*24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார். அந்த உரை முடிவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுந்து நின்று ஆரவாரமாக வரவேற்றார்கள். மாணவர்களின் பலஸ்*தீனத்துக்கு ஆதரவான கா*ஸாப் படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்ற 13 மாணவர்களை பட்டமளிப்புக்கு தகுதியற்றவர்களாக நிர்வாகத்தின் அதிகார மட்டம் நிராகரித்ததை எதிர்த்து இந்த உரையை ஸ்ருதி மிக அழுத்தமாக முன்வைத்தார். பின்னர் ஆயிரக் கணக்கான மாணவர்களும் பல பீட அங்கத்தவர்களும் அரங்கிலிருந்து வெளிநடப்புச் செய்து, ஊர்வலமாகச் சென்று அருகில் ஒழுங்குசெய்யப்பட்ட தேவாலயத்தில் கூடினர்.”கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினதும், சிவில் ஒழுங்கு மீறலுக்கான உரிமையின் மீதும் இந்த பல்கலைக் கழகம் காட்டிய சகிப்பின்மை பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.
பல்கலைக் கழகத்தில் நடப்பது சுதந்திரம் குறித்தான பிரச்சினை. இது சிவில் உரிமை மீதானதும் ஜனநாயக கொள்கை சார்ந்ததுமான பிரச்சினை”. “மாணவர்கள் பேசிப் பார்த்தார்கள். பீடம் சார்ந்தோர் பேசிப் பார்த்தார்கள்” என்று முகவுரை கொடுத்த ஸ்ருதி, “ஹவார்ட்! எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?” என உயர்ந்த தொனியில் கேள்வி எழுப்பியபோது எழுந்த மாணவர்களின் ஆதரவு ஒலி அடங்க பல விநாடிகள் ஆகியது. ஸ்ருதி (24) இந்திய பெற்றோர் வழிவந்த அமெரிக்க பிரஜை. அவரது உரையை முதல் பின்னூட்ட இணைப்பில் காணலாம்.(Thanks: image – shruthikumar.com)பதிவு Ravindran Pa