சிவப்பு பெட்டி பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி
200 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இந்த சிவப்பு பெட்டியை தங்கள் உறவுகளின் தொடர்பாடலாக பார்க்கிறார்கள் தோட்ட தொழிலாளர்களின் . அவர்களுக்கு இந்த பொருளாதார வளர்ச்சியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல அவர்களின் வாழ்வின் பிணைப்பு அக்கடிதங்கள் உறவுகளின் கையெழுத்தில் வருபவை அந்த உறவுகளின் பிரிவை அவ் எழுத்துக்களில் காண்கின்றனர்.என்பது மிகையல்ல அந்தக்காலங்களில் இந்த சிவப்புபெட்டி ஏற்படுத்திய உறவுப்பாலம் உறவுகளுக்கிடையே ஒரு பிணைப்பை பிரிக்க முடியாத உறவை ஏற்படுததியிருந்தது. வாசிக்கத் தெரியுமோ இல்லையோ அது பிரச்சினையில்லை ஆனால் ஒரு உறவிடமிருந்து ஒரு கடிதம் வருமாயின் அந்த சந்தோசத்திற்கு அளவேயில்லை அதை அனுபவித்தவர்களுக்கு அந்த மகிழ்ச்சி, துன்பம் ,கண்ணீர் விளங்கு.ம். அந்த பெருமூச்சு ஏக்கத்தை இக்குறும்படத்தில் காண்கிறோம்.
இந்த குறும்படத்தை பார்த்ததில் என் ஞாபகம் யுத்த காலத்தில் சொந்தங்களின் கடிதங்களுக்காக பல நாட்கள் எதிர்பார்த்து காத்திருப்போம். அவர்களின் சுகங்களை அறிய. நாம் ஏங்கிய ஏக்கங்கங்கள் நினைவுக்கு வந்து போயின. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தாலும் பழைய கடிதங்களை பார்க்கும் போது எம்மையறியாமலேயே கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது
கடிதங்கள் எரிக்கப்படுகையில் ஏற்படும் வலி ஒருவரின் மனித உணர்வுகளை குழி தோண்டி புதைத்து சாம்பலாக்கி விடுகிறது. மகிழ்ச்சி, துன்பம், இழப்பு என எம்மோடு உறவாட பின்னிப்பிணைந்திருப்பது இக்கடிதங்களே அவ் உறவுகளின் மன உணர்வுகளை சாம்பலாக்குவதை போன்று உணர்ந்தேன். 13 நிமிடங்கள் அந்த முவரிகளைத் தாண்டி மனித உறவின் உறவுப்பாலமாக இக்கடிதங்கள் திகழ்ந்துள்ளன அதற்கு துணை நின்ற சிவப்புபெட்டி 13 நிமிடத்தில் உணர்வுகளை உள்ளடக்கி எம்முன் நிற்கின்றது எங்கள் பிரச்சினைகளை நாம் தான் பேச வேண்டும் என சிவப்பு பெட்டியும் முன்வைத்து நிற்கின்றது.
சிவப்புப்பெட்டி | Redbox – Short film Written and Directed byNavayuga KugarajahDirector of PhotographyJoshuah Heby