புலம்பெயர் நாட்டின் துருவ நட்சத்திரமாய் வலம் வரும் கவிதா லக்ஷிமியின் கலாசாதனா நடன பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் 22.01.2023 ஞாயிறு மாலை நோர்வே கலாசார கலையரங்கில் நடைபெற்றது
அரங்கம் 1.
பதினோராடல்:
தமிழ் கடவுள்கள் ஆடிய பதினொன்று வகையான நடனங்களைதெய்வம் பல்வேறு உருவம் கொண்டு ஆடியதாக , சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிற பதினோராடல் #கொடுகொட்டி#பாண்டரங்கம்#தோல்பாவைக்கூத்து#குடக்கூத்து#மல்லாடல்#அல்லியம்#குடைக்கூத்து#துடியாடல்#கடையம்#மரக்காலாட்டம்#பேடிக்கூத்து
பாடல்களுக்கு கலாசாதனா நடன பள்ளியின் மாணவர்கள் கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து, இடை, முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்களின் அபிநயங்கள் நிகரற்றவை .அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆடலுக்கு இசையும் ,ஒளியும் மிகவும் மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது.அரங்கம்
2.உயிர்மிகும் ஓவியங்கள் நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா இரவி வர்மா கவிதா லட்சமி ராஜா ரவி வர்மாவின் ஓவியத்துக்கு பின்நவீனத்துவ நாட்டிய அபிநயங்கள் , நவீன இலக்கியகலை, விமர்சன மரபு ரசனையை புதுக்கவிதை நாட்டிய மரபின்னுடாக ஓவியமரபை அரங்கத்தில் அழகா கொண்டுவந்தார் எப்போதும் கவிதா லக்ஷிமியின் புலனுகர்வுகளின் கற்பனை விரிந்து விரிந்து பெருகும்ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும்,பறந்து பறந்து சிகரம் தேடும் சுய பார்வை தன்னிறைவுடனும் . இலக்கிய ஞானத்துடன் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்…
இலக்கியம் வளர்த்த அழகுக் கலைகள் வாழ்த்துக்கள் வளர்க்க