2017ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில், The dark dyes – கருஞ்சாயங்கள் எனும் தொனிப்பொருளிலான ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற எனது ஓவியங்களில் இரண்டு “மலையகா” நூலின் அட்டை வடிவமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டமைக்காக சிறப்பு நன்றிகளை ரஞ்சி மிஸ்(ஊடறு) அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்… அத்துடன் புத்தகம் பற்றி கூறுகையில் ,பெண்களுக்கான களமாக மிக நீண்ட காலமாக பணியாற்றி வரும் “ஊடறு” வின் மற்றுமொரு வெளியீடு “மலையகா”. (மலையக பெண்களின் கதை தொகுப்பு நூல் )…பிரிட்டிஷ் காலத்து லயக்கூரைகளில் கவிந்திருந்த பனியை விடிகாலைப்பொழுது வெள்ளைப் புகைமண்டலமாக்கிக் கொண்டிருந்தது… என்று ஒரு சிறுகதை ஆரம்பிக்கிறது…இவ்வாறு வாசிக்க தூண்டும் மலையகா புத்தகத்தின் ஒவ்வொரு கதைகளும் மிக அற்புதமான கதைப்பாணியில் அமைந்துள்ளது.. . ஊடறுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்..