்ஸ்
பலாலி வீதி யாழ்ப்பாணம்

6 Comments on ““மைத்ரேயின்” கல்லறை நெருஞ்சிகள்”

  1. ஊடறு ஏன் ஊர்வசி,மைத்ரேயி போன்றவர்களை கண்டுகொள்வதில்லை என்ற ஆதங்கம் எனஇனுள் இருந்தது. ஆனால் ஊடறு தக்க சமயத்தில் தனது வேலைகளைச் செய்து வருகிறது என்பதை நிரூபித்துக்கொண்டே உள்ளது. நன்றி ஊடறு மைத்ரேயி போன்ற படைப்பாளிகள் மீண்டும் எழுத வேண்டும் ஈழத்து எழுத்துக்களில் மைதஇரேயி போன்றவர்களின் எழுத்துக்கள் ஒரு வரலாற்று பொக்கிசம் திரம்பவும் அறிமுகப்படுத்திய ஊடறுவுககு எனது நன்றிகள்

  2. ariel dorfman wrote ‘ kaanamal ponavarkal’ poem not ann ranasinge. dorfman is a chilean poet. some misundetading happens some where. please look in to it. yamuna rajendran

  3. யமுனா நீங்கள் சொல்வது சரி ஆனால் ஏரியல் டோர்வ்மனின் கவிதைத் தொகுப்பான “காணாமற் போனவர்கள்” என்னும் நூலை ஆங்கிலத்தில் ஆன் ரணசிங்க மொழிபெயர்த்து SUN பத்திரிகையில் வெளிவந்துள்ளதாக கல்லறை நெருஞ்சிகள் புத்தகத்தில் வெளிவந்துள்ளது இது பற்றி மைத்ரேயிடம் கேட்க வேண்டும். சுட்டிக்காட்டியமைக்கு எமது நன்றிகள்

  4. i am sorry again.ariel dorfman writings appears both in english and spanish and he is writing in both languages. may be ann translate it from spanish to english and mythreye in to tamil. any how, thank you for clarification. yamuna rajendran

  5. மைத்திரேயின் மொழிபெயர்ப்புக்கவிதை தொகுதி பற்றி அறியக் கூடியதாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி, மைத்திரேயி இந்த இணையத்தளத்தை வாசிப்பாரோ தெரியவில்லை, வாசித்தால் ஒஸ்லோவில் இருக்கும் பிரதான நூலகத்திற்கு சில பிரதிகளை அன்பளிப்பு செய்தால் உதவியாக இருக்கும். நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *