இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த இன்றும் ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதிற்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து எழுதி வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் இரட்டை குழந்தை பிறப்புக்கு பிறகும் 13 முறை கைது செய்யப்பட்டார், இதில் 5 முறை சிறை தண்டனை அதாவது 31 ஆண்டுகால சிறை தண்டனையும் 154 கசையடியும் வழங்கப்பட்டது. இப்போதும் சிறையில் தான் இருக்கிறார். அது மட்டுமா சிறையில் அவருக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்தது, இவருக்கு மட்டுமல்ல பெண் கைதிகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் கட்டாய ஹிஜாப் நடைமுறையும் அதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஒன்று 22 வயதான மாசா அமினி என்ற பெண்ணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்தது ஈரான் காவல் துறைக்கு எதிராக. இதற்கு சிறையில் இருந்த படியே வழிகாட்டியாக ஏற்பாட்டாளராக இருந்தவர் நர்கீஸ் முகமதி. தன் சொந்த வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு இடையிலும் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான ஈரான் அரசை எதிர்த்து பெண் உரிமைக்காகவும், மனித சமத்துவதிற்காகவும் போராடி கொண்டே இருக்கும் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்குமான மகிழ்ச்சியான தருணமாகவே கருதப்படுகிறது.