இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் கவனத்தை ஈர்த்தது. பரந்தனை நினைவூட்டிய இவரது கவிதைகள் பல சுடர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. மணிக்கதையொன்றும் பரிசு பெற்றுள்ளது. சுடரில் வெளியான இவரைப்பற்றிய அறிமுகக் கட்டுரையிது. இதனை எழுதியவர் : வேலோன்.பரந்தன் கலைப்புஷ்பாவின் பெயர் திடீரென இலக்கியவானிலிருந்து மறைந்து விட்டது. இவருக்கு என்ன நடந்தது? உண்மையில் கனடாவுக்குப் புலம்பெயரந்த இவர், திருமணமானதும் புஷ்பா கிறிஸ்ரி என்னும் பெயரில் அதிகமாக எழுதியிருக்கின்றார். புஷ்பா கிறிஸ்ரியும் பரந்தன் புஷ்பாவும் ஒருவரேயென்பதை அண்மையில்தான் அறிந்தேன்.