உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள்
ஊடகவியலாளரான துளசி முத்துலிங்கம் அவர்களின் இந்த உரை மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகள், சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றது. உலகம் முழுவதும் மாற்றுப் பாலினர் தொடர்பான புரிதல்கள் அதிகரித்து வருகின்ற இக்காலகட்டத்தில், மேற்கு நாடுகளிலும், இலங்கையிலும் மாற்றுப் பாலினம் சார்ந்த கருத்தியலை சிலர் தமக்குச் சாதகமாகப் பாவித்து லாபமடைந்துவருவதையும், இதனூடான மாற்றுப் பாலினர் மட்டுமன்றி பெண்கள் உரிமைகளும் பறிக்கப்பட்டுவருதையும் தனது ஆய்வினூடாகவும், அனுபவத்தினூடாகவும் இந்த உரையில் விளக்குகின்றார் துளசி.