ஆண் பெண் உறவு… புதியமாதவி

ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..அரசு ஒப்பந்தங்களைவிட வலுவானது!இதில் பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டதில்லை. அப்புறம் என்னடா காதலும் கத்தரிக்காயும் !எல்லாம் கைகூடிய பிறகு மனசும் உடம்பும்அடங்கிவிடுகிறது ஆணுக்கு. அதிலும் குறிப்பாக அதிகாரபீடத்தின் ஆணுக்கு. கலிங்கத்து வெற்றிக்குப் பின் சக்கரவர்த்தி அசோகன் மனம் மாறிபவுத்தம் தழுவினார் என்பதை கற்பித்த நம் சரித்திரப்பாடம் எனோ அவர் பாட்டனார் சந்திரகுப்த மெளரியர் தன் 58வது வயதில் ஜைன துறவியானதை சொல்லவே இல்லை. அதுவும் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன். சாணக்கியரின் மாணவன், அலெக்சாண்டரின் படைத்தளபதி செலுக்கஸ் நிக்கோதரின் மகள் ஹெலினாவை திருமணம் செய்து கொண்டவன். அலெக்சாண்டரின் தளபதியை தோற்கடித்து அந்த ஒப்பந்தத்தில் இந்த விநோதமான திருமணமும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஹெலினாவை திருமணம் செய்யும்போது அவளுக்கு 15 அல்லது 16 வயது. சந்திரகுப்த அரசனுக்கு வயது 40 ஐ கடந்து விடுகிறது.பாவம் அந்தப்பெண் ஹெலினா…திருமண உறவைப் பாதுகாத்துக்கொள்ள அவள் இந்திய மொழியையும் இந்திய இசையையும் கற்றுக்கொள்கிறாள்.

அரசனுக்கு ஓர் ஆண்மகவையும் பெற்றெடுக்கிறாள்.. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அரசனுக்கு ஞானோதயம் வந்துவிடுகிறது. ஜைனத்துறவியாகிவிடுகிறான். இன்றைய கர் நாடக சரவணபெல்கோலாவில் ஜைனத்துறவியுடன் தங்கிவிடுகிறான். அரசன்,பேரரசன், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியவன், கிரேக்க மாசிடோனிய அழகியை மணந்தவன், சாணக்கியனின் அரசியலைக்கொண்டாடியவன். நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவன்…எல்லாத்தையும் விட்டுட்டு.. வந்துவிடுகிறான்.கடைசி இரண்டு ஆண்டுகள் சமணத்துறவிகளின் உண்ணா நோன்பிருந்து சமாதி நிலை அடைகிறான்.இத்தனையும் நடந்திருக்கிறது. காலம் கிமு. 322 – 299.சந்திரகுப்தர் ஹெலினா காதல்கதை ஜீலம் நதிக்கரையில் ஆரம்பித்ததாக கவித்துவமான காதல் கவிதைகள் நாடகங்கள் திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்கள் நிறைய வந்துவிட்டன.தங்கள் அரண்மனை பெண் வாரிசுகளை திருமணம் செய்து கொடுத்து இரண்டு பேரரசுகளின் உறவைத் தொடர்கதை ஆக்குவதை இவர்தான் தொடங்கிவைத்திருக்கிறார்.இதை தங்கள் அரசவை அதிகார உத்தியாக பயன்படுத்தி வெற்றி பெற்றவர்கள் சோழர்கள். குறிப்பாக, ராஜராஜ சோழ வம்சத்தினர்.எப்படி ஹெலினாவின் திருமண உறவு மூலம் பல இந்திய ஆண்கள் கிரேக்க பெண்களை திருமணம் செய்து கொண்ட கிரேக்க உறவு ஆரம்பித்ததோ அதுபோலவே தான் வென்ற இடங்களில் எல்லாம்சோழ வம்சத்து பெண்வழி உறவுகளை விட்டு வந்திருக்கிறோம். !!ஆண் பெண் உறவு என்பது வெறும் காதல் மட்டுமல்ல,குடும்பம் என்ற நிறுவன உறவு மட்டுமல்ல,அது அரசாங்க ஒப்பந்தமாக இன்றும் தொடர்கின்றது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண் எடுத்தும் கொடுத்தும் தங்கள் அதிகாரத்தைபரவலாக்கி கொண்டும் வலிமைப்படுத்திக்கொண்டும்இருப்பதற்க்கு பெயர் திருமண அரசியல்.!(படம் சந்திரகுப்தர் சமாதி)பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *