இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது 21 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்க முடியாமை, நிர்ணயிக்கப்படும் அளவுக்கு கொழுந்து பறிக்க முடியாமை, செலவுகள், கடன்கள், பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக தொழிலாளர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தை கீழே தரப்பட்டிருப்பதன் ஊடாக செவிமடுக்கலாம்.
இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் அழைக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது. தேநீரை சுவைப்பவர்கள், தேயிலையை விற்பனை செய்பவர்கள் கொண்டாட்டங்களை நடத்த தேயிலையை உற்பத்தி செய்யும் மலையக தோட்டத் தொழிலாளிகள் நாட்டின் சக பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தேயிலை மரத்துக்கு உரமாகிக்கொண்டிருக்கிறார்கள்.
Thanks
“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…” – Maatram