மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்2015 இல் வயது குறைந்த சின்னப் பெண்ணாக மலையகத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் ஒரு பேச்சாளராக அவளின் அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தாள் பவநீதா 9 வருடங்களின் பின் இன்று பவநீதாவின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் இந்த நீண்ட நெடிய பயணத்தில் மேன்மேலும் இலக்குகளை அடைய ஊடறுவின் 19 வது வருடத்தில் எங்கள் பவநீதாவை ஊடறு சார்பாக வாழ்த்துகிறோம் we l u bavanee பெருமிதம் கொள்கிறோம்
http://yourlisten.com/oodaru/bavaneetha
உலகம் முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்களில் 12 நாடுகளை சேர்ந்த 20 திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் அமெரிக்காவின் Film independent இன் Global media makers. இலங்கை மலையகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் பவநீதா லோகநாதனின் முதல் திரைப்படமான 46 Mondays க்கான Hollywood Mentorship மற்றும் இயக்குனர் பயிற்சியும் வழங்கப்படுகிறது.இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார் பவனீத்தா சிறிய நாடுகளை சேர்ந்த எங்களை போன்றவர்களுக்கு ஹாலிவுட் மாபெரும் கனவு தேசம்.
சுய கற்றலில் ஈடுபட்ட எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள துணைபுரிந்தது ஹாலிவுட் திரையுலகம் தான். இதுவரை தூரத்திலிருந்து கற்றுக்கொண்ட எனக்கு, இன்று திரைப்பட இயக்குனர்,தயாரிப்பாளர் என்ற சர்வதேச அங்கிகாரத்துடன் என்னை இந்த துறையில் மேலும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகிடைத்துள்ளது. 13+ வருட அதி தீவிர உழைப்புக்கான அங்கிகாரம் இது. ஒரு தமிழ் பெண்ணால் சினிமாவில் நுழைய முடியாது, இயங்க முடியாது, தடம் பதிக்க முடியாது, படம் எடுக்க முடியாது ,ஜெயிக்க முடியாது, நிலைக்க முடியாது … என்ற குரல்கள் கடந்து தொடர்ந்து தனித்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் இலக்கு அடைவு அல்ல; இந்த பயணம் தான் வெற்றி. இந்த நீண்ட நெடிய பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என கூறியுள்ளார் இயக்குநர் பவநீதா