37 வருசத்திற்கு மேலான அகதிவாழ்வு நாடற்றவர்களின் குரல் 2

7 வருடங்களுக்கு முன் இலங்கை பேரினவாதத்திடம் இருந்து தப்பி சொந்த நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாக.ஓடியவர்களின் கண்ணீர்கதை இது..மூன்று தலைமுறையைக்கடந்தும் இன்னும் அகதிவாழ்வு.. நன்றி கல்பனா .

பதிவு:புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மிச்சமெல்லாம் சாக்குப் படல்தான்.மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம் அகதிகள் முகாமிற்குள் நுழைந்து விட முடியாது. இப்போதும் அப்படித்தானா என்று தெரியாது.இந்தயிடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ரெண்டு பிரசெண்ட் என்றெல்லாம் ஆயிரம் கிண்டலடிக்கலாம். இந்த மாதிரியான தார்மீகச் செயல்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஓடி வந்து நிற்பார்கள்.

அப்படி அவர்கள் அநீதிகளின் போது குரல் கொடுக்கும் போதெல்லாம் எங்களை மாதிரியான பத்திரிகையாளர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அடியாழ உந்துதலோடு அக்காரியங்களில் ஈடுபடுவதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.அப்படித்தான் மதுரையில் எம்.பியாக இருந்த மோகன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவரது சுமோவிற்குள் என்னையும் கானுயிர் புகைப்படத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற, புகைப்படக்காரர் மதுரை செந்தில் குமரனையும் மறைத்து ஒளித்துக் கொண்டு போய் முகாமிற்குள் கொண்டு போய் விட்டார்.

கி. நடராசன் G Selvaநேற்று, PM 4:49நண்பர், எழுத்தாளர் சரவண சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *