முதல்முறையாக திருநங்கையருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்”கேரள மாநிலத்தில் திருநங்கையருக்கான போட்டிகளை கேரள அரசு முன்னெடுத்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். ’ஏன் பெண்பிள்ளை மாதிரி ஓடுகிறாய்?’ இந்தக் கேள்விதான் எங்களை பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து வைத்திருந்தது. மிமிக்ரி, மேடைநாடகம், மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் எங்களுக்கு அடையாளம் இருந்தாலும் விளையாட்டுப் போட்டியில் எங்களை நிரூபிக்க இதுவே எங்களுக்கு கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பாகும்.நடக்கவிருக்கும் இப்போட்டிகளில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4 4ஒ100 மீட்டர் ஸ்ப்ரிண்ட் போட்டி மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான முன்முயற்சியைத் துவங்கியது கொச்சியிலுள்ள சஹஜ் சர்வதேசப் பள்ளி.
சஹஜ், பிரபல நடிகையும், கவிஞரும் திருநங்கை உரிமை ஆர்வலருமான கல்கி அவர்களால் டிசம்பர் 2016-ல் துவங்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும்.இப்போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் ஷ்யாமா எஸ். என்ற திருநங்கை பெற்றுள்ளார். பள்ளிப்பருவத்தில் தன் பெண் உடல் பாவனைகளுக்காக சகமாணவர்களால் கேலிக்குள்ளாக்கபட்ட இவருக்கு இவ்வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதேயான இப்போட்டியின் அமைப்பாளர் அனில் அர்ஜுனன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்திருக்கும் //’ஏன் பெண்பிள்ளை மாதிரி ஓடுகிறாய்?’ இந்தக் கேள்விதான் எங்களை பள்ளியிலும் கல்லூரியிலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து வைத்திருந்தது.
மிமிக்ரி, மேடைநாடகம், மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் எங்களுக்கு அடையாளம் இருந்தாலும் விளையாட்டுப் போட்டியில் எங்களை நிரூபிக்க இதுவே எங்களுக்கு கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பாகும்.நடக்கவிருக்கும் இப்போட்டிகளில் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4 4ஒ100 மீட்டர் ஸ்ப்ரிண்ட் போட்டி மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான முன்முயற்சியைத் துவங்கியது கொச்சியிலுள்ள சஹஜ் சர்வதேசப் பள்ளி. சஹஜ், பிரபல நடிகையும், கவிஞரும் திருநங்கை உரிமை ஆர்வலருமான கல்கி அவர்களால் டிசம்பர் 2016-ல் துவங்கப்பட்ட கல்வி நிறுவனம் ஆகும்.//Thanks -Think ChangeThanks : your story.com