மகாஸ்வேதா தேவியின் ‘சௌராஸ்கி மா’, ஜான் ஆப்ரஹாமின் ‘அம்மா அறியான்’ போன்ற தாய்களின் பயணம். இவர்கள் வெற்றி நோக்கியல்ல, நீதிக்கான பாதையில் மனத்திண்மையுடன் பயணித்தவர்கள். தமது மகன்மாரின் மரணங்களின் பின்னிருந்த காரணத்தைத் தேடி நடந்த இவர்கள் இந்தச் சமூக அமைப்பை, அதன் அதிகாரப் படிநிலைகளைத் தாமும் உணர்ந்து, நமக்கும் அதனை உணர்த்துபவர்கள். இதுவரை வெளியான பிற தலித் படங்களுக்கும் விட்னஸூக்கும் உள்ள பெரும் வித்தியாசம், நிலவிய சாசக சினிமா வடிவத்திற்குள் மாற்றுப் புனைவை முன்வைத்த