ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது
சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), கலாநிதி சு.குணேஸ்வரன்(எழுத்தாளர்), செ.ரினோஷன்(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வை ஒழுங்கமைத்த தர்சிகா (பெண்ணிய செயற்பாட்டாளர்) நன்றியுரை நிகழ்த்தினார்.
ஊடறு வெளியிட்ட மேற்படி தொகுப்பில் 23 மலையகப் பெண்களின் 42 கதைகள் உள்ளடங்கியுள்ளன.நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள்.