ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு.
அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட புலத்தில் இடம்பெற்ற சாதிய தீண்டாமைக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களில் ஒருவரான தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் இணையரும், எண்பது தொண்ணூறுகளில் இடம்பெற்ற தனி ஈழக் கொரிக்கையை முன்வைத்த இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தில் புளொட் இயக்கத்தின் முன்னணிப் போராளிகளில் ஒருவரான சத்தியராஜனின் (மீரான் மாஸ்ரர்) அன்னையுமான தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் அனுபவங்களின் தொகுப்பான இந் நூல், மிகவும் எளிமையான மொழிநடையில் அக் காலகட்டத்தினை மிகவும் உணர்வோட்டத்துடன் பதிவுசெய்துள்ளதோர் வரலாற்றுப் பொக்கிசமாகும்.
வெறுமனே வீராவேசப் பிரச்சாரத்தினை மாத்திரம் வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளின் மத்தியில், பொறுப்பானதொரு பெண்ணின் பார்வையில் அக்கால வரலாறு பதிவுசெய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
இந் நூலின் மென்பிரதியைத் தரவிறக்கி வாசிக்க: sathiamanai.blogspot.com