கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும் மெல்பெர்னில் வசிக்கும் பத்திரிகையாளரும், மெல்பெர்ன் வாசக வட்டங்களில் அறியப்பட்டவருமான “தெய்வீகன்” என்பவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரானிய அகதிப்பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக தண்டனைக்குள்ளாகியுள்ளார். என்ற செய்தியும் அதை கண்டனம் செய்யவில்லை என்ற கண்டனங்களும் முகநூலில் விரவுகிறது… இதே போல் தான் பிரான்சில் இருக்கும் அரவிந் அப்பாத்துரை என்பவர் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முற்பட்டார் (அகதியாக அடைக்கலம் தேடிவந்த பெண்ணை )(செய்தார்) என்று கையெழுத்து வேட்டை செய்தவர்கள் (தங்களை மனித உரிமைவாதிகள் பெண்ணியவாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தான் கையெழுத்து வேட்டைக் செய்தார்கள்)…தற்போது அப்படி ஒன்றும் நடைபெறவில்லைப்போல் அவர் தான் அவர்களின் எல்லா கூட்டங்களிலும் தலைமை, ,கருத்துரைப்பாளர்.
அதே கையெழுத்து கண்டனத்தை செய்தவர்கள் தான் அவரின் நண்பர்கள்… ஒரு சமூக பொது அல்லது இலக்கிய நிகழ்வில் எப்படி இவர்கள் எந்த சுயவிமர்சனமோ மன்னிப்போ இல்லாமல் கலந்து கொள்கிறார்கள்.எப்படி அவரை ஏற்றுக்கொண்டார்கள் .அந்த கையெழுத்து கண்டனத்தை பிரசுரித்த ஊடறுவுக்கு(எமக்கு) கிடைத்த பரிசு தூசண வார்த்தைகள் …. ஆக தங்களின் நலன்களுக்காக கண்டன அறிக்கைகளை விடுபவர்கள் சமூகத்தில் அக்கறை போல் காட்டிக்கொள்கிறார்கள்… அது சரி பிரான்சில் உள்ள தமிழிச்சிக்கு நடந்த கதை பற்றி யாரும் வாய் திறக்காகதது ஏன் ??? அதிகாரப் பாலியல் துஷ்பிரயோகம் என்பது எவ்வகையிலும் எவ்வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிகாரத்தின் பலத்தைப்பொறுத்து துஷ்பிரயோகத்தின் எல்லை மாறுபடுமே ஒழிய எல்லாமே வன்முறைதான். அதுவும் அகதியாக அடைக்கலம் தேடி வந்த ஒருவர் கொஞ்சம் அதிகாரம் கிடைத்தபின்னர் அதேபோல அடைக்கலம் தேடிவந்த சக மனிதரின் மீது துஷ்பிரயோகம் செய்வது என்பதை எவ்வகையிலும் மன்னிக்கமுடியாது. தலித்தியம் பேசுவது சொந்த மனைவியை துன்புறுத்திக் கொண்டு பெண்ணியம் பேசுவது இப்படி பல இலக்கியவாதிகள் “கள்ளமௌனத்தோடு நடமாடுகிறார்கள் குற்ற உணர்ச்சி இல்லாமல் இதற்குள் இலக்கியம்