நிறைவேற்றப்படாத ஆசைகள்
கொட்டும் அருவியிலும்
குளிர்ந்த தென்றலிலும்
பச்சை வயல்களிலும்
பனி செய்யும் பூமியிலும்
காலாற நான் நடந்தால்
கவலையெதுவும் தெரியாதேஎனக்கும் சிறகுகள் இருந்தால்
வானில் பறந்திடுவேன்
சூரியனைச் சுட்டெரிப்பேன்
சந்திரனில் தலை குளிப்பேன்
விண்மீன்களுடன் தேநீர் அருந்துவேன்
சந்தோசக் களிப்பில் நான் சிறகுகளை வெட்டிக்கொள்வேன்.
கல்லறைக்குள் என் சிதை
அடக்கப்பட்ட போது
உடைத்தெழந்து ஓடிவந்து
இவ் உலகை நான் ரசிப்பேன் – ஆவியாய்
என்னால் இயன்ற மட்டும்
எம் உறவைக் காத்திடுவேன் அப்படியே
இத்தனையும் கேட்டுவிட்டு
என் மனசு ஆசைகள் எதுவுமற்ற
தூய பெட்டகம் என்பேன்
எனக்குத் தெரியும் – இவையனைத்தும்
ஏட்டினிலே மட்டும் தான்.
போலி
வாழ்வின் நிரந்தரத்தைக் கூட
எம்மால் நிர்ணயித்துக் கொள்ள
முடியாத நிலையில் – ஏதோ
நம்பிக்கை என்னும் அத்திவாரத்திலே………
கோடி கோடியாகப் பணம் சேர்ப்பதும்
உறவுகளைச் சங்கடப்படுத்தி
அதில் மகிழ்ந்து கொள்வதும்,
நூறு வருடம் கூட வாழ்ந்து
கொள்ள முடியாத நாம்
ஆயிரம் வருடம் வாழ்ந்து
விடுவோம் என்ற பேராசையில்……
மனிதா!
நீ செய்யும் பாவங்கள் தான்
ஏராளம்
இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு – ஒரு நிமிடம்
உன் உறவுகளுக்காய் வாழ்ந்து பார்
உண்மையான சந்தோசத்தை
நீ உணர்வாய்.
( யாழினி யோகேஸ்வரன் கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமுலை மட்டக்களப்பு)
really nice.
Thankyou