கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்

கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்!இராமாயணத்தில் அரக்கியாகவும் வஞ்சகியாகவும் சித்தரிக்கப்படும் ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு அரங்கப்பிரதி எழுதப்பட்டு, இந்நடன நாடகம் உருவாகிவருகின்றது. இன்னும் 3 நாட்களில் (20.01.2024) Bærum Kulturhusஇல் அரங்கேறவுள்ளது.

இலக்கியங்களைச் சமூக, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்வதும் உரையாடுவதும் விவாதிப்பதும் விமர்சிப்பதும், அவை மீது கேள்விகளை எழுப்புவதும் தொடர்ச்சியாக நிகழ்கின்ற செயற்பாடுகளே.சூர்ப்பணகை – The Phenomenal Woman (தனித்துவமான பெண்) என்பதாக இப்படைப்பின் தலைப்பு அமைந்துள்ளது. இது எப்படிச் சாத்தியம்?- இராமாயணக் கதை புழக்கததிலும் வாசிப்பிலும் உள்ள இந்திய, தமிழ்ச் சமூகங்களில் இராவணன், சூர்ப்பணகை போன்ற பாத்திரங்கள் அரக்கர்கள் என்ற படிமம் ஆழவேரூன்றியுள்ளது.

சாதாரண மனிதர்களின் மனங்களிலும் அது வலுவாகப் பதிந்துள்ளது.நிலைமை அப்படியிருக்க இந்நடன நாடகம் எதனைப் பிரதிபலிக்கவுள்ளது?அந்தப் பாத்திரங்களுக்கு மறுபக்கங்கள் உள்ளனவா? நியாயங்கள் உள்ளனவா சூர்ப்பணகையின் காதலையா? காமத்தையா?எப்படிப் பேசுகின்றது? பல நூற்றாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட பாத்திரச் சித்தரிப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதனூடாகவா? பெண்ணிய நோக்கு நிலையிலா?

மேற் காணும் கேள்விகளுடன் நல்லதோர் காட்சி இன்பத்தினையும் கலை அனுபவத்தினையும் பெறவும் உரையாடவும் வாருங்கள் நண்பர்களே20-01-2024, சனி, மாலை 6 மணிக்கு Bærum Kulturhus பிரமாண்ட மேடை அமைப்பு, அரங்கப் பொருட்கள், இசை, ஒளி அமைப்பு, ஆடை வடிவமைப்பு எனவாகப் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னால் நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், பாடகர்கள், அரங்கப்பொருளாக்கம், ஒளி அமைப்பு என அறுபதிற்கும் மேற்பட்ட பல்துறைக் கலைஞர்களின் பங்களிப்பும் உழைப்பும் இருக்கின்றது.

எழுத்துரு, நடன அமைப்பு, ஒளி வடிவமைப்பு & நெறியாள்கை கவிதா லட்சுமி இசையமைப்பு ,அஸ்வமித்ராபாடல்கள்:கம்பர், கவிதா நுழைவுச் சீட்டிற்கு /Ticketshttps://billetter.baerumkulturhus.no/…/tic…/25545/48411/நுழைவுச் சீட்டுகள் என்னிடமும் பெற்றுக் கொள்ளலாம். உட்பெட்டியில் அல்லது 90044523 இற்குத் தொடர்பு கொள்ளவும்.

Thanks Rooban Sivarajah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *