இருப்பிடம் ஒருவரது அடிப்படை உரிமைதங்க இடம் கிடைப்பதில் அவதிப்படுவதில் மூன்றாம் பாலின சமூகத்தினர் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். 5 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அண்மையில் . மூன்றாம் பாலினத்தினர் தங்க இரவு நேர இருப்பிடம் ஒன்றை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது. இது பற்றி திருநங்கை சுமித்திரா கூறுகையில்,சென்னையில் தங்க இடமில்லாத திருநங்கைகள் இந்த இரவுநேர இருப்பிடத்தில் தங்கள் வீடு போல நினைத்து தங்கிக்கொள்ளலாம். அங்கே தங்குவதால் அவர்கள் பாதுகாப்பாகவும் இருப்பார்கள். மேலும் அந்த இடத்தில் திருநங்கைகளுக்கான திறன் பயிற்சிகளையும் வழங்க உள்ளனர். இதன் மூலம் அவர்களுக்குவேலைவாய்ப்பும் சுய சம்பாதியமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.