பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் மகளிர்( ( TWFD ) அபிவிருத்தி மன்றம், ஜனவரி 27/01/2024 அன்று பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழ் பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் “சுடரி” விருது நிகழ்வை நடாத்தியிருந்தது. பலரின் கடின உழைப்புக்கேற்ற வகையில் இந்நிகழ்வுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது மிகையல்ல. இது ஒரு மிகக் கடினமான செயற்பாடு , அதில் சுடரி குழுமத்தினர் நியாயமான பாரபட்சமற்ற, தேர்வு முறையில் வெற்றியடைந்துள்ளமை பாராட்டுக்குரியது. “சுடரி” விருது குழுமத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
பல்வேறு துறைசார்ந்த 30 பெண் ஆளுமைகள் தெரிவாகி “சுடரி” விருதுகளை தட்டிச் சென்றனர். என் அவதானத்தில் சுடரி விருதின் நடுவர் குழுமத்தினர் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளதை இங்கு சுட்ட விரும்புகிறேன்.
ஐரோப்பாவிலேயே முதன் முதலில் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வைப் போல மிகச் சிறப்பாக ஒழுங்குமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் இளைய சமுதாயத்தினர் அறிவிப்பாளர்களாகவும், பல திறமையான வளர்ந்து வரும் இளங்ககைலைஞர்கள், நாட்டியம், டான்ஸ், பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிககளை அனைவரும் இணைந்து சிறப்பாக்கினர்.
முக்கியமாக நிகழ்வின் திரைக்கு தொழில்நுட்ப உயிரோட்டத்தை வழங்கிக் கொண்டிருந்தார்கள் இளம் கலைஞர்கள் அது விருது விழாவுக்கு இன்னும் மெருகேற்றியது …
இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது, விருது பெற்றவர்களுக்கோ
அல்லது சிறப்பு விருந்தினர்களுக்கோ மற்றைய விருது நிகழ்வுகள் போல்
பொன்னாடைகள் இங்கு இல்லை என்பதை மிகச் சிறப்பான விடயமாக நான் பார்க்கிறேன்.
அதனால் தான் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வைப் போல எனக்
குறிப்பிட்டேன்
நேரத்தை கணக்கில் எடுத்து விருது பெறுபவர்கள் பற்றிய சிறுகுறிப்பையும் வழங்கியிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். மற்றப்படி சுடரி விருது நிகழ்வு “பெண் ஆளுமைகளுக்கான ஒரு தளம்” அதன் செயற்பாட்டுக்கு எமது ஒத்துழைப்புக்களை நல்குவோம். சுடரி விருது விழாவில் நானும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி
ஆரம்பத்திலிருந்து இவ் விருது நிகழ்வுக்காக வீச்சாக செயற்பட்டுக்கொண்டிருந்த தோழிகள் Roshini Rameash , Arathi Rajanth, ரஞ்சனா ராஜ் , பாலன் தோழர் மற்றும் இந்நிகழ்வுக்கு பின்னால் இருந்து உதவிகளைப்புரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்