மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் பிரமிளா பிரதீபனின் ஐந்து கதைகளுமே வாரமலர் போன்ற பத்திரிகையில் வரும் கதைகள் போலிருக்கின்றன.
மலையக மக்களின் பிரச்சனைகளைச் சுற்றியே அநேகமான கதைகள் வருகின்றன. மருத்துவ வசதி இல்லாமை, பண்டிகைகளுக்கு பணம் இல்லாமை, வேலைநிறுத்தங்கள் தோல்வியில் முடிவது, மதுப்பழக்கம் என்பது போல் மலையக வாழ்வியலில் இருக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைகள். தாய்பாசத்திற்கு, நெத்திக்காசு போன்ற சில கதைகள். ‘அப்பாவுக்குக் கல்யாணம்’ போல சில கதைகளை எடிட் செய்தால் நல்ல கதையாகும் வாய்ப்பிருக்கிறது.ஊடறு அமைப்பு தொடர்ந்து பெண்களின் படைப்புகளை முன்னிறுத்தி நூல்கள் வெளியிட்டு வருகின்றது. மலையகத்தில் பிறந்த இத்தனை பெண் எழுத்தாளர்களின் கதைகளை ஒருங்கே தொகுத்து நூல் வெளியிடுவது பெரும்பணி. பெண்கள் எழுதட்டும். எழுத்து ஒரு பயிற்சி. பலரும் நல்ல கதைகளை எழுத ஆரம்பிப்பதற்கான முதல் முயற்சி இந்தத் தொகுப்பு.பிரதிக்கு:விடியல் பதிப்பகம் 94434 68758முதல்பதிப்பு ஜனவரி 2024விலை ரூ.280.#சிறுகதைகள்