இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கையில் குடியேற்றப்பட்டு இந்த ஆண்டுடோடு 200 வருடங்கள் ஆகின்ற போதிலும் அவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் இப்படியே உள்ளது.
“புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகல் மொழி இல்லை;
பழுதிலா அவர்க்கோர்
கல்லறை இல்லை,
புரிந்தவர் நினைவு நாள்
பகருவார் இல்லை,
ஊனையும் உடலையும்
ஊட்டி இம்மண்ணை
உயிர்த்தவர்க்கு! இங்கே
உளங்கசிந் தன்பும்
பூணுவாரில்லை – அவர்
புதை மேட்டிலோர் – கானகப்
பூவைப் பறித்துப்
போடுவாறில்லையே?
ஆழப் புதைத்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைத்த
அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்
என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்!!